அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 125 வீதவரி; புதிய அறிவிப்பை வெளியிட்ட சீனா

அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 125 வீதவரியை விதிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது.
அமெரிக்காவிற்கு ஏற்றுமதிசெய்யப்படும் சில சீனபொருட்களிற்கு டிரம்ப் நிர்வாகம் 145 வீத வரியை விதித்துள்ள நிலையிலேயே சீனா இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா எதிர்காலத்தில் விதிக்கவுள்ள வரிகளிற்கு பதிலளிக்கப்போவதில்லை என சீனா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா விதித்த அசாதாரணமான வரிகள் சர்வதேச மற்றும் பொருளாதார விதிமுறைகளை அடிப்படை பொருளாதார சட்டங்களை மீறும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள சீனா இது ஒரு தலைப்பட்சமான மிரட்டும் வற்புறுத்தும் தன்மையை கொண்டது எனவும் தெரிவித்துள்ளது.