வாகனங்களின் விலை தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்!
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை எதிர்காலத்தில் 50 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடுமென வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பித்ததன் பின்னர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கான வரி வீதம் வெளியிடப்பட்டுள்ளது.
இது விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்றையதினம் (12-01-2025) முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இதன்படி, உற்பத்தி செய்யப்பட்ட நாளில் இருந்து 10 வருடங்களுக்கு மேற்படாத வாகனங்களுக்கு 200 சதவீதம் மற்றும் 300 சதவீதம் வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சில வகையான வாகனங்களுக்கு அவற்றின் இயந்திர திறன் அடிப்படையாகக் கொண்டு வரிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த வரி வீதங்களின்படி, இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகளும் வெற் வரி நீங்கலாக, 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடுமென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.