லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயை பயன்படுத்தி வீடுகளை சூறையாடும் கூட்டம்: பொலிசார் எச்சரிக்கை
எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் லாபம் என்றொரு பழமொழி உண்டு. அது அமெரிக்காவில் உண்மையாகியுள்ளது.
ஆம், காட்டுத்தீயால் ஏராளமான வீடுகள் எரிந்து நாசமாகிக்கொண்டிருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்திக்கொண்டு வீடுகளை சூறையாடிவருகிறது ஒரு கூட்டம்!
பொலிசார் எச்சரிக்கை
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை காட்டுத்தீ கபளீகரம் செய்துகொண்டிருக்கிறது. சுமார் 20,000 ஏக்கர் நிலத்தை காட்டுத்தீ ஆக்கிரமித்துள்ள நிலையில், சுமார் 5,000 கட்டிடங்கள் நாசமாகிவிட்டன.
இந்நிலையில், காட்டுத்தீயை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, சிலர் வீடுகளில் நுழைந்து திருடிவருகிறார்கள்.
வீடுகளை சூறையாடிய பலரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் ஷெரீஃபான ராபர்ட் லுனா என்பவர், அப்பகுதியில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே காட்டுத்தீயால் மக்கள் பேரிழப்புகளைச் சந்தித்துவரும் நிலையில், இப்படி ஒரு குற்றச்செயல் நடப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது என்று கூறியுள்ள ராபர்ட், வீடுகளை சூறையாடுவோருக்கு 1,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும், அவர்கள் சிறை செல்லவும் நேரிடலாம் என்றும் எச்சரித்துள்ளார்.