ஈரான் தூதருக்கு பிரான்ஸ் சம்மன்: ஈரானுக்கு பயணிக்கவேண்டாம் என்றும் எச்சரிக்கை
பிரான்சுக்கான ஈரான் தூதருக்கு அந்நாடு சம்மன் அனுப்பியுள்ளது. அத்துடன், பிரான்ஸ் நாட்டவர்கள் ஈரானுக்குப் பயணிக்கவேண்டாம் என்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஈரான் தூதருக்கு பிரான்ஸ் சம்மன்
பிரான்ஸ் நாட்டவர்களான Cecile Kohler என்பவரும் அவரது துணைவரான Jacques Paris என்பவரும், 2022ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஈரானில் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள்.
அதேபோல, Olivier என்னும் பிரான்ஸ் குடிமகனும் 2022 அக்டோபர் முதல் ஈரானில் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஈரானில் சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் நாட்டவர்களின் நிலைமை மோசமடைந்துவருவதாகவும், அவர்களுடைய நிலைமை, சர்வதேச சட்டத்தின்படி, சித்திரவதைக்கு இணையாக உள்ளதாகவும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரான Jean-Noel Barrot தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டவர்கள் ஈரானால் பிணைக்கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம், பிரான்ஸ் நாட்டவர்கள் சிறையிலடைக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் எதிர்ப்பு தெரிவிப்பதற்காக பிரான்சுக்கான ஈரான் தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
அத்துடன், பிரான்ஸ் மக்கள் யாரும் ஈரானுக்குப் பயணிக்கவேண்டாம் என்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.