;
Athirady Tamil News

எதிர்பாராத அளவுக்கு அதிகரித்த மரக்கறி விலை : 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட கரட்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் வரலாற்றில் முதல் தடவையாக நேற்று (13) ஒரு கிலோ கிராம் கரட் 1000 - 1100 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், நுவரெலியா பிரதேச விவசாயிகளிடம் இருந்து…

சீனா: சுரங்க விபத்தில் 10 பேர் பலி

மத்திய சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் நிலக்கரி சுரங்க பணியின்போது நிகழ்ந்த விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதாகவும் 6 பேர் நிலை அறிய முடியாததாக உள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலக்கரி மற்றும் எரிவாயு வெடித்ததன் காரணமாக…

யாழில் “யாதுமானவள்” குறும்பட வெளியீடு

ஒப்பனைக் கலைஞரும், நடிகையுமான ஆர்.ஜே.வாணியின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான “யாதுமானவள்” குறும்பட வெளியீடு அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள ஈழத்திரை (செல்வா திரையரங்கு) திரையரங்கில்…

இந்திய ரூபாயை தங்கள் நாட்டில் பயன்படுத்த 35 நாடுகள் ஒப்புதல்!

இந்திய ரூபாயை தங்கள் நாட்டில் பயன்படுத்திக் கொள்ள இதுவரை 35 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தாா். ‘இந்திய ரூபாயின் 100 ஆண்டுகால பயணம்’ என்ற தலைப்பில் தில்லியில் சனிக்கிழமை…

குடிக்க தண்ணீர் கேட்ட நபரின் மோசமான செயல் : அடித்துக் கொலை செய்த பெண்

தங்காலை பிரதேசத்தில் வீட்டினுள் நுழைந்து பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட நபரை அந்த பெண் கூரிய ஆயுதத்ததால் தாக்கி கொலை செய்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் மொரகெட்டி ஆர கிழக்கு - நாகுலுகமுவ…

யாழில் டெங்கு தீவிரம் – கொழும்பில் இருந்து வந்த விசேட குழு களஆய்வு

யாழ்ப்பாணம் நகர் பகுதிகளை அண்டிய பகுதிகளில் கொழும்பில் இருந்து வருகை தந்த, டெங்குக் கட்டுப்பாட்டுப் பணிகளில் தேர்ச்சிபெற்ற குழுவினர் (பல மாவட்ட மருத்துவர்களையும் உள்ளடக்கிய குழு) நேற்றைய தினம் சனிக்கிழமை கள ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.…

யாழில். வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி – ஒருவர்…

வெளிநாடுகளுக்கு அனுப்பு வைப்பதாக சுமார் ஒரு கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார், நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவரையே பொலிஸார் கைது…

யாழ். காரைநகரில் 12 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டு இருந்த 12 தமிழக கடற்தொழிலாளர்களை, நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கடற்படையினர் கைது செய்துள்ளனர். காங்கேசந்துறை கடற்படையினர் கடலில் சுற்றுக்காவல் (ரோந்து)…

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா எனும் தொனிப்பொருளில் யாழில் நாளை தைப்பொங்கல் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் - காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச…

இலங்கையில் பால் மா விலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, அடுத்த வாரம் முதல் 400 கிராம் பால் மா பாக்கெட் ஒன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என பால் மா…

நேபாளம்: ஆற்றுக்குள் விழுந்த பேருந்து

நேபாளத்தில் ஆற்றுக்குள் பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 2 இந்தியா்கள் உள்பட 12 போ் உயிரிழந்தனா். இது குறித்து ‘தி காத்மாண்டு போஸ்ட்’ நாளிதழ் தெரிவித்துள்ளதாவது: நேபாள்கஞ்ச் நகரிலிருந்து தலைநகா் காத்மாண்டை நோக்கிச் சென்று…

முப்படை வீரர்களின் தினசரி கொடுப்பனவு அதிகரிப்பு

முப்படை வீரர்களின் தினசரி ரேஷன் கொடுப்பனவை 1500 ரூபாவாக அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் முப்படைகளின் தளபதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இராணுவ அதிகாரியின்…

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான சுற்றறிக்கை!

