;
Athirady Tamil News

பிகேகே துருக்கி மோதல் – அப்துல்லா ஒகாலன் – எங்களிற்கு தெரிந்திருக்கவேண்டிய விடயங்கள் என்ன?

0

By Ben Hubbard

newyork times

முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் உலகின் பலம் வாய்ந்த நாடுகள் குர்திஸ் இனத்தவர்களிற்கான நாடு குறித்து வாக்குறுதிகளை வழங்கின.ஆனால் இன்றுவரை அது வெறும் வாக்குறுதியாகவே உள்ளது.

———-

பல தசாப்தகால போராட்டத்தின் பின்னர் குர்திஸ் போராளிகள் அமைப்பு யுத்தநிறுத்தத்தை அறிவித்துள்ளது.

சிறையில் உள்ள அதன் தலைவர் அப்துல்லாஒகலான் ஆயுதங்களை கைவிடுமாறுதனது அமைப்பினரை கேட்டுக்கொண்டார்.

—–

சுமார் 40தசாப்தங்களாக குர்திஸ்தான் தொழில்கட்சியான பிகேகேவுடன் துருக்கி மோதலில் ஈடுபட்டிருந்தது.

பிகேகே துருக்கியின் குர்திஸ்
சிறுபான்மைஇனத்தவர்களிற்கு அதிகளவு உரிமைகளை கோரி போராடும் அமைப்பு.

தசாப்தகால மோதலில் இதுவரை 40000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.பிகேகே அமைப்பு பொதுமக்கள் மற்றும் துருக்கியின் இராணுவஇலக்குகள் மீது மேற்கொண்ட தாக்குதல்காரணமாகவும், குர்திஸ் போராளிகள் மற்றும் அவர்களிற்கு ஆதரவளிக்கும் குர்திஸ் மக்கள் மீதான துருக்கியின் இராணுவதாக்குதல்கள் காரணமாகவும் இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

துருக்கியும் அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் பிகேகே அமைப்பை பயங்கரவாத அமைப்பாக கருதுகின்றன.

தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ள அந்த அமைப்பின் தலைவர் அப்துல்லா ஒகலான் தனது போராளிகளை ஆயுதங்களை கைவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்,இதனைதொடர்ந்து அந்த அமைப்பு யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

எனினும் 40வருடகால யுத்தம் முடிவிற்கு வருமா என்பது உறுதியாக தெரிவிக்கப்பட முடியாத விடயமாக காணப்படுகின்றது, யுத்த நிறுத்தத்திற்கு பதில் துருக்கி அரசாங்கம் போராளிகளிற்கு எதனை வழங்குவதற்கு முன்வந்துள்ளது என்பதும் தெளிவாக தெரியவில்லை.

பிகேகே குறித்தும் துருக்கிக்கு எதிரான அதன் போராட்டம் குறித்தும் அறிந்துகொள்ளவேண்டிய விடயங்கள்

பிகேகேயின் பின்னணி என்ன?

இந்த அமைப்பு துருக்கிக்கு எதிராக 1980களின் பிற்பகுதியில் போரிட ஆரம்பித்தது,துருக்கியின் சனத்தொகையில் 15 வீதத்திற்கும்அதிகமானவர்களாக உள்ள குர்திஸ் மக்களிற்கு சுதந்திரத்தை கோரியது.

துருக்கியின் கிழக்கு தெற்கு மலைப்பகுதியிலிருந்து தங்கள் தாக்குதல்களை பிகேகே போராளிகள் ஆரம்பித்தனர்.அவர்கள் துருக்கியின் தளங்கள் பொலிஸ்நிலையங்கள் போன்றவற்றை தாக்கினர் . துருக்கி அரசாங்கம் கடுமையான பதில் தாக்குதலை மேற்கொண்டது, இதன் காரணமாக மோதல்கள் வன்முறைகள் நாட்டின் ஏனைய பகுதிகளிற்கும் பரவின.

பிகேகே அமைப்பு துருக்கியின் பல நகரங்கள் மீது குண்டுதாக்குதல்களை மேற்கொண்டது இதனால் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர்.

