;
Athirady Tamil News
Monthly Archives

November 2022

மண்ணெண்ணெய் இல்லை – கிரியெல்ல புலம்பல்!!

கண்டி மாவட்டத்தில் தற்போது மண்ணெண்ணெய் இல்லை என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய கிரியெல்ல, பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் பெறுவதற்கு வழியில்லாததுடன்,…

ஐஸ் போதையில் சிக்கிய 2 வயதுப் பெண் குழந்தை – யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி!!

உயிர்கொல்லி ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான தந்தையால் 2 வயதுப் பெண் குழந்தை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. முல்லைத்தீவு கொக்கிளாயைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம்…

வரும் தேர்தலில் தெலுங்கு தேசம் வென்றால் மட்டுமே சட்டசபைக்கு வருவேன் – சந்திரபாபு…

ஆந்திர மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி உள்ளன. தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் ஜனசேனா கட்சித் தலைவர்கள் பொதுக்கூட்டம் நடைபயணம்,…

புங்குடுதீவு அமரர்.செல்லமுத்து அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவாக வாழ்வாதார உதவி வழங்கல்..…

புங்குடுதீவு அமரர்.செல்லமுத்து அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவாக வாழ்வாதார உதவி வழங்கல்.. (படங்கள், வீடியோ) அழியா நினைவுடன் எட்டாவது ஆண்டு விழிநீர் அஞ்சலி.. அமரர்.திருமதி கந்தையா செல்லமுத்து புங்குடுதீவில் பிறந்து, புங்குடுதீவு,…

தேசிய கல்வி நிறுவகத்தின் ஏற்பாட்டில் புத்தக விற்பனைக் கண்காட்சி!! (PHOTOS)

தேசிய கல்வி நிறுவகத்தின் ஏற்பாட்டில், தேசிய கல்வி நிறுவகத்தினால் அச்சிடப்பட்ட புத்தகக் கண்காட்சியும், புத்தக விற்பனை நிகழ்வும் இன்றையதினம் யாழ். மத்திய கல்லூரி ரொமைன் மண்டபத்தில் நடைபெற்றது. விருந்தினர்கள் மாலை அணிவித்து மண்டபத்திற்கு…

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சம்பத் வங்கி கெளரவிப்பு!!

2021- 2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு சாவகச்சேரி சம்பத் வங்கியில் வியாழக்கிழமை(17) இடம்பெற்றது. சாவகச்சேரி சம்பத் வங்கி முகாமையாளர் ம.பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற கெளரவிப்பு நிகழ்வில்,…

யாழ்.போதனாவில் அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் மற்றும் பெண்ணின் சடலம்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் , அடையாளம் காணப்படாத நிலையில் ஆணொருவரதும் , பெண்ணொருவரதும் சடலம் காணப்படுவதாகவும் , அவற்றை அடையாளம் காண உதவுமாறு கோரப்பட்டுள்ளது. இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருவடி நிலை கடற்கரையில் கடந்த ஒக்டொபர்…

மின்சார திருட்டில் ஈடுபட்ட இருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது!!

யாழ்ப்பாணத்தில் திருட்டு தனமாக மின்சாரம் பெற்ற இருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் , இலங்கை மின்சார சபையினர் பொலிஸாரின் உதவியுடன் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்த நிலையில் ,…

உ.பி. முன்னாள் அமைச்சர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்..!!

சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம்கான் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் மோடி, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அசம்கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.…

யாழில் இன்று திருநர் நினைவு தினம்!! (PHOTOS)

யாழில் இன்று திருநர் நினைவு தினம் உலக வன்மத்தினால் கொல்லப்பட்ட திருநர்களை ( திருநங்கைகள், திருநம்பிகள்) நினைவுகூறும் திருநர் நினைவுதினம் (Voice of edge - விளிம்பின் குரல்) அமைப்பின் ஏற்பாட்டில் அறிமுக நிகழ்வோடு இன்று (18.11.2022) மாலை 3.30…

வீர சாவர்க்கர் குறித்த சர்ச்சை கருத்து – ராகுல் காந்தி மீது புகார் அளித்த சாவர்க்கர்…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை நடத்தி வருகிறார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, சுதந்திரப் போராட்ட வீரரும், இந்து மகாசபையின் முன்னோடி தலைவர்களில் ஒருவராக…

சிறுவன் துஸ்பிரயோகம்: சிறுவர் இல்ல காப்பாளர் கைது!!

