;
Athirady Tamil News

ஊற வைத்த பாதாம், வால்நட்…. மூளை ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது?

0

மூளையை ஆரோக்கியமாக வைப்பதற்கு ஊற வைத்த பாதாம் நல்லதா? அல்லது வால்நட் நல்லதா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாகவே ஊற வைத்த பாதாம் மற்றும் வால்நட் சாப்பிடுவது மூளைக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கின்றது.

ஆதலால் பலரும் இதனை ஊற வைத்து சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் இந்த இரண்டில் எவை அதிகமாக பலனை தருகின்றது என்ற கேள்வியும் சிலரிடம் எழுகின்றது. இதற்கான விரிவாக தகவலையே இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஊற வைத்த பாதாம்
பாதாமில் வைட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் அதிகமாக உள்ளது. இவை அறிவாற்றல் குறைபாட்டை தடுக்க உதவுவதுடன், நீண்ட காலம் நினைவாற்றல் மோசமடையாமலும் தடுக்கின்றது.

இதில் இருக்கும் வைட்டமின் ஈ அல்சைமர், டிமென்ஷியா போன்ற பிரச்சனைகள் உருவாகும் அபாயத்தை குறைக்க உதவுவதுடன், இதிலுள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்திறமை மேம்படுததுகின்றது.

பாதாமை அப்படியே சாப்பிடாமல், ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் ஊட்டச்சத்துக்களை இரண்டு மடங்காக பெற முடியும்.

வால்நட்
பாதாமை போன்றே வால்நட்டிலும் ஆரோக்கியமான கொழுப்பு, வைட்டமின் ஈ சத்துக்கள் உள்ளது. ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்து காணப்படுகின்றது.

மேலும் இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுவதுடன், மூளையில் ஏற்படும் வீக்கம், வயதான செயல்முறை, அலசைமர், டிமென்ஷியா போன்ற வயதான தொடர்பான பிரச்சனைகளை தடுக்க உதவும்.

வால்நட் சாப்பிடுவதன் மூலம் நினைவாற்றல் மற்றும் கற்றல் திறன் மேம்படும். இது தவிர பதட்ட மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை குறைக்கும்.

ஊறவைத்த பாதாம் Vs வால்நட் : எது நல்லது?
மூளை ஆரோக்கியமானாலும் சரி, உடல் ஆரோக்கியம் ஆனாலும் சரி இவை இரண்டிற்கும் வால்நட் மற்றும் ஊறவைத்த பாதாம் மிகவும் நன்மை பயக்கும்.

இவற்றில் ஒன்றை அதிகமாக சாப்பிட்டால் அதிக நன்மையினை பெறலாம் என்று நினைப்பது தவறாகும். இரண்டையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எனவே 4 பாதாமுடன், 2 வால்நட் சேர்த்து சாப்பிடலாம்.. இதனால் இவை இரண்டின் பலனும் உங்களுக்கு கிடைக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.