நடுக்கடலில் பிரசவித்த அகதிப்பெண்: நெகிழவைக்கும் காட்சிகள்
சிறுபடகொன்றில் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் நடுக்கடலில் பிரசவித்த குழந்தையுடன் அமர்ந்திருக்கும் நெகிழவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
மொராக்கோ நாட்டிலிருந்து ஸ்பெயினுக்கு சொந்தமான கானரி தீவுகள் நோக்கி 60 புலம்பெயர்வோருடன் சிறுபடகொன்று சென்றுகொண்டிருக்கும்போது படகில் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
சிறிது நேரத்தில் தன் சக பயணிகள் உதவியுடன் அழகான பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார் அந்தப் பெண்.
நடுக்கடலில், பெற்றெடுத்த பிள்ளையுடன் அந்தப் பெண் படகில் அமர்ந்திருப்பதைக் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அந்தப் படகிலிருந்த 14 பெண்கள், 4 சிறுவர்கள் உட்பட 60 பேரையும் ஸ்பெயின் நாட்டு கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.
குழந்தை பெற்றெடுத்த அந்தப் பெண்ணும் குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இருவரும் நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.