எனினும் கடந்த ஒரு தசாப்தகாலமாக துருக்கி இராணுவம் துருக்கியின் தென்கிழக்கில் உள்ளமுக்கிய குர்திஸ் நகரங்களில் இருந்து பிகேகே அமைப்பினரை பின்வாங்க செய்துள்ளது.

ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி பிகேகே அமைப்பின் தலைவர்களையும் போராளிகளையும் கொலைசெய்துள்ளது.

இதன் காரணமாக தாக்குதல்களை மேற்கொள்வதற்கான போராளிகளின் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த பல வருடங்களாக இந்த மோதல் மிகப்பெரிய வன்முறையாக மாறாத ஒன்றாக காணப்படுகின்றது,எனினும் பிகேகே அவ்வப்போது மேற்கொண்ட தாக்குதல்கள் பரந்துபட்ட யுத்தம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன.

கடந்த வருடம் ஆயுதமேந்திய சிறிய எண்ணிக்கையிலான போராளிகள் துருக்கியின் விமானதயாரிப்பு நிறுவனமொன்றிற்குள் நுழைந்து தாக்குதலை மேற்கொண்டதில் ஐவர் கொல்லப்பட்டனர்.

குர்திஸ் இனத்தவர்கள்

40 மில்லியன் சனத்தொகையை கொண்ட இனக்குழுவே குர்திஸ்கள்.அவர்களின் எண்ணிக்கை குறித்து பல்வேறு புள்ளிவிபரங்கள் உள்ளன. ஈரான் ஈரான் சிரியா துருக்கியில் இவர்கள் வாழ்கின்றனர்.

அவர்கள் குர்திஸ்மொழியின் பலபேச்சுவழக்குகளை பேசுகின்றனர். அவர்களின் மொழி அராபிய,துருக்கி மொழிகளுடன் நேரடியாக தொடர்பில்லாதது.

மேலும் இவர்கள் சுனி முஸ்லீம்கள்.

முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் உலகின் பலம் வாய்ந்த நாடுகள் குர்திஸ் இனத்தவர்களிற்கான நாடு குறித்து வாக்குறுதிகளை வழங்கின.ஆனால் இன்றுவரை அது வெறும் வாக்குறுதியாகவே உள்ளது.

அதன் பின்னர் பல நாடுகளில் குர்திஸ் மக்களின் கிளர்ச்சிகளும் இடம்பெற்றன.

குர்திஸ் மக்கள் தங்களின் மொழி கலாச்சாரம் தொடர்பில் அரசஒடுக்குமுறைகளை அனுபவித்துள்ளனர்.

சிரியாவில் குர்திஸ் இனத்தவர்கள்

2014 இல்சிரியாவின் வடக்கில் ஐஎஸ் அமைப்பு தீவிரமாக செயற்பட்டவேளை குர்திஸ் மக்கள் அங்கிருந்து தப்பியோடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். எல்லையை கடந்து துருக்கிக்குள் நுழைந்தஇவர்கள் அகதிமுகாமகளை சென்றடைந்தனர்.

சிரியாவில் குர்திஸ் இனத்தவர்களின் தலைமையிலான சிரிய ஜனநாயக படையணியினர் நாட்டின் வடகிழக்கு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர்,இவர்களின் வேர்கள் பிNகேயுடன் தொடர்புபட்டவை இவர்கள் பிகேகே தலைவர் அப்துல்லா ஒகலானின் கொள்கையை பின்பற்றுகின்றனர்.

அவர்களிற்கு அமெரிக்கா நீண்டகாலமாக ஆதரவளித்து வந்தது,ஐஎஸ் அமைப்பினை தோற்கடிப்பதில்இவர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கினார்கள்.

எனினும் சிரியாவின் சர்வாதிகாரி பசார்அல் அசாத்தின் வீழ்ச்சி இவர்களின் எதிர்காலம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.இவர்கள் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களுடன் மோதுவதுடன் டமஸ்கஸில் உள்ள சிரியாவின்புதிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.