;
Athirady Tamil News

கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம் : ரணிலை சந்தித்தார் சம்பிக்க

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணியின் ‘நாட்டிற்கு ஒரு படி’ என்ற பொது குறைந்தபட்ச வேலைத்திட்டம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (24) இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டது. இந்த…

வெளிப்படையாக கூறிய கருத்து… சிக்கலில் இளவரசர் ஹரி

போதை மருந்து பழக்கம் தமக்கிருந்ததாக Spare நினைவுக் குறிப்பில் இளவரசர் ஹரி வெளிப்படையாக கூறியிருந்தது தற்போது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பெடரல் விதிகளின் அடிப்படையில் அமெரிக்க விசா பெறுவது தொடர்பில் இளவரசர் ஹரி போராடி வருவதாக…

நடை பயிற்சியின் போது நாய் கவ்விப்பிடித்த லொட்டரி சீட்டு அடித்த அதிர்ஷ்டம்!

சீனாவில் நடை பயிற்சிக்கு சென்றபோது உடன் அழைத்துச்செல்லப்பட்ட நாய், கவ்விப்பிடித்த லொட்டரி சீட்டுக்கு பரிசாக விழுந்த சம்பவம் பெரும் அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு சீனாவின் குவாங்டாங் நகரில், நடை பயிற்சிக்கு லின் என்ற பெண் சென்று…

52 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவில் தரையிறங்கிய அமெரிக்க கலம்

சுமாா் 52 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க ஆய்வுக் கலமொன்று நிலவில் முதல்முறைாக தரையிறங்கியுள்ளது. ‘இன்ட்யூட்டிவ் மெஷின்ஸ்’ என்ற நிறுவனத்தின் ஓடிஸியஸ் என்ற அந்த ஆய்வுக் கலம்தான், வா்த்தக ரீதியில் நிலவில் தரையிறக்கப்பட்டுள்ள முதல் ஆய்வுக் கலம்…

டுபாயில் வேலை தேடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு! காரணம் இது தான்

ஒவ்வொரு ஆண்டும் தொழில் வாய்ப்புகளுக்காக ஏராளமானோர் டுபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக நாடுகளிற்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதை தாண்டி அதிகளவானோர் அங்கு குடியேறுவதனையும் அதிகளவில் விரும்புவதாக…

ரஷ்யாவிற்கு பேரிழப்பு : உளவு விமானத்தை சுட்டுவீழ்த்தியது உக்ரைன்

ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக ரஷ்ய ஏ-50 இராணுவ உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் மற்றும் க்ராஸ்னோடார் நகரங்களுக்கு இடையே விமானம் அழிக்கப்பட்டதாக உக்ரைன் இராணுவ வட்டாரங்கள்…

கனேடிய மக்கள் தொடர்பாக சமீபத்திய ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

கனேடிய மக்கள் விலைக்கழிவை எதிர்பார்த்து காத்திருப்பதாக சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அத்துடன், பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்திருப்பதால் கனேடியர்கள் விலைக்கழிவுடைய பொருட்களை கொள்வனவு செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும்…

நானும் இப்போது ஒரு குழந்தைக்கு தந்தை: சஜித் அறிவிப்பு

தானும் தற்போது ஒரு குழந்தைக்கு தந்தையாகிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நானும் தற்போது…

நாடளாவிய ரீதியில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் மின் இணைப்பு துண்டிப்பு

கடந்த வருடம் நாடளாவிய ரீதியில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் 10,69,000 பேருக்கு மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை…

விரைவில் X தளத்தில் அறிமுகமாகவுள்ள மின்னஞ்சல் சேவை

எக்ஸ் மெயில் என்ற பெயரில் விரைவில் மின்னஞ்சல் சேவை அறிமுகப்படுத்தப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் அந்த நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக உலகின் நம்பர்…

அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் சாத்தியம்!

இலங்கையில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடந்த சில மாதங்களாக படிப்படியாக வலுவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக , இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட வேண்டியது அவசியம் என அமைச்சர்…

இலங்கை தமிழர்கள் இருவரை நாடு கடத்திய சீனா..!

கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது சீனாவில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களும் ஒரு வருடத்தின் பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி…

சாய்ந்தமருது மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள புலமைப்பரிசில் திட்டம்

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் உள்ள 30 கணித விஞ்ஞான மாணவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவுடன் புலமைப்பரிசில் திட்டம் ஒன்றினை இந்த வருடம் முதல் அமுல்படுத்த உத்தேசித்துள்ளதாக கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் தவிசாளர் எம்.எம். நசீர்…

கஞ்சா பயன்பாட்டிற்கு அனுமதியளித்துள்ள ஐரோப்பிய நாடு

ஜெர்மனி நாடாளுமன்றம், கஞ்சா பயன்பாட்டைச் சட்டபூர்வமாக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மால்டா, லக்ஸம்பெர்க் நாடுகளுக்குப் பிறகு ஐரோப்பிய யூனியனில் கஞ்சா பயன்பாட்டைச் சட்டபூர்வமாக்கவுள்ள மூன்றாவது நாடு ஜெர்மனி. புதிய சட்டத்தின்படி,…

முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான ஸ்டிக்கர் ஒட்டும் பணி

முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான ஸ்டிக்கர் ஒட்டும் பணி தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் இன்று (24) நடைபெற்றது. அதன்படி கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் அப்பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முச்சக்கரவண்டி மற்றும்…

கனடாவில் இனி நீரிழிவு, கருத்தடை சிகிச்சைகள் இலவசம்: வெளிவரும் விரிவான பின்னணி

கனடாவில் ஆளும் லிபரல் கட்சியும் புதிய ஜனநாயக கட்சியும் இணைந்து முக்கிய ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளனர். சிகிச்சை இனி இலவசம் இதன் அடிப்படையில், மருத்துவ அட்டையை பயன்படுத்தும் ஒவ்வொரு கனேடிய பிரஜையும் நீரிழிவு மற்றும் கருத்தடை சிகிச்சையை…

அரசாங்க வருமானத்தில் கடனுக்காக அதிக வட்டியை செலுத்தும் இலங்கை

உலக வங்கியின் அபிவிருத்தி குறிகாட்டிகளின் பிரகாரம் அரசாங்க வருமானத்தில் இருந்து கடனுக்காக அதிக வட்டியை செலுத்தும் நாடு இலங்கை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல…

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய் – பொதுமக்களுக்கு கிடைக்கவுள்ள நன்மை

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடந்த சில மாதங்களாக வலுவடைந்து வருவதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டியது அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.…

போருக்கு பின்னரான இஸ்ரேலின் திட்டத்தை வெளியிட்ட நெதன்யாகு

ஹமாஸ் உடனான போர் நிறைவுற்ற பின்னரான திட்ட விவரங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. குறித்த அறிக்கையில் போருக்கு பின்னர் காசாவை…

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி நிகழ்வு

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி நிகழ்வு இன்று காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. நேற்று கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும்…

யாழ்ப்பாணம் உயர்கல்விக் கண்காட்சி இன்று ஆரம்பம்

யாழ் உயர்கல்விக் கண்காட்சி இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. கண்காட்சி கூடத்தை யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள வலம்புரி விருந்தினர் விடுதியில் இன்று(24) காலை…

பஞ்சாபில் ‘கருப்பு தினம்’ அனுசரித்து விவசாயிகள் போராட்டம்

‘தில்லி செல்வோம்’ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது ஹரியாணா காவல் துறையின் நடவடிக்கையை கண்டித்து, பஞ்சாபில் சம்யுக்த கிசான் மோா்ச்சா கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை ‘கருப்பு தினம்’ அனுசரித்து போராட்டத்தில் ஈடுபட்டது. குறைந்தபட்ச ஆதரவு…

நவல்னியின் மனைவி, மகளை சந்தித்து ஆறுதல் கூறிய ஜோ பைடன்!

