;
Athirady Tamil News

தென்னிலங்கை கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரை காணவில்லை

தென்னிலங்கையில் உள்ள பிரதான கட்சிகளில் ஒன்றின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரை கடந்த ஐந்து தினங்களாக காணவில்லை என அவரது மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த திரிலோகநாதன் என்பவரே…

சாவகச்சேரியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு

யாழ்.சாவகச்சேரியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று வழங்கப்பட்டது. சாவகச்சேரி நகர் பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அமரர் ந.ரவிராஜின் உருவச்சிலையடி வைத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. அதென்ன போது, இறுதி…

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடெங்கிலுமுள்ள பல்கலைக் கழகங்களில் கடந்த 2ம் திகதி முதல்…

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடெங்கிலுமுள்ள பல்கலைக் கழகங்களில் கடந்த 2ம் திகதி முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்க இணைச் செயலாளர்…

கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் விசேட செயலமர்வு

மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சினைகள், தற்பொழுது காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும் அவற்றை உரிய முறையில் நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் பற்றிய தகவல்களைக் கலந்துரையாடுவதற்கான விசேட…

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை நினைவு கூர்ந்து சபையில் ”சிரட்டை” யை…

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை நினைவு கூர்ந்து ''சிரட்டை ''ஒன்றை சபாபீடத்திற்கு சமர்ப்பித்து அதனைப் பாராளுமன்ற நூதனசாலையில் வைக்குமாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் கோரிக்கை விடுத்தார்.…

நல்லூரில் பசுமை இயக்கத்தின் அற்றார் அழிபசி தீர்த்தல்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்படைந்துள்ள குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கும் 'அற்றார் அழிபசி தீர்த்தல்' என்ற திட்டத்தைச் செயற்படுத்தி வருகின்றது. பகிர்ந்துண்டு வாழ்வோம் என்ற கருப்பொருளில்…

யாழில் போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுவரும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தின்…

யாழில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞரொருவர் காயம்

யாழ்ப்பாணம் இலுப்பையடிச் சந்திப் பகுதியில் ஜீப் ரக வாகனமொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை…

யாழ்.தாதியர் பயிற்சி கல்லூரியில் தாதியர் தின நிகழ்வுகள்

சர்வதேச தாதியர் தினத்தினை முன்னிட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையும், தாதியர் பயிற்சி கல்லூரியும் இணைந்து நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது. யாழ்.தாதியர் பயிற்சி கல்லூரி மண்டபத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில்…

யாழ்.சாட்டியில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் சாட்டி கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 03 கிலோ வெடிமருந்துகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் , அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்-49 ஆவது நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக…

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக அடக்குமுறைகளுக்கும் அத்துமீறல்களுக்கும் எதிராகவும் நிருவாக உரிமையை மீட்பதற்காகவும் மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்தின் 50 வது நாளுக்காக பிரதேச செயலக முன்றலில் நேற்று  (12) ஞாயிற்றுக்கிழமை 49 ஆவது நாளாக…

ஐ.நாவின் தடையை முற்றாக புறக்கணித்த வடகொரியா: தொடர் அணு ஆயுத சோதனை

கொரிய தீபகற்பத்தில் வடகொரியாவானது தொடர் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை மேற்கொண்டு வருகிறது. நீண்ட தூர ஏவுகணை சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐ.நா விதித்துள்ள தடைகளையும் மீறி வடகொரிய இவ்வாறு செய்து வருகிறது. அத்தோடு, வடகொரிய அதிபர் கிம்…

பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட உலகின் முதல் மனிதன் மரணம்!

அமெரிக்காவில் (America) பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட உலகின் முதல் மனிதன், அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு மாதங்களான நிலையில் நேற்று  (12) உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், உயிரிழந்த ரிக் ஸ்லேமேன் (Rick Slayman) எனும் நபருக்கு…

கொரோனா தடுப்பூசிகளினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: வெளிவந்த அதிர்ச்சி பின்னணி

கொரோனா வைரஸை (COVID - 19) கட்டுப்படுத்துவதற்காக பெறப்பட்ட தடுப்பூசிகளினால் உலகம் முழுவதிலும் இதுவரை 11,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த விடயமானது, 2023 இல் ஐரோப்பிய மருந்துகள் முகமை வெளியிட்ட அறிக்கையை…

மெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கம்: சுனாமி அபாயம் குறித்து வெளியான தகவல்

வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டின் ஷைபஸ் மாகாணத்தில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கவுதமாலா நாட்டின் எல்லையில் அமைந்துள்ள ஷைபஸ் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம்…

இஸ்ரேலுக்கு அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்த ஈரான்…!

இஸ்ரேலுக்கு (Israel) ஈரான் (Iran) அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிரியாவில் (Syria) உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 12 பேர்…

மோடி பாஜக பிரதமர் வேட்பாளர் இல்லை…! வெடித்துள்ள சர்ச்சை: அமித் ஷாவின் பதிலடி

அமித் ஷாவை பிரதமராக்க பாஜக (bjp) முயற்சிப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) கூறியுள்ள நிலையில் அதனை அமித் ஷா மறுத்துள்ளார். பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் மோடியே பிரதமராக தொடர்வார் என்று மத்திய உள்துறை அமைச்சர்…

யாழ் பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஓட்டிச் சென்ற கார் விபத்து ; ஒருவர் வைத்தியசாலையில்

யாழில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஓட்டிச் சென்ற சென்ற கார் யாழ் இலுப்பையடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை குறித்த…

