ஆற்றில் விழுந்து மூழ்கிய ஹெலிகாப்டர் ; மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் பலி

அமெரிக்காவில் நியூயோர்க்கில் உள்ள ஹட்சன் ஆற்றில் சுற்றுலாப் பயணிகளின் குடும்பத்தை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹெலிகொப்டரில் பயணித்த ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஸ்பெயினைச் சேர்ந்தது என்றும் ஆறாவது நபர் விமானி என்றும் நியூயோர்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் எனவும் தெரியவந்துள்ளது.
விமான விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.