;
Athirady Tamil News

ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை!

0

கிழக்கு மாகாண ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்புப் போட்டி பரீட்சைக்கான நேர்முகப்பரீட்சைகளை இன்று (16) முதல் 17 மற்றும் 18ம் திகதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மூன்று நேர்முகப்பரீட்சை சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (15) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள் ராஜ் ஆகியோரும் இதில் பங்கு பற்றினர்.

நிகழ்வில் பேசிய ஆளுநர், எந்தவொரு தரப்பினருக்கும் அநீதி ஏற்படாத வகையில் ஆட்சேர்ப்பு செயல்முறையை நடாத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.