அரச செலவுக் கட்டுப்பாடு, அத்தியாவசியச் செலவுகள், சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பயணச் செலவுகள் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது அதிகரித்து வரும் அரச செலவினம் மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் அரச வருமானம்…

வற் வரிக்கு மேலதிகமாக 16 வகையான வரிகளை அறவிடும் இறைவரித் திணைக்களம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வற் வரிக்கு மேலதிகமாக 16 வகையான வரிகளை அறவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது. வற் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் வரி முறை இலகுபடுத்தப்பட்டுள்ள போதிலும், அதனை மேலும்…

யாழில் நோயாளர் காவு வண்டியில் சென்று உயர்தர பரீட்சை எழுதிய மாணவி

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள உயர்தர மாணவி ஒருவர் அவசர நோயாளர் காவு வண்டியில் பரீட்சை நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றியுள்ளார். குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் - வடமராட்சி, பருத்தித்துறை பகுதியில்…

வாகன இறக்குமதி தொடர்பில் வர்த்தமானி வெளியீடு: அமைச்சர் விளக்கம்

அரசாங்கத்திற்கு அத்தியாவசியமான சில வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சாதாரண வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பல அரச…

ராகுலின் ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’: மணிப்பூரில் இன்று தொடக்கம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சியின் ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’ மணிப்பூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு நாட்டின் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை நடைப்பயணம்’ மேற்கொண்டாா்.…

சபரிமலைக்கு செல்லும் வழியில் விபத்தொன்றில் சிக்கிய இலங்கை பக்தர்கள்

சபரிமலைக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தொன்றில் பொகவந்தலாவை பகுதியை சேர்ந்த 14 ஐயப்ப பக்தர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான உதவிகளை செய்து கொடுக்குமாறு நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஜீவன்…

இலங்கை மாணவர் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்: பிரித்தானிய இளைஞர் ஒப்புதல் வாக்குமூலம்

பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம் பகுதியில் பொலிஸாரால் பின்தொடர்ந்து வந்த கார் மோதியதாலையே இலங்கையரான மாணவர் மரணமடைந்ததாக தொடர்புடைய ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். சம்பவயிடத்திலேயே மரணம் நாட்டிங்ஹாமின் Trent பல்கலைக்கழக மாணவரான 31 வயது Oshada…

வங்கியொன்றில் பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

பதுளை - தியத்தலாவையிலுள்ள அரச வங்கியொன்றில் பண மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் ATM இயந்திரத்தில் இருந்து இரண்டு இலட்சம் ரூபாவை மோசடியாக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹல்துமுல்ல பகுதிக்கு…

செங்கடலில் ஹவுதி பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்க இலங்கை கடற்படைக் கப்பல்கள் தயார்

செங்கடலில் ஹவுதி போராளிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்கும் நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையின் விஜயபாகு - கஜபாகு கடற்படைக் கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்கள் புறப்படும் திகதி…

உறைய வைக்கும் குளிர்…. மொத்தமாக 191 விமானங்களை ரத்து செய்த பிரபல கனேடிய நிறுவனம்

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், WestJet விமான சேவை நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களையும் ரத்து செய்துள்ளது. கடுமையான குளிர் காலநிலை இது தொடர்பில் WestJet விமான…

ஹமாஸ் கையில் வாளைக் கொடுக்காதீர்கள்: இஸ்ரேல்

ஐ.நாவின் பன்னாட்டு நீதிமன்றத்தில், இஸ்ரேல் இனப்படுகொலை செய்துவருவதாக தென்னாப்பிரிக்கா தொடர்ந்த வழக்கின் இரண்டாவது நாள் அமர்வில் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளது இஸ்ரேல். இனப்படுகொலையில் குற்றவாளி ஹமாஸ்தான் எனவும் தெரிவித்துள்ளது. இந்த…