ரணில் – சஜித் ஒருபோதும் ஒன்றிணையமாட்டார்கள் : ரஞ்சித் மத்தும பண்டார

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் ஒன்றிணைப்பதற்கு எந்தவொரு வெளிநாடும் முற்படவில்லை. ஜனாதிபதி சஜித், பிரதமர் ரணில் என்ற கோரிக்கைக்குக்கூட நாம் உடன்படப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின்(Samagi…

புலம்பெயர் தொழிலாளர்களால் இலங்கைக்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர்

புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகளவான பணத்தினை சட்டரீதியான வங்கி முறையில் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.…

இலங்கையில் குறைவடைந்து வரும் பிறப்பு வீதம்! எதிர்காலம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் (Sri Lanka) பிறப்பு வீதம் பாரியளவில் குறைவடைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் பிறப்பு வீதம் 30 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக கலுபோவில (Kalubowila) போதனா வைத்தியசாலையின் மகப்பேறு வைத்தியர் பேராசிரியர்.…

காஷ்மீரில் வெடித்த மக்கள் போராட்டம்: தீவிரமடையும் பதற்ற நிலை

பாகிஸ்தான் (Pakistan) ஆக்கிரமிப்பு, காஷ்மீரில் (Kashmir) பணவீக்கம், அதிக வரி மற்றும் மின்சார பற்றாக்குறை ஆகியவற்றை கண்டித்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த போராட்டத்தை ஜம்மு காஷ்மீர்…

நாடு முழுவதும் இன்று 4ஆம் கட்டத் தேர்தல்..!

நாடு முழுவதும் உள்ள 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 தொகுதிகளில் இன்று 4-ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலானது 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் 102…

ஜனாதிபதி செயலகத்திலிருந்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கடிதம்

ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பணிப்பாளர் என்று கூறிக்கொண்ட ஒருவருக்கு எதிராக இலஞ்ச குற்றச்சாட்டுகளை சுமத்தும் புத்தளம் மாவட்ட பிரதேச செயலாளரின் முகப்புத்தக பதிவு தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி செயலகம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு…

குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கு வழங்கப்படவிருந்த இலவச அரிசி: அம்பலமானது பாரிய மோசடி

மனித பாவனைக்கு தகுதியற்ற ஒரு இலட்சத்து எழுபதாயிரம் கிலோகிராம் அரிசியை மோசடியான பொதியிடல்களுக்காக எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் அதனை நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். நுகர்வோர் அதிகார சபையின் அனுராதபுரம்…

கொழும்பு – மட்டக்குளியில் காணாமல் போயுள்ள வயோதிபர் : பொலிஸில் முறைப்பாடு

கொழும்பு 15 (Colombo) - மட்டக்குளி, அலிவத்தை பகுதியில் வயோதிபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வயோதிபர் நேற்று முன்தினம் (11) காலை தனது வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.…

நாட்டில் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நிலவும் கடும் மழை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு…

இஸ்ரேலின் கடற்கரை நகர் மீது நள்ளிரவில் காசாவிலிருந்து தாக்குதல்

இஸ்ரேல் (Israel) கடற்கரை நகரமான அஸ்கெலோனில் (Ashkelon) உள்ள குடியிருப்புக் கட்டடத்தின் மீது காசா பகுதியிலிருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காசாவின் வடக்குப் பகுதியில் (North of Gaza) இருந்து 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இந்தப்…

சுவிஸில் உலக அமைதிக்கான உச்சி மாநாடு ; கனேடிய பிரதமர் தெரிவிப்பு

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உக்ரைனுக்கான முதல் அமைதி மாநாட்டில் கனடா இருக்கும் என தெரிவித்துள்ளார். முதல் உலக அமைதி உச்சி மாநாடு சுவிட்சார்லாந்தில் ஜூன் மாதம் 15 -16ஆம் திகதிகளில் முதல் உலக அமைதி உச்சி மாநாடு நடைபெற உள்ளது.…

கொல்லப்பட்ட பிரித்தானிய பிணைக்கைதி தொடர்பில் சில மணிநேரத்தில் வெளியான திருப்பம்

காசாவில் ஒரு பிரிட்டிஷ்-இஸ்ரேலிய பணயக்கைதி கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவித்த நிலையில், அவர் உயிருடன் இருக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானிய பிணைக்கைதி Nadav Popplewell (51) என்பவர் காசாவில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பினர்…

பாண்டாவாக மாறிய நாய்! பார்வையாளர்களை ஏமாற்றிய பூங்கா நிர்வாகம்

சீனாவில் சௌ சௌ இன நாய்களுக்கு கருப்பு வெள்ளை வர்ணம் பூசி பாண்டா கரடியாக மாற்றி பார்வையாளர்களை பூங்கா நிர்வாகம் ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவமானது சீனாவின் தைசௌ உயிரியல் பூங்காவில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், சௌ சௌ…

தோலின் நிறம் காரணமாக மகள் குடும்பத்தையே கொல்ல முயன்ற தாய்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய…

தன் மகள் ஆப்பிரிக்கப் பின்னணி கொண்ட ஒருவரை திருமணம் செய்துகொண்டதால், அவரது குடும்பத்தையே கொல்ல முயன்றுள்ளார் ஒரு பெண். குடும்பத்தையே கொல்ல முயன்ற பெண் வெள்ளையினப் பெண் ஒருவரின் மகள், தன் தாயின் விருப்பத்துக்கு எதிராக பிரான்ஸ் மொராக்கோ…

தாய், மனைவி மற்றும் பிள்ளைகள் என மொத்த குடும்பத்தையும் சுட்டுக்கொன்ற நபர்! பின்னர் அவர்…

இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் தொழிலாளி ஒருவர் தனது மனைவி, பிள்ளைகள் உட்பட ஐந்து பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உத்தர பிரதேசத்தின் ராம்பூர் மதுரா பகுதியைச் சேர்ந்தவர் அனுராக்…