;
Athirady Tamil News

கலிபோர்னியாவில் மீண்டும் அதி தீவிர அச்சம்… காற்று தீவிரமடைய வாய்ப்பு

0

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வரும் காட்டுத் தீயைத் தூண்டிய காற்று மேலும் தீவிரமடையும் என்று முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் அதிகரிக்கும்

காட்டுத் தீக்கு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 என அதிகரித்துள்ளது. காற்றின் வேகம் அதிகரிக்கும் என்ற முன்னறிவிப்பால், ஏற்கெனவே எரிந்து வரும் நான்கு காட்டுத் தீயை மேலும் தீவிரமாக்கும் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

புதன்கிழமைக்கு பின்ன்னர் காற்றின் வேகம் குறையும் என்ற நம்பிக்கையால் தீயின் தீவிரம் குறையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இருப்பினும், தீயைக் கட்டுப்படுத்த போராடும் தீயணைப்பு வீரர்களின் பணிகளைக் குறைக்க மழையின் தயவை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதனிடையே, காட்டுத் தீக்கு 25-வது நபர் மரணமடைந்துள்ளதை லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட மருத்துவ அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். மேலும் 13 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மரணமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நகரின் வடக்கில் உருவான ஈட்டன் காட்டுத் தீ பாதிப்பில் சிக்கியவர்கள், இந்தக் காட்டுத் தீ 14,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை ஏரித்துள்ளது. இதில் 35 சதவீதம் தீ, தீயணைப்பு வீரர்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் உருவாகலாம்
நகரின் மேற்கு பகுதியில் உருவான பெரிய அளவிலான பாலிசேட்ஸ் காட்டுத் தீக்கு 23,000-க்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. இதில் 18 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற இரண்டு காட்டுத் தீ இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில், ஈட்டன் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் குடியிருப்புகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதன்கிழமை காற்று தீவிர பாதிப்புக்கு பின்பு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் காற்றின் தாக்கம் குறையும் என்றாலும், மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், காட்டுத் தீயை உண்டாக்கியதாக கூறப்படும் சாண்டா அன்னா காற்று ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் உருவாகலாம் என்ற தகவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, 88,000 பேர் வெளியேற்ற உத்தரவுகளின் கீழ் இருந்தனர். தீ பரவினால் மேலும் 84,000 பேருக்கு புதிய வெளியேற்ற உத்தரவு வழங்கப்படும் அபாயம் உள்ளது என்றே கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.