கைப்பேசியில் ‘401லி’ எண்ணைத் தொடா்பு கொள்ள வேண்டாம்: மத்திய அரசு எச்சரிக்கை

கைப்பேசிக்கு வரும் அழைப்புகளை அடையாளம் தெரியாத மற்றொரு நபருக்குத் திரும்பிவிடும் வகையில் வரும் மோசடி அழைப்புகள் குறித்து மக்கள் எச்சிரிக்கையாக இருக்குமாறு மத்திய தொலைத்தொடா்புத் துறை தெரிவித்துள்ளது. தொலைத்தொடா்பு சேவை வழங்கும்…

இனப் படுகொலைக் குற்றச்சாட்டு: சா்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் மறுப்பு

காஸாவில் தாங்கள் இனப் படுகொலையில் ஈடுபடுவதாக தென் ஆப்பிரிக்க அரசு சுமத்திய குற்றச்சாட்டை ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை மறுத்தது. இது தொடா்பாக நெதா்லாந்தின் தி ஹேக் நகரில் அமைந்துள்ள அந்த நீதிமன்றத்தில்…

Fact Check: அயோத்தி ராமர் கோவிலுக்கு முகேஷ் அம்பானி குடும்பம் 33 கிலோ தங்கம் நன்கொடை…

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா முன்னெடுக்கப்படவிருக்கும் நிலையில், பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி குடும்பம் 33 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளித்துள்ளதாக சமூக ஊடகத்தில் கவனம் ஈர்த்த தகவலின் உண்மை நிலை வெளியாகியுள்ளது. மாபெரும்…

700 ஏவுகணைத் தளங்கள் அழிப்பு: இஸ்ரேல் ராணுவம்!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்துவரும் போரில் இதுவரை 700-க்கும் அதிகமான ஏவுகணைத் தளங்களை அழித்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. அனைத்து ஏவுகணைத் தளங்களும் ஹமாஸ் அமைப்புக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. ஹமாஸ்…

மின்சாரக் கட்டணத்தின் மூலம் மக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க முயற்சி

90 அலகுகள் வரை பயன்படுத்தும் மின்சார பாவனையாளர்களுக்கு மின்சார கட்டணத்தை குறைப்பதில் அதிக நன்மைகள் கிடைக்கும் என மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர்நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில், நேற்றைய…

118 ஐ அழைத்தால் தண்டனை

118 தொலைபேசி இலக்கத்திற்கு பொய்யான தகவல் வழங்குவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்ட 118 தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கக்கூடிய தகவல்கள் குறித்து மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக…

டிவி நேரலையில் மயங்கி விழுந்த வேளாண் நிபுணர் பலி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடந்த நேரலையில் பங்கேற்றிருந்த வேளாண் நிபுணர் அனி எஸ் தாஸ் (59) மயங்கி விழுந்து பலியானார். கிரிஷி தர்ஷன் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது, திடீரென மயங்கி…

நாட்டில் சிறுவர்களை தாக்கும் டெங்கு!

நாட்டில் டெங்கினால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக காய்ச்சலுடன் வைத்தியசாலைக்கு வரும் சிறுவர்கள் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்…

ஹவுதி கிளர்ச்சியாளர்களை தடுக்க இணைந்த பிரபல நாடுகள்: எச்சரிக்கை விடுத்துள்ள பைடன்

பிரித்தானியா மற்றும் அமெரிக்கப் படைகள் செங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தி வந்த ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளன. பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை கண்டித்து ஏமன் நாட்டை…

ரணிலுடன் இணைந்து செயற்படுவதே எனது நிலைப்பாடு : டக்ளஸ் உறுதி

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பயணித்தால் இன்னும் சில வருடங்களில் நாட்டுக்கு நியாயமான நிலை ஏற்படும் எனவும் ரணிலை விடுத்து வேறு யாரும் நாட்டின் தலைவராக வந்தால் நாடும் மேலும் மோசமான நிலைக்கு செல்லும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்…

அவசர தொலைபேசி இலக்கம்: கடும் சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் பொலிஸார்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்ட 118 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்படும் தகவல்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அதன்படி, தேசிய…