ரஷ்ய சிறையில் உயிரிழந்த அந்நாட்டு எதிர்கட்சி தலைவர் அலெக்சி நவல்னியின் மனைவியையும், மகளையும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சந்தித்தார். புடின் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்த நவல்னி மீது பல்வேறு மோசடிளை சுமத்தி 30 ஆண்டு…

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: மரக்கறிகளின் விலைகளில் திடீர் மாற்றம்

மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக பேலியகொட பொது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் எச்.டி.என்.சமரதுங்க கூறியுள்ளார். இதனுடன் ஒவ்வொரு மரக்கறிகளும் 500 ரூபாய் வரையில் விலை குறைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேலியகொட…

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை பாரிய அளவில் கொள்வனவு செய்துள்ளனர். அவற்றை பாதுகாப்பான வீடுகளாக பயன்படுத்தி பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில்…

பெற்ற சிசுவை குழிதோண்டி புதைத்த பெண்; பொலிஸார் பகீர் தகவல்

ஹட்டன் -வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை தோட்டத்தில் வீடு ஒன்றின் பின் பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்த சிசு ஒன்றின் சடலம் நேற்று முன் தினம் (22) மீட்கப்பட்டதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். வட்டவளை பொலிஸாருக்கு…

ஒன்றாரியோவல் பாரியளவு துப்பாக்கிகள் மீட்பு

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பாரியளவில் துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் கனடிய பாதுகாப்பு தரப்பினர் இணைந்து விசாரணைகளை நடத்தியுள்ளனர். குறித்த விசாரணைகளில் 274 சட்டவிரோத ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த…

தமிழகத்தில் உலக தரத்தில் மேம்படுத்தப்படும் 34 ரயில் நிலையங்கள்: பிப்.26-இல் மோடி தொடங்கி…

தமிழகத்தின் 34 ரயில் நிலையங்கள் உலக தரத்தில் மேம்படுத்தப்படவுள்ளன. இதற்கான பணிகளை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை (பிப்.26) அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கவுள்ளாா். நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள ரயில்நிலையங்கள் எதிா்கால வளா்ச்சியை…

பாலஸ்தீன மக்களை வாழவிடுங்கள்; அமெரிக்க வாழ் யூதர்கள் போராட்டம்

நியூயார்க் நகரில் , காசா முனையில் வசிக்கும் பாலஸ்தீன மக்களை வாழவிடுங்கள் என பதாகைகளை ஏந்தி அமெரிக்க வாழ் யூதர்கள் போராட்டம் நடத்தினர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதரவாளர்கள் எனக் கருதப்படும் அவர்கள், காசாவில் நடக்கும் படுகொலையை…

திருகோணமலையில் கண்டெடுக்கப்பட்ட மிதிவெடி

திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டுக்கு அருகில் மிதிவெடி ஒன்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மிதிவெடியானது, மாவிலாறு யுத்தத்தின்போது புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரியவருகின்றது. மாவிலாறு அணைக்கட்டுக்கு சென்றவர்கள் மிதிவெடி…

கடலில் நீராட சென்ற இளைஞன் மாயம்

தங்காலை, மாவெல்ல துறைமுகத்தின் அருகே கடலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெலியத்த, தெமட்டாவை பகுதியைச் சேர்ந்த காவ்யா ஆகர்ஷ விஜேசிங்க என்ற 24 வயதுடைய…

பச்சிளம் சிசுவை தவிக்க விட்டு வெளிநாடு பறந்த இளம் தம்பதிகள்; பொலிஸார் சந்தேகம்!

கலஹா லுல் கந்துர தோட்டத்திலுள்ள , லைன் அறையில் 5 1/2 மாத குழந்தையை வாடகை அறையில் விட்டுவிட்டு வெளிநாடு சென்ற இளம் தம்பதி தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் இருந்து தற்காலிக…

யாழில் உயிரிழந்த முல்லைத்தீவு இளைஞன்

யாழில் தனியார் பேருந்தில் பயணித்த, முல்லைத்தீவு இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் . இந்த சம்பவம் நேற்று காலை(23) யாழ்ப்பாணம் நல்லூர் முன் வீதியில் இடம் பெற்றுள்ளது. பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த பொழுது குறித்த இளைஞன் தவறி…

நடிகர் விஜய் கட்சியின் முதல் பிரம்மாண்ட மாநாடு.. எங்கு, எப்போது நடக்க போகிறது தெரியுமா?

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கட்சி மாநாடு எங்கே நடைபெற உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக அறிவித்தார்.…