;
Athirady Tamil News

398 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

நாட்டில் இன்றைய தினம் மேலும் 398 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் வெட்டு!!

கொழும்பின் பல பகுதிகளுக்கு 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. குறித்த பிரதேசங்களுக்கு இன்று (26) இரவு 9 மணி முதல் நீர் விநியோகம் தடை…

வவுனியாவில் மின் கம்பத்தை மோதித்தள்ளிய கார்: ஒருவர் காயம்!! (படங்கள்)

வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் மின்சாரக் கம்பத்துடன் மோதி கார் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று (26.12) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

கௌதாரி முனைக்குச் சென்றவர்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் பலி!!

யாழ்ப்பாணத்திலிருந்து வாகனத்திலும் படகிலும் கிளிநொச்சியின் கௌதாரி முனைக்குச் சென்றவர்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஆனைக்கோட்டையிலிருந்து வாகனம் ஒன்றில்…

செட்டிகுளம் – தம்பனைகுளத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!! (படங்கள்)

செட்டிகுளம், கலாசியம்பலாவ தம்பனைக்குளத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று (26.12) மாலை குளத்திற்கு சென்றவர்கள் குளத்தில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்து பொலிசாருக்கு…

யாழ்ப்பாணம் – இளவாலை சந்தியில் உள்ள காணிக் கிணறு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக…

யாழ்ப்பாணம் - இளவாலை சந்தியில் உள்ள காணிக் கிணறு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 32 வயதுடைய கிளரின் கொல்வின் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் சிலருடன் இணைந்து விருந்தில் கலந்துகொண்டிருந்த…

யாழ். மாவட்ட செயலகத்தில் சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு!!…

சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இன்று காலை 9 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ…

திருமணங்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகள் !!

வெளிநாட்டவர்களை பதிவு திருமணம் செய்துகொள்ளும் இலங்கையர்கள், பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து “பாதுகாப்பு தடைநீக்கல் அறிக்கை" பெற்றுக்கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்களை திருமணம் செய்துகொள்ளப்போகும் இலங்கையர்களின் திருமணம்…

சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 17 வது ஆண்டு நினைவு!! (படங்கள் வீடியோ)

சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 17 வது ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாணம்- வடமராட்சியில் அனுஷ்டிக்கப்பட்டது. உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் இன்று காலை வடமராட்சி - உடுத்துறை நினைவாலயத்தில் இடம்பெற்ற…

வெட்டுக்காயங்களுடன் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இன்று (26) மதியம் குடும்பஸ்தர் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரசாக்…

யாழ். பல்கலைக்கழகத்தில் ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி!! (படங்கள்…

கடந்த 2004ம் ஆண்டு இதுபோன்ற ஒரு நாளில் ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

மலேசியா கனமழை – வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு…!!

பருவநிலை மாற்றத்தால் பல்வேறு நாடுகளில் மழைப்பொழிவு காலம்தவறி வழக்கத்தை விட அதிக அளவில் மழை கொட்டுகிறது. இதன் விளைவாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் வரலாறு காணாத அளவில் கொட்டித்…

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி…

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களிற்கான 17 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு சுனாமி நினைவுத்தூபி முன்பாக இன்று (26.12.2021) காலை இடம்பெற்றது. பூந்தோட்டம் லயன்ஸ்…

மாடு புல் தின்றதால் 5 பேர் கைது!!

அளுத்கம 17வது கட்டை பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புல் தின்ற சம்பவம் தொடர்பாக 600 மாடுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் 5 கால்நடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. புத்தளம் வனப்பாதுகாப்பு பிரிவினரால்…

அரியாலை நெளுக்குளம் பகுதியில் துப்பாக்கிச் சூடு!!

அரியாலை நெளுக்குளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டோரை சிறப்பு அதிரடிப்படையினர் மறித்த போதும் நிறுத்தாமல் சென்றதனால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்ததுடன்…

தெற்காசிய நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசியை அறிமுகப்படுத்தும் முதல் நாடு…!!

உலகை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல நாடுகள் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி உள்ளன. தெற்காசிய நாடுகளில் ஒன்றாக திகழும் பூடானில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் தடம் பதிக்கவில்லை. இருந்தாலும் முன் எச்சரிக்கை…

நீட் தேர்வில் வென்றும் அரசு மருத்துவ கல்லூரியில் சேர முடியாததால் மாணவி தற்கொலை…!!!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு ஊராட்சி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மனைவி நாகூர் மாலா. இந்த தம்பதியினரின் மகள் துளசி(வயது 18) இவர் கடந்த 2020-ம் ஆண்டு பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்…

இங்கிலாந்தில் 10-ல் ஒருவருக்கு கொரோனா…!!

இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 759 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை நேற்று 1 லட்சத்து 22 ஆயிரத்து 186 ஆக உயர்ந்துள்ளது. 3-வது நாளாக…

காதலி பேச மறுத்ததால் விபரீத முடிவு – கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கரியகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தண்டபாணி(வயது 49). ஆட்டோ டிரைவர். இவரது மகன் அஜய்(19). உடுமலை ரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தார். இதற்கிடையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்…

சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்கும் ஜப்பான்…!!

சீனாவில் உய்குர் இன முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் சீனா இதை திட்டவட்டமாக மறுக்கிறது. இந்த சூழலில் உயர்குர் இன முஸ்லிம்கள் விவகாரத்தை சுட்டிக்காட்டி…

பாபநாசம் அணையில் முதலை நடமாட்டம் – சமூக வலைதளங்களில் பரவும் காட்சியால்…

நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையாக பாபநாசம் அணை உள்ளது. இந்த அணையில் முதலைகள் கிடப்பதாக கூறப்படுகிறது. அணையில் கிடக்கும் முதலைகள் அவ்வப்போது வெளியில் வந்து அணையின் கரையோரங்களில் கிடப்பதை சுற்றுலா பயணிகள் பலர் பார்த்து உள்ளனர். குறிப்பாக…

இங்கிலாந்தில் உச்சம் தொட்ட கொரோனா – ஒரே நாளில் 1.22 லட்சம் பேருக்கு…

இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 4-வது இடத்தில்…

ஊசிபோட்ட தாதியின் இடுப்பை தொட்டவருக்கு சிறை !!

முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் மருத்துவமனையில் ஊசிபோட்ட தாதி ஒருவரின் அங்கத்தை தொட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொரோனா தடுப்பூசியினை பெற்றக்கொள்ளசென்ற நபர் ஒருவர் தாதி ஊசிபோடும் போது தாதியின்…

மனித கடத்தலை தடுக்க நடவடிக்கை!!

மனித கடத்தலை தடுக்க அடுத்த ஆண்டு பல நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மனித கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்…

நீதி, பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம் – மத்திய அரசு அறிவிப்பு…!!

நல்லாட்சி குறியீடு - 2021 குழு ‘ஏ’ மாநிலங்கள், குழு ‘பி’ மாநிலங்கள், வடகிழக்கு மற்றும் மலை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என 4 பிரிவுகளாக வகைப்படுத்தி உள்ளது என மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு…

22 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அதிபருக்கு பொது மன்னிப்பு…!!

தென் கொரியாவில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் அந்நாட்டின் முதல் பெண் அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் பார்க் கியுன் ஹை. இவரது நெருங்கிய தோழியான சோய் சூன் சில், அதிபரிடம் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி சாம்சங் உள்ளிட்ட…

சுனாமி பேரலை – இரண்டு நிமிட மௌன அஞ்சலி!!!

சுனாமி பேரலையால் உயிர்நீத்த மக்களை நினைவுகூர்ந்து இன்று காலை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி காலை 09.25 தொடக்கம் 9.27 வரை 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஜனவரி 10ம் தேதி முதல் முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் – பிரதமர்…

பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, ஜனவரி 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அறிவித்தார். முதற்கட்டமாக மருத்துவம் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்றும்…

பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும்!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான…

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 லட்சத்தைத் தாண்டியது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…

இன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்..!!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றதும் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.…

இணையதள காதலால் வந்த வினை – பாதாள அறையில் அடைத்து வைத்து மாணவியை கற்பழித்த…

அமெரிக்காவின் உட்டா மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி திடீரென்று மாயமானார். இதுதொடர்பாக அவரது பெற்றோர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அந்த மாணவியை தேடி வந்தனர். அவரது செல்போன் சிக்னலை வைத்து அவரை தேடி கண்டுபிடிக்கும்…

கன்றுகளை உற்பத்தி செய்வோருக்கு நிதியுதவி !!

தேயிலை, தெங்கு மற்றும் கறுவா கன்றுகளை உற்பத்தி செய்வோருக்கு நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது. தேயிலை மீள்நடுகை மற்றும் புதிதாக தேயிலை உற்பத்திக்காக சிறிய தேயிலை அபிவிருத்தி அதிகார…

சமையல் எரிவாயு விநியோகம் மேலும் தாமதம்?

சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதற்கு முன்னர் மேலதிக பரிசோதனை சிலவற்றை மேற்கொள்வதனால், அதனை விநியோகிக்கும் நடவடிக்கையில் சிறிது தாமதம் ஏற்படக்கூடுமென்று ´லிற்றோ காஸ் நிறுவனம்´ அறிவித்திருக்கிறது. சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பில்…