லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத்தீ: தீயணைப்பு வீரர் வேடமிட்டு திருடிய 29 பேர் கைது!
லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதியில் தீயணைப்பு வீரர் வேடமிட்டு திருடிய 29 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுத் தீயில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர். தீயில் சுமார் 12,000-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்தன. மேலும் காட்டுத்தீயில் இருந்து 1 லட்சத்திற்கும் அதிகமான மக்களை வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தக் காட்டுத்தீயினால் 135 பில்லியன் முதல் 150 பில்லியன் டாலர் வரை சேதமடைந்துள்ளது.
லாஸ் ஏஞ்சலீஸ் காவல்துறையினர் தீ விபத்துக்குள்ளான பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தீயணைப்பு வீரர் வேடமிட்டு வீடுகளில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த போது ஒருவரைக் கைது செய்தனர்.
காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளில் கொள்ளை தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து லாஸ் ஏஞ்சலீஸ் ஷெரிப் ராபர்ட் லூனா கூறுகையில், 29 பேர் கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தினார். இவர்களில் 25 பேர் ஈட்டன் பகுதியிலும் 4 பேர் பாலிசேட்ஸ் பகுதியிலும் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.