லாஸ் ஏஞ்சல்ஸில் வேகமாக பரவும் காட்டுத்தீ: 5 பேர் உயிரிழப்பு… அவசரநிலை பிரகடனம்!
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேகமாக பரவிவரும் காட்டுத்தீயால் 5 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் முதலில் பரவ ஆரம்பித்துள்ளது.
கடற்கரை பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், காட்டுத்தீ மலைப்பகுதிகளுக்கு வேகமாக பரவி வருகிறது.
இதனால் அங்கு கடும் புகைமூட்டம் நிலவி வருகிறது. காட்டுத்தீயில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள், வாகனங்கள் சோதமடைந்துள்ளன.
லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் வீடுகளில் வசித்து வந்த 26,000க்கும் மேற்பட்டோர் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 30,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
காட்டுத்தீயால் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, காற்றின் வேகம் குறையாததால் கலிபோர்னியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக ஆளுநர் கவின் நியூசம் தெரிவித்துள்ளார்.