;
Athirady Tamil News

வழுக்கை தலையில் முடி வளரும் – லோஷன் வாங்கிய 500 ஆண்களுக்கு நேர்ந்த கதி

0

வழுக்கை தலையில் முடி வளர லோஷன் வாங்கி ஆண்கள் பாதிப்படைந்துள்ளனர்.

முடிவளர லோஷன்

தெலங்கானா, ஐதராபாத் சண்டுலால் பகுதியில் பிக்பாஸ் என்ற சலூன் கடை உள்ளது. இங்கு வழுக்கை தலையில் மீண்டும் முடி வளர வைக்க லோஷன் கொடுப்பதாக தகவல் பரவியுள்ளது.

இதுகுறித்து அறிந்த 500க்கும் மேற்பட்ட ஆண்கள் அந்த கடையில் குவிந்துள்ளனர். உடனே, கடைக்காரரான வகில் சல்மானி என்பவர் கடைக்கு வந்தவர்களின் தலையில் முழுமையாக முடியை ஷேவ் செய்துவிட்டு, வெள்ளை நிற லோஷனை தடவியுள்ளார்.

ஆண்கள் பாதிப்பு
மேலும், 3 நாட்களுக்கு சோப், ஷாம்பூ உள்ளிட்டவற்றை பயன்படுத்த கூடாது என்றும் வாடிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதன்படி அனைவரும் நடந்துள்ளனர். ஆனால் அதில் பலருக்கு கடுமையான தலைவலி போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், சலூன் கடைக்காரர் தலைமறைவாகியுள்ளார்.

தற்போது இதுதொடர்பாக புகாரளிக்கப்பட்ட நிலையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.