கொழும்பு வாகன நிறுத்துமிடங்கள்! 27 மில்லியன் ரூபாய் நிலுவைத் தொகை
கொழும்பு மாநகர சபையின் கீழ் வாகன நிறுத்துமிடங்களை நிர்வகிக்கும் 26 நிறுவனங்கள் மீது, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகம், விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த நிறுவனங்கள் கொழும்பு மாநகர சபைக்கு கிட்டத்தட்ட 27 மில்லியன் ரூபாய்கள் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியுள்ளன.
முழுமையான விசாரணை
இது தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், லஞ்சம் மற்றும் ஊழல் ஆணையகம் முழுமையான விசாரணையை நடத்த முடிவு செய்துள்ளது.
முறைப்பாட்டின்படி, 26 நிறுவனங்களால், 2023ஆம் ஆண்டில், கொழும்பு மாநகரசபைக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடங்களுக்கு 204,164,110 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நிலுவைத் தொகை இருந்தபோதிலும், அந்த நிறுவனங்கள் 2024 ஆம் ஆண்டில் மீண்டும் வாகன நிறுத்துமிடங்களின் நிர்வாகத்தைப் பெற்றுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2024 ஏப்ரல் இறுதிக்குள் அந்த நிறுவனங்கள், மாநகரசபைக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை 264,859,471 ரூபாய்களாகும் என்று என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.