;
Athirady Tamil News

ஜேர்மனியில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி நடத்தும் மாநாடு: சாலைகளில் குவிந்த மக்கள்

0

ஜேர்மன் மாகாணமொன்றில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி ஒன்று இரண்டு நாள் மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.

அந்த மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பொதுமக்கள் ஏராளமானோர் சாலைகளில் குவிந்துவருகிறார்கள்.

புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி நடத்தும் மாநாடு
ஜேர்மனியின் Saxony மாகாணத்திலுள்ள Riesa நகரில், புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது.

அடுத்த மாதம் 23ஆம் திகதி ஜேர்மனியில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு பகுதியாக இந்த மாநாடு நடைபெற உள்ளது.

தேர்தலில் AfD கட்சி இரண்டாவது பெரும் கட்சியாக வெற்றிபெறலாம் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், AfD கட்சி நடத்தும் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் ஏராளமானோர் Riesa நகரில் சாலைகளில் பேரணி நடத்துவதற்காக திரண்டுள்ளார்கள்.

இந்த பேரணிக்காக, 70 நகரங்களிலிருந்து, 100 பேருந்துகளில் மேலும் மக்கள் வர இருப்பதாக, பேரணியின் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மோதல்களைத் தவிர்ப்பதற்காக ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன்களுடன் பொலிசாரும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

சமீபத்தில், உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க், ஜேர்மனியைக் காப்பாற்ற AfD கட்சியால்தான் முடியும் என சமூக ஊடகமான எக்ஸில் தெரிவித்த விடயம், ஜேர்மன் அரசியலில் பரபரப்பை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.