யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்திய திருக்குறள் தேர்வு – யாழ் இந்து மகளிர் கல்லூரி முதலிடம்

யாழ்ப்பாண தமிழ்ச் சங்கம் நல்லை ஆதீனத்தில் 13.03.2025 வியாழன் மாலை முன்னெடுத்த திருவள்ளுவர் விழாவின் பொழுது பாடசாலைகளில் உயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்களிடையே திருக்குறள் தேர்வு நடத்தப்பட்டது
அணிக்கு ஐந்து பேர் கொண்ட குழுவாக பத்து பிரபல பாடசாலைகளின் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர்
இதில் முதலாம் இடத்தை யாழ் இந்து மகளிர் கல்லூரி அணியும் இரண்டாம் இடத்தை பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி அணியும் பெற்றுக் கொண்டன
போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் தமிழ்ச் சங்க பெருந் தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைவர் பேராசிரியர் தி. வேல்நம்பி செயலாளர் ச. லலீசன் உள்ளிட்டோரால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.