;
Athirady Tamil News

பிரித்தானியாவில் உணவுப்பொருட்கள் விலை அதிகரிக்கப்போகிறது… எச்சரிக்கும் அமைப்பு

0

பிரித்தானியாவில் உணவுப்பொருட்கள் விலை அதிகரிக்க இருப்பதாக சில்லறை வர்த்தக அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது.

விலை அதிகரிக்க இருக்கும் உணவுப்பொருட்கள்
ஏற்கனவே மக்கள், தண்ணீர், மின்சாரம் முதலான அத்தியாவசிய விடயங்களுக்கான வரிகள் அதிகரிப்பால் அவதியுற்றுவரும் நிலையில், அவர்களுடைய சுமை வரும் மாதங்களில் அதிகரிக்க இருப்பதாக The British Retail Consortium (BRC) என்னும் வர்த்தக அமைப்பு எச்சரித்துள்ளது.

விரைவில், உணவுப்பொருட்களின் விலை சராசரியாக 4.2 சதவிகிதம் அதிகரிக்க இருப்பதாகத் தெரிவிக்கிறது அந்த அமைப்பு.

பிரித்தானிய சேன்ஸலரான ரேச்சல் ரீவ்ஸ் கடந்த அக்டோபரில் அறிவித்த பட்ஜெட்டில் கூறப்பட்ட நடவடிக்கைகள்தான் இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்கிறது BRC அமைப்பு.

பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட, பணி வழங்குவோர் தேசிய காப்பீடு அதிகரிப்பு, தேசிய வாழ்வாதார ஊதியம் மற்றும் பேக்கிங் வரிகள் என, 2025இல் சில்லறை வர்த்தகர்களுக்கு சுமார் 7 பில்லியன் பவுண்டுகள் செலவு அதிகரிக்க உள்ளது.

ஆக, அவற்றின் தாக்கம் காரணமாக உணவுப்பொருட்கள் விலை அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாது.

அதனால், இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில், உணவுப்பொருட்கள் விலை சராசரியாக 4.2 சதவிகிதம் அதிகரிக்கலாம் என வர்த்தகத் துறை அதிகாரிகள் கருதுவதாக BRC அமைப்பு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.