;
Athirady Tamil News

டயானாவிற்கு எதிரான குற்றப்பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வாசிப்பு

0

போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டைப் பெற்றதாகக் கூறி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை இன்று (9) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.

கொழும்பு மேல்ர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் வழக்கு அழைக்கப்பட்ட போதே இந்தக் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது. அதன் பின்னர் பிரதிவாதியான டயானா கமகே, தான் குற்றச்சாட்டுகளில் நிரபராதி என்று கூறினார்.

பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷனக ரணசிங்க, ஆரம்ப ஆட்சேபனைகளை எழுப்பி, இந்த வழக்கு அடிப்படையாகக் கொண்ட ஆவணம் 2003 இல் தயாரிக்கப்பட்டது என்று கூறினார்.

இருப்பினும், இந்த வழக்கு 2024 இல் தாக்கல் செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, அதன்படி 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால், குறித்த ஆவணம் தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்ய எந்த சட்ட அடிப்படையும் இல்லை என்று வாதிட்டார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி, இது குறித்த வழக்கு விசாரணையின் போது பரிசீலிக்கப்படும் என்று கூறினார். அதன்படி, வழக்கை மார்ச் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதி உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.