திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்… 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
ஹட்டன் – டிக்கோயா பகுதியில் திடீர் சுகவீனம் காரணமாக 22 மாணவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிக்கோயா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் 09 முதல் 10 வயதுக்குட்பட்ட மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த மாணவர்களுக்கு, வயிற்று வலி, மயக்க நிலை மற்றும் வாந்தி போன்ற நோய் நிலைமைகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உணவு விசமானமையால் அவர்களுக்கு இவ்வாறான நோய் நிலைமைகள் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போது மாணவர்கள் உடல்நிலை மோசமாக இல்லை என டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.