அமெரிக்க காட்டுத்தீயில் பிரபல நடிகையும் குழந்தை நட்சத்திரமும் பலி
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவிவரும் காட்டுத்தீயில், பிரபல நடிகை ஒருவரும், பிரபல குழந்தை நட்சத்திரமாக இருந்த ஒருவரும் பரிதாபமாக பலியாகியுள்ளார்கள்.
அமெரிக்க காட்டுத்தீயில் பலியான நடிகர்
பிரித்தானியாவில் பிறந்த அவுஸ்திரேலிய குடிமகனான ரோரி (Rory Sykes, 32), Malibu என்னுமிடத்திலுள்ள வீட்டில் வாழ்ந்துவந்த நிலையில், இம்மாதம் 8ஆம் திகதி, அவர் வாழ்ந்துவந்த வீட்டின் கூரையில் தீப்பற்றியுள்ளது.
காட்டுத்தீயால் ஏற்பட்ட கார்பன் மோனாக்சைடு விஷத்தால் ரோரி பலியானதாக அவரது தாயார் ஷெல்லி (Shelley Sykes) சமூக ஊடகமான எக்ஸில் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகையும் பலி
உலகம் முழுவதும் பிரபலமான தி டென் கமாண்ட்மென்ட்ஸ் திரைப்படத்தில் நடித்தவரான டாலிஸ் (Dalyce Curry, 95), கலிபோர்னியாவிலுள்ள Altadena என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த நிலையில், அவரது வீடு முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளது.
டாலிஸ் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தது, இம்மாதம் 12ஆம் திகதி, நீதிமன்ற அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.