;
Athirady Tamil News

Bank Account -ல் தவறுதலாக டெபாசிட் ஆன ரூ.16 லட்சத்தை திருப்பித் தர மறுத்த விவசாயி

0

விவசாயி ஒருவரின் வங்கி கணக்கில் தவறுதலாக 16 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்ட சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

ரூ.16 லட்சம் வரவு
ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் ஒரு விவசாயியின் வங்கிக் கணக்கில் தவறான அடையாளத்தால் ரூ.16 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், டெபாசிட் செய்த தொகையை அவர் திருப்பித் தர மறுத்ததால் காவல்துறையின் உதவியை வங்கி நாடியுள்ள்ளது.

இந்திய மாநிலமான ராஜஸ்தான், அஜ்மீர் மாவட்டம், கிஷன்கர் பகுதியில் உள்ள சோட்டா லம்பா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கனராம் ஜாட். இவரின் பாங்க் ஆஃப் பரோடா வங்கிக்கணக்கில் ரூ.16 லட்சம் தொகை தவறாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயி தனது தனிப்பட்ட கடனை அடைக்க ரூ.15 லட்சத்தை பயன்படுத்தியுள்ளார். இந்த பணமானது நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய பயிர்க் காப்பீட்டுத் தவணையாகும்.

இந்த தொகை, டிசம்பர் 31-ம் திகதி ஜாட்டின் கணக்கில் தவறுதலாக மாற்றப்பட்டது. இந்த தவறு வங்கியாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர், பாங்க் ஆப் பரோடா மேலாளர் ஜிதேந்திர தாக்குர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில், “டிசம்பர் 31-ம் திகதி அன்று விவசாயி கனராம் ஜாட் வங்கி கணக்கில் ரூ.16 லட்சம் தவறாகப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொகை நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பயிர் காப்பீட்டு பிரீமியம் ஆகும். ஆனால் இது தவறுதலாக ஜாட்டின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது.

ஆரம்பத்தில் எங்கள் ஊழியர்களுக்கு இந்த தவறு தெரியவில்லை. ஜனவரி 2 முதல் 4ம் தேதி வரை தலா ரூ.5 லட்சம் என மூன்று தனித்தனி பரிவர்த்தனைகளைச் செய்து தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ரூ.15 லட்சத்தை விவசாயி எடுத்துள்ளார்.

நாங்கள் விவசாயியைத் தொடர்பு கொண்டு பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டோம். ஆனால் அவர் அதை திருப்பி தர மறுத்துவிட்டார்.

கனராம் ஜாட்டின் கிசான் கிரெடிட் கார்டு மற்றும் 16 பிகாஸ் நிலத்தின் ஆவணங்கள் வங்கியில் உள்ளன. அவர் பணத்தை திருப்பித் தராவிட்டால், அவரது நிலத்தை ஏலம் விடுவதன் மூலம் ரூ.16 லட்சத்தை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.