கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் திருவள்ளுவர் குருபூசை அனுட்டிக்கப்பட்டது

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் திருவள்ளுவர் குருபூசை அனுட்டிக்கப்பட்டது. இன்று(14.03.2025) வெள்ளிக்கிழமை மாசி உத்திர நட்சத்திரத்தில் இக்குருபூசை இடம் பெறுவதை அடிப்படையாகக் கொண்டு விரிவுரையாளர்களால் இக்குருபூசை மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்வின் போது கலாசாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் மற்றும் தமிழ் மன்றக் காப்பாளர் கவிஞர் விரிவுரையாளர் வேல் நந்தகுமார் ஆகியோர் மலர் மாலை சூட்டினர் விரிவுரையாளர்கள் மலர் வணக்கம் செய்தனர்.
கலாசாலையில் தினந்தோறும் காலை வழிபாட்டின் போது திருக்குறள் கடவுள் வாழ்த்து பாடல்கள் ஓதப்படுவது நீண்ட கால வழமையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.