நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் சத்தியப்பிரமாணம்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் 4 புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
இன்றையதினம் (12-01-2025) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.
இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஆர்.எம்.எஸ். ராஜகருணா, மேனகா விஜேசுந்தர, சம்பத் பி. அபேகோன் மற்றும் எம்.எஸ்.கே.பி. விஜேரத்ன ஆகியோரே புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்றனர்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டுள்ளார்.