ட்ரம்பின் வரி விதிப்புகளால் ஜேர்மனிக்கு ஏற்படவிருக்கும் பாதிப்பு

தனது வரி விதிப்புகள் மூலம் உலகையே கதிகலங்கச் செய்துகொண்டிருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப்.
கனடா, மெக்சிகோ, பிரித்தானியா முதலான நாடுகள், ட்ரம்பின் வரி விதிப்பால் பரபரப்பாகிவரும் நிலையில், தற்போது, ஜேர்மனியிலும் ட்ரம்பின் வரி விதிப்புகள் குறித்த செய்திகள் கவனம் ஈர்த்துவருகின்றன.
ஜேர்மனிக்கு ஏற்படவிருக்கும் பாதிப்பு
ட்ரம்பின் வரி விதிப்புகளால் ஜேர்மன் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என ஜேர்மனியின் மத்திய வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்கா வரிகள் விதிக்குமானால், அது ஜேர்மனியில் மீண்டும் ஒரு பொருளாதார மந்த நிலைக்கு வழிவகுக்கும் என்கிறார் ஜேர்மனி மத்திய வங்கியின் தலைவரான Joachim Nagel.
ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜேர்மன் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துவரும் நிலையில், தற்போது வரிகளும் விதிக்கப்படுமானால், இந்த ஆண்டிலும் ஜேர்மனியில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார் Nagel.