;
Athirady Tamil News

யாழில். ஒலிபெருக்கி சாதனத்தினுள் மறைத்து கஞ்சா கடத்தி சென்ற மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் , சிறிய ரக ஒலிபெருக்கி சாதனத்தினுள் (box) கஞ்சாவை மறைத்து கடத்தி சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடம் இருந்து 18 கிலோ கஞ்சா போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். சாவகச்சேரி பகுதியில் கடந்த…

குடும்பப்பெண் மீது சரமாரி வெட்டு: கணவன் தலைமறைவு..!!!

யாழில் நேற்று (05) குடும்ப பெண் மீது கணவனால் சரமாரியாக வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்பெண் சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் யாழ். குருநகரில் நேற்று மாலை 05.30 மணியளவில்…

செயற்கை நுண்ணறிவை கையில் எடுத்த இஸ்ரேல்.. அதிர வைக்கும் ரகசிய தகவல் அம்பலம்!

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரில் செயற்கை நுண்ணறிவுத் (Artifical Intelligens) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேல் தாக்கும் இலக்கினை நிர்ணயித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் 972இற்கும் மேற்பட்ட செய்தி நிறுவனங்களும், செய்தி…

ஓய்வு பெற்றவர்களுக்காக தனிக் கிராமம்! எங்குள்ளது தெரியுமா….

பிரிட்டனில் குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நபர்கள் அவர்களுக்கென ஒரு தனித்துவமான கிராமத்தை அமைத்து அதில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். பிரிட்டனின் கேனாக் மில் என்ற கிராமத்தில் உள்ள கட்டிடக் கலைஞர் ஆன் தோர்ன் என்பவர் தனது…

நீட் தேர்வு கட்டாயமல்ல.. ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உரிமைத்தொகை! காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர…

கிளிநொச்சியில் சிறுபோகப் பயிர்செய்கை ஆரம்பிக்க முடியாத நிலை

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான 2024ம் ஆண்டுக்கான சிறு போகச் பயிர்செய்கைக்கான இறுதித்தீர்மானம் பொதுச்சபையில் உரிய முறைப்படி நிறைவேற்றப்படாத நிலையில் இருப்பதனால் பயிர் செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுகின்றதாக…

யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக விசாரணை

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றிற்கு ஆதரவாக செயற்பட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக பொலிஸ் உயர் அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…

திடீரென உயிரிழந்த களனி பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவன்: நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு

களனி பல்கலைக்கழகத்தின் விடுதி ஒன்றில் தங்கியிருந்த இறுதியாண்டு மாணவன் சுகவீனமடைந்து உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை என களனி பல்கலைக்கழக நிர்வாகம்…

மன்னாரில் உணவகத்திற்கு சென்ற நபர் மீது தாக்குதல்

மன்னாரில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு உணவு உண்பதற்காக சென்ற நபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் (04.04.2024) இடம்பெற்றுள்ளது. மன்னார் - மாந்தை மேற்கு மூன்றாம்பிட்டி கிராமத்தை சேர்ந்த நபரொருவரே…

அமெரிக்க விடுத்த பகிரங்க எச்சரிக்கை! அடிபணியும் இஸ்ரேல்

தனது எல்லைகளின் ஊடாக காஸாவுக்கு உதவிப்பொருட்கள் விநியோகத்தை தற்காலிகமாக இஸ்ரேல் அனுமதிக்கவுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த தகவலை பெஞ்சமின் நெதன்யாஹுவின் அலுவலகம் இன்று(05)…

இந்தியாவின் பிரதமராவாரா எடப்பாடி பழனிசாமி !

அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்தியாவின் பிரதமராக வர வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை குறித்து மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்ட…

வலையில் சிக்கிய 11 டொல்பின்கள்: கடற்றொழிலாளர் செய்த நெகிழ்ச்சியான செயல்

யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் கரைவலையில் அகப்பட்ட 11 டொல்பின்களும் உயிருடன் திருப்பி விடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (05.04.2024) இடம்பெற்றுள்ளது. அகப்பட்ட 11 டொல்பின்கள் யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியை…

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து : மூவர் படுகாயம்!

யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துணவி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று மதில் மற்றும் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று (05) பகல் இடம்பெற்றுள்ளது. வட்டுக்கோட்டையிலிருந்து நவாலியை…

ஆசிரியை ஒருவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்துக்கு, கல்முனை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை

அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா பெண்கள் மகா வித்தியாலயத்தில் தகவல் தொழில்நுட்ப பாடத்தைக் கற்பித்து வந்த ஆசிரியை பாத்திமா ருகையா என்பவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்துக்கு, கல்முனை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. குறித்த…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம்-சமய தலைவர்கள் சமூக சேவகர் செய்தியாளர் சந்திப்பில்…

கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டமானது ஒரு இனத்திற்கோ அல்லது மதத்திற்கோ எதிரானது அல்ல.ஆனால் எமது போராட்டத்தை கொச்சைப்படுத்த சில தரப்பினர் முயற்சிப்பது தவறானது என மதத்தலைவர்கள் குறிப்பிட்டனர். கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம்…

காசா மீதான யுத்தத்தை இஸ்ரேல் முடிவுக்கு கொண்டு வரவுண்டும்: டிரம்ப் எச்சரிக்கை

காசா யுத்தத்தை இஸ்ரேல் மிகவிரைவில் முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய பேட்டியிலேயே டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலிற்கான இந்த கடுமையான செய்தியை…

2024 இல் கடும் வெப்பம்: துல்லியமாக கணித்த பாபா வாங்கா

பல்கேரியாவை சேர்ந்தவர் மூதாட்டி பாபா வாங்கா 1996 ஆம் ஆண்டு தனது 85 வயதில் இறந்த நிலையில் இவருக்கு 12 வயது இருக்கும் போதே பல்கேரியாவில் ஏற்பட்ட பெரும் புயல் வெள்ளத்தில் கண்களில் மின்னல் தாக்கி பார்வை பறி போனது. அந்த நொடியில் அவருக்கு…

5 நாட்கள் பட்டினி கிடந்துள்ளேன்., ஐரோப்பாவில் பசியில் துடித்த அனுபவத்தை பகிர்ந்த Infosys…

Infosys நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி, 50 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பா சென்றபோது 120 மணி நேரம் தொடர்ந்து பட்டினி கிடந்த சம்பவத்தை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட…

பொது இடங்களில் ரகசியமாக காதலை வெளிப்படுத்தும் வில்லியம் கேட் தம்பதியர்

தன் காதல் மனைவி இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் என்றதும் இளவரசர் வில்லியம் எவ்வளவு துடிதுடித்துப்போனார் என்பது உலகத்துக்கே தெரியும். கேட்டுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, வில்லியம் கேட் தொடர்பான செய்திகள் பல தொடர்ந்து…

இஸ்ரேல் பிரதமருக்கு ரிஷி சுனக் எச்சரிக்கை

பாலஸ்தீன காசா பகுதிக்கான நிவாரண உதவிகளை தடுத்தால், சர்வதேச மனிதாபிமான சட்டங்களை இஸ்ரேல் மீறுவதாக அறிவிக்கவேண்டியேற்படும் என்று இங்கிலாந்தின் பிரதமர் எச்சரித்துள்ளார். இஸ்ரேலின் பிரதமர் நெத்தன்யாகுடன் இடம்பெற்ற தொலைபேசி…

அம்பானி வீட்டு திருமணமும் ஜாம்நகர் Airport சர்ச்சையும்!

இந்திய பணக்காரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்காக ஜாம்நகர் விமான நிலையத்தை 12 நாள்களுக்கு மட்டும் இந்திய அரசு சர்வதேச அந்தஸ்து கொடுத்தது. ஆனந்த் அம்பானி திருமணம் Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக…

பிரித்தானியாவை தாக்கும் கேத்லீன் புயல்: கனமழை, பனி, பலத்த காற்று எச்சரிக்கை

பிரித்தானியா ஒரு கடுமையான வார இறுதியை எதிர்நோக்கியுள்ளது, ஏனென்றால் புயல் கேத்லீன்(Kathleen) கனத்த மழை, பனி மற்றும் ஆபத்தான பலத்த காற்றுடன் நெருங்கி வருகிறது. பிரித்தானியாவில் புயல் எச்சரிக்கை இந்த வார இறுதியில் பிரித்தானியாவை…

சீன எல்லையில் திடீரென தரையிறக்கப்பட்ட இந்திய விமானப்படை ஹெலிகொப்டர்

இந்திய விமானப்படை ஹெலிகொப்டர் ஒன்று சர்சைக்குரிய சீன எல்லையான லடாக்கில் திடீரென தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்வாறு திடீரென ஹெலிகொப்டர் தரையிறக்ப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை ஏப்ரல் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையில் இந்த தீர்மானம்…

