;
Athirady Tamil News

கோடீஸ்வரர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம்… ஆனால்: எலான் மஸ்குக்கு ஜேர்மன் சேன்ஸலர் பதிலடி

0

ஜேர்மனியையும் தன்னையும் மோசமாக விமர்சித்துவரும் உலக கோடீஸ்வரரான எலான் மஸ்குக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ்.

உலக அரசியல்வாதி எலான் மஸ்க்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, ட்ரம்புக்கு தனது பணத்தை வாரி இறைந்த உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க், ட்ரம்ப் வெற்றி பெற்றதும் உலக அரசியல்வாதியாகிவிட்டார்.

உலக நாடுகள் பலவற்றையும், அவற்றின் தலைவர்களையும் விமர்சித்து மற்ற நாடுகளில் அரசியலில் தேவையில்லாமல் தலையிட்டுவருகிறார் எலான் மஸ்க்.

ஜேர்மனியைக் காப்பாற்ற வலதுசாரிக் கட்சியான AfD கட்சியால்தான் முடியும் என்றும், ஜேர்மன் சேன்ஸலரான ஷோல்ஸ் உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும், அவர் திறமையில்லாத முட்டாள்’ என்றும் விமர்சித்திருந்தார் எலான் மஸ்க்.

எலான் மஸ்குக்கு சரியான பதிலடி
இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றுவரும் உலக பொருளாதார கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பேசிய ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், எலான் மஸ்குக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், ஐரோப்பாவிலும் ஜேர்மனியிலும் பேச்சு சுதந்திரம் உள்ளது.

கோடீஸ்வரர்கள் கூட தாங்கள் விரும்புவதைப் பேசலாம். ஆனால், அவர்கள் வலதுசாரி தீவிரக் கருத்துக்களுக்கு ஆதரவாகப் பேசினால், அதை எங்களால் ஏற்றுக்கொள்ள இயலாது என்று கூறியுள்ளார்.

ஓலாஃப் ஷோல்ஸ் இந்த விடயங்களைப் பேசுவதைக் காட்டும் வீடியோ ஒன்றை ஒருவர் எக்ஸில் வெளியிட, ஓலாஃப், தான் பேசியதற்காக வருத்தப்படவேண்டுமென மீண்டும் விமர்சித்துள்ளார் எலான் மஸ்க்.

அதையும், வெள்ளையர்கள் அடிக்கடி பயன்படுத்தும் மோசமான ஒரு வார்த்தையுடன் சேர்த்து பயன்படுத்தியுள்ளார் எலான் மஸ்க்.

விடயம் என்னவென்றால், ஆங்கிலத்தில் அது மோசமான வார்த்தை என்றாலும், ஜேர்மன் மொழியில் அப்படி ஒரு வார்த்தையோ, அதற்கு மோசமான அர்த்தமோ கிடையாது என்பதுதான் வேடிக்கை!

You might also like

Leave A Reply

Your email address will not be published.