;
Athirady Tamil News

அரச ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் சம்பள அதிகரிப்பு : நிதி அமைச்சின் அறிவிப்பு

நெருக்கடியான நிலையிலும் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக அமையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற…

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு வரி அடையாள எண் : எடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய தீர்மானம்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி அடையாள எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த…

பங்களாதேஷில் ஐந்தாவது முறையாகவும் பிரதமரானார் ஷேக் ஹசீனா

பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமரும் அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ஹசீனா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பங்களாதேஷின் பிரதமர் நேற்று (07) ஞாயிற்றுக்கிழமை ஐந்தாவது முறையாக மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றதாக…

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான விசேட தகவல்

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவொன்று தனது ஆணைக்குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த தகவலை அறிக்கை ஒன்றை வெளியிட்டதன் மூலும் பொதுப்…

மட்டக்களப்பில் செங்குத்தாக கவிழ்ந்த முச்சக்கர வண்டி

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று செங்குத்தாக கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் இரு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் இன்று திங்கட்கிழமை (8) காலை இடம்பெற்றுள்ளது.…

ஆலயத்தில் வேலை செய்த இளைஞன் திடீரென உயிரிழப்பு! தமிழர் பகுதியில் நடந்த துயரம்

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை 11.20 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள ஆலயமொன்றின் தேர் திருப்பணி வேலையில் ஈடுபட்டுக்கொண்டு…

யாழில். கஞ்சா மற்றும் கசிப்புடன் பெண் கைது

யாழ்ப்பணம், கோப்பாய் செல்வபுரம் பகுதியில் கஞ்சா மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக பொலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்றைய…

கனடா வாழ் மக்களுக்கு எச்சரிக்கை: வானிலையில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம்

கனடாவின் ரொறன்ரோவில் பனிப்புயல் மற்றும் மழையுடனான வானிலை நீடிக்குமென மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரொறன்ரோவில் நாளை(09)பனிப்புயல் தாக்கக் கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. அத்துடன், இந்த…

செந்தில் பாலாஜி வழக்கு ஆவணங்கள்:ஆய்வு செய்ய அமலாக்கத் துறைக்கு அனுமதி

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரானபோக்குவரத்து பணி நியமன பண மோசடி வழக்கில் தொடா்புடைய ஆவணங்களை ஆய்வு செய்ய அமலாக்கத் துறைக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 2011-16 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக…

1008 பொங்கல் பானைகள், 1500 பரதநாட்டிய கலைஞர்கள்; கிழக்கில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பொங்கல்…

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானைகள், 1500 பரதநாட்டிய கலைஞர்கள், 500 கோலங்களுடன் பொங்கல் விழா இன்று (08) திருகோணமலையில் நடைபெற்றது. கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.கா தலைவருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் பொங்கல்…

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் நூதன முறையில் கொள்ளை

இலங்கைக்கு வருகைத்தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் பணமோசடி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் 8 முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த ஸ்தலங்களுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் பெறுமதிசேர் வரி அதிகரிப்பே காரணம்…

ஒரே வாரத்தில் 2,000 ஐக் கடந்த டெங்கு நோய்த்தாக்கம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள…

புதிய ஆண்டின் முதல் வாரத்திலேயே டெங்கு நோய் வேகமாக பரவி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். அவருடைய கூற்றுப்படி கடந்த ஏழு நாட்களில் 2,316 பேர் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு…

போக்குவரத்து சபை ஊழியர்களின் சம்பள உயர்வு: ரணிலுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

ஏறக்குறைய ஐந்து வருடங்களாக தாமதமாகி வரும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் சம்பளத்தை உத்தியோகபூர்வமாக திருத்தியமைப்பதற்கு உடனடியாக தலையிடுமாறு அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.…

ஹமாஸ் அமைப்புடன் பேச்சு நடத்துவது கடினம் : கைவிரித்தது கத்தார்

லெபனானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் துணைத்தலைவர் கொல்லப்பட்ட நிலையில் பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் அந்த அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவது கடினம் என கத்தார் அரசாங்கம் அறிவித்துள்ளது . கத்தார் பிரதமர் மொஹமத் பின்…

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் பொலிஸாரினால் மீட்கப்பட்ட பெருந்தொகை பெறுமதியான அபின்…

வடக்கில் முதல்முறையாக யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் பெருந்தொகை பெறுமதியான அபின் போதைப்பொருள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. வல்லிபுரம் கடற்கரைப் பகுதியில் மூன்று பொதிகளில் இருந்து குறித்த போதைப்பொருட்கள் திங்கட்கிழமை (08) காலை…

கல் உடைப்பு ஆலைகளால் மாசுபாடு: அறிவியல்பூா்வ ஆய்வுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கல் உடைப்பு ஆலைகளால் ஏற்படும் மாசுபாடு குறித்து அறிவியல்பூா்வ ஆய்வை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த ஆலைகள் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பாகச்…

இலங்கை – இந்திய கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்: ஒரு வழிப் பயணக் கட்டணம் எவ்வளவு…

காங்கேசன்துறை நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மீண்டும் ஆரம்பிக்கும் இந்த சேவையில், இறுதியாக சேவையில் ஈடுபட்ட செரியாபானி கப்பல்…

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் : ஒன்பதாவது முறையாக தென்மாகாணம் சாதனை