ஹெக் செய்யப்பட்ட கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம்: விசாரணைகள் தீவிரம்

சிறிலங்கா கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் இனந்தெரியாத நபரொருவரால் ஊடுருவப்பட்டுள்ளமை(hacked) தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிறிலங்காவின் கணினி அவசர தயார்நிலை குழு மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு ஆகியவை…

அதிகரிக்கப்படும் அரச ஊழியர்களின் சம்பளம்: ஜனாதிபதி ரணில் அறிவிப்பு

தமிழ், சிங்களப் புத்தாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம். மேலும், அஸ்வெசும திட்டத்தின் ஊடாக மக்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.…

தொலைக்காட்சி’ல என் கட்சி பேர கூட சொல்ல மாட்றீங்க..அவளோ பயம் உங்களுக்கு…?…

சின்னம் தொடர்பாக நாம் தமிழர் சீமான் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றார். கரும்பு விவசாயி சின்னம் நாம் தமிழர் கட்சி தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தை முன்வைத்து தான் தொடர்ந்து போட்டியிட்டு வந்தது. ஆனால், இந்த தேர்தலில்…

வவுனியாவில் மாணவனை தாக்கிய ஆசிரியை காப்பாற்ற முயற்சிக்கும் பாடசாலை அதிபர்!

கடந்த சில தினங்களுக்கு முன் வவுனியா - சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 2ல் கல்வி பயிலும் மாணவனை ஆசிரியை தாக்கியதில் குறித்த மாணவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ தினத்தன்று பாடசாலை முடிந்து…

திவாலான நிறுவனம்… கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தத்தளிக்கும் கேட் மிடில்டனின்…

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனின் பெற்றோர் 2.6 மில்லியன் பவுண்டுகள் தொகையை திருப்பிச் செலுத்த முடியாமல் தத்தளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கரோல் மற்றும் மைக்கேல் மிடில்டன் இளவரசி கேட் மிடில்டனின் பெற்றோர் கரோல் மற்றும் மைக்கேல்…

ஆயுர்வேத வைத்தியரை கைது செய்ய சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அம்பாறையில் உள்ள பகுதியொன்றில் அனுமதியின்றி சட்டவிரோதமாக ஆங்கில மருந்து வகைகள் மற்றும் போதையூட்டும் மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த ஆயுள்வேத வைத்தியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அம்பாறை -…

கரை ஒதுங்கிய அந்த மீன்… சில மணிநேரங்களில் தைவானை உலுக்கிய மோசமான நிலநடுக்கம்

பேரழிவிற்கு முன்னர் விசித்திரமான ஆழ்கடல் மீன் ஒன்று பொதுமக்கள் கண்ணில் படும் என்ற தைவான் மக்களின் நம்பிக்கை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிக மோசமான நிலநடுக்கம் தைவான் நாட்டை மொத்தமாக உலுக்கிய மிக மோசமான…

கிளிநொச்சியில் நடந்த அசம்பாவிதம்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்! பரபரப்பு காட்சி

கிளிநொச்சியில் உள்ள பகுதியொன்றில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது பெண்ணொருவர் தவறி விழுந்த நிலையில் விபத்துக்குள்ளாகியுள்ளார். இச்சம்பவம் நேற்றையதினம் (04-04-2024) கரடி போக்கு சந்தியில் குறித்த பெண் வேலைக்காக சென்ற போது…

மட்டக்களப்பில் விவசாய காணியிலிருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள்

மட்டக்களப்பு (Batticaloa) வாகரை பிரதேசத்தில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வெடிபொருட்களானது இன்று (05.04.2024) காலை ஊரியன் கட்டு கிராம சேவகர் பிரிவின் பெரிய தட்டுமுனையில் உள்ள விவசாய…

அமெரிக்காவின் ஆதரவு… இஸ்ரேலுக்கு திடீர் மிரட்டல் விடுத்த ஜனாதிபதி பைடன்

காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமரை கட்டாயப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதரவை இழக்க நேரிடும் பொதுமக்களையும் தொண்டு நிறுவன ஊழியர்களையும் பாதுகாக்க தவறினால் அமெரிக்காவின்…