;
Athirady Tamil News

யாழில். 200 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது

0

யாழ்ப்பாணத்தில் 200 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தேகத்திற்கு இடமான இரு இளைஞர்களை பொலிஸார் சோதனையிட்ட போது , அவர்களிடம் இருந்து 200 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.

அதனை அடுத்து இரு இளைஞர்களையும் கைது செய்த பொலிஸார் அவர்களை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.