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் தென் மாகாணம் தொடர்ச்சியாக ஒன்பதாவது தடவையாக நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. தொடர்ச்சியாக முதலாமிடம் 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப்…

வடக்கு மக்கள் ரணிலுக்கு தக்க பாடம்புகட்டுவர்: சஜித் அணி சூளுரை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வட மாகாண மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு வடக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ…

இ.போ.ச முடிவால் பாடசாலை மாணவர்கள் சிரமம்

ஜனவரி மாதத்துக்காக பாடசாலை மாணவர்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையினால் வழங்கப்படும் பருவச் சீட்டுகளை இரத்துச் செய்யுமாறு அதன் பொது முகாமையாளர் டிப்போ முகாமையாளர்களுக்கு ஜனவரி 3 ஆம் திகதி அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக யாழ்.பொலிஸார் தாக்கல் செய்த வழக்கில்…

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக யாழ்.நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை ஜனாதிபதிக்கு எதிராக…

வடக்கு காஸாவிலிருந்து வெளியேறும் இஸ்ரேல்… திசை திரும்பும் போர்!

இஸ்ரேல் ராணுவம் வடக்கு காஸாவின் முதன்மையான களங்களிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. அந்தப் பகுதிகளில் ஹமாஸின் கட்டுமானங்களை முற்றிலும் அழித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது. நான்காவது மாதத்தில் அடியெடுத்துவைக்கும் இஸ்ரேல்- ஹமாஸ் போரில்…

யாழ்ப்பாணத்தில் உச்சம் தொட்ட முருங்கக்காய் விலை; ஒரு காய் 1000 ரூபாய்!

யாழ்ப்பாண வாரச்சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 3000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. முருங்கை காய்களின் அறுவடை கிடைக்காததாலும், ஏனைய வகை மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதால் , முருங்கையின் விலையும்…

இந்தியாவிற்கு சவாலாக மாறியுள்ள மாலைதீவு அமைச்சர்களின் செயல்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

அமைச்சர்கள் பலரின் சேவைகளை இடைநிறுத்த மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமூக ஊடகங்கள் ஊடாக இந்திய பிரதமரை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிடுவது தொடர்பிலேயே இந்த தீர்மானம்…

வீட்டில் மோதிய லொறியால் ஆறு வயது சிறுவன் பலி

மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் மீது இளைஞரொருவர் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் மட்டக்களப்பு நீதவான்…

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில்…

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில் இரவு வேளை சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.…

யாழில். மாவா பாக்குடன் பெண் கைது

யாழில் கஞ்சா கலந்த மாவா பாக்கினை விற்பனை செய்த குற்றத்தில் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , துன்னாலை கிழக்கை சேர்ந்த குறித்த பெண்ணை பொலிசார் கைது செய்ததுடன் , கைது…

மானிப்பாயில் கைதான இரு இளைஞர்கள் கந்தக்காட்டிற்கு!

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்களையும் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 24 மற்றும் 25…

மியான்மரில் தீவிரமடையும் உள்நாட்டு போர் : முக்கிய நகரை கைப்பற்றியது ஆயுதக்குழு

மியான்மரில், ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசை கவிழ்த்து, 2021ல் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, ராணுவ ஆட்சிக்கு எதிராக, நாட்டிலுள்ள பழங்குடியின குழுக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், மியான்மரில்…

மூட நம்பிக்கைகளிலிருந்து மீள முடியாதோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

மத போதனைகளில் பங்கேற்று மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட முடியாதவர்கள் மனநல மருத்துவர்களை உடன் சந்திக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உயிரை மாய்த்துக்கொள்வது தொடர்பிலான மத போதனைகள்…

மின்கட்டணம் செலுத்தாத 8 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிப்பு

நாட்டில் மின்கட்டணம் செலுத்த முடியாமல் கடந்த 03 காலாண்டுகளில் 08 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவில் தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில்…

முச்சக்கர வண்டியில் ஏறிய பெண் : சினிமா பாணியில் செய்த அதிர்ச்சி செயல்

இரத்தினபுரி - கொடகவெல பகுதியில் பயணம் செய்ய வேண்டும் என கூறி முச்சக்கர வண்டியில் ஏறிய பெண் சாரதியை கொலை செய்துவிட்டு முச்சக்கர வண்டியை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். முச்சக்கரவண்டி சாரதியின் கழுத்தில் துணியால் கட்டி அழுத்தியதுடன்,…

ஹோமாகம பிரதேசத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய புகை : மக்களுக்கான விசேட அறிவுறுத்தல்

ஹோமாகம கட்டுவான பிரதேசத்தின் கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் இருந்து புகை எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது நிலவும் பனிமூட்டம் காரணமாக அதில் குளோரின் கலந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர். இது…

கொழும்பு, யாழ்ப்பாணத்தில் தீவிரமடையும் டெங்கு : உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

நாடாளவிய ரீதியில் டெங்கும் பரவும் அபாயம் உள்ள இடங்களை இனங்கண்டு அதனை சுத்தம் செய்யும் நடவடிக்கையை சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது. சுத்தம் செய்யப்படும் பகுதிகள், வீடுகள், தொழில் நிறுவனங்களுக்கு சொந்தமான உரிமையாளர்களிடம் அதற்கான பணத்தை…