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் உள்ள 12 வயதுச் சிறுவனை பாலியல் ரீதியில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில்…

கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ_9 வீதியில் விபத்து!!! (PHOTOS)

கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ_9 வீதியின் 222 ஆவது கிலோமீற்றர் பகுதியில் இன்று மாலை 6 மணியளவில் வானுடன் மோட்டார் சைக்கில் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்துள்ளார். மாங்குளம் நகரில் உள்ள வவுனியா…

மலை சாலையில் இறங்கிய காட்டு யானை – ரிவர்ஸ் கியரில் ஓட்டம் பிடித்த டிரைவர்..!!

கேரளாவில் மலை சாலையில் மீண்டும் இறங்கிய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. அதிரப்பள்ளி பகுதியில் சுற்றி வரும் காட்டு யானை ஒன்று கடந்த 15 தினங்களுக்கும் மேலாக சோலையார் - மலக்கப்பாறை மலைசாலையில் முகாமிட்டுள்ளது. கபாலி எனப்படும் இந்த…

காதல் திருமணம் செய்த மகளை கடத்திச்சென்று மொட்டை அடித்து விரட்டி விட்ட பெற்றோர்..!!

தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள பாலபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதவ் . இவர் பக்கத்து ஊரை சேர்ந்த அட்சிதா என்ற பெண்ணை காதலித்து ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் தனி வீடு எடுத்து…

“இந்தியாவில் 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை ஐ.டி. துறை உருவாக்கும்” –…

கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட், அமேசான் உள்ளிட்ட பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செலவுகளையும், விரையங்களையும் குறைக்க பெரிய அளவில் ஆள் குறைப்பு செய்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் ஐ.டி. துறையில் புதிதாக 2…

மெட்டா நிறுவனத்தின் இந்திய தலைவராக சந்தியா தேவநாதன் நியமனம்..!!

பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா இந்திய பிரிவு தலைவராக சந்தியா தேவநாதனை நியமித்துள்ளது. ஏற்கனவே இந்நிறுவனத்தின் இந்திய தலைவராக இருந்த அஜித் மோகன், ஸ்னாபல் நிறுவனத்திற்கு சென்று விட்டதால், தற்போது அந்த பதவிக்கு…

டிரைவரின் பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிக்க ஆட்டோவில் இருந்து எகிறிக் குதித்த சிறுமி..!!

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோவில் இருந்து, 17 வயது சிறுமி, திடீரென வெளியே எகிறிக் குதித்துள்ளார். இதனால் அவரது தலையில் பலத்த அடிபட்டது. அவர் வந்த ஆட்டோ வேகமாக சென்றுவிட்டது. கீழே விழுந்து கிடந்த அவர்…

தேசிய கீதத்துக்கு பதில் ஒலித்த வேறு பாடல்: ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை நிகழ்ச்சியை…

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தனது யாத்திரையை தொடங்கிய அவர், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக…

உலகம் முழுவதும் 10 ஆயிரம் பேரை அமேசான் அதிரடியாக நீக்கியது..!!

சமூக வலைதளமான டுவிட்டரை ரூ.3½ லட்சம் கோடிக்கு வாங்கிய எலான் மஸ்க் அந்நிறுவனத்தில் பணியாற்றிய 4 ஆயிரம் ஊழியர்களை அதிரடியாக பணியில் இருந்து நீக்கினார். இதனை தொடர்ந்து முகநூலின் மெட்டா நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது.…

4 மாவட்டங்களுக்கு கடத்தி சென்று சிறுமியை போதைக்கு அடிமையாக்கி பாலியல் பலாத்காரம் செய்த…

கேரளாவில் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த ஜூன் மாதம் பெற்றோரிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். சிறுமியை காணாமல் தவித்த பெற்றோர் இது பற்றி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு…

சபரிமலையில் ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும்- அறிவுறுத்தலை வாபஸ் பெற்றது கேரள அரசு..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்கும்படி கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன. உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப்…

சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி- அமலுக்கு வந்தது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்கும்படி கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன. உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப்…

அரசாங்கதுக்கும் ஆளுநருக்கும் புனர்வாழ்வு தேவை !!

நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு தற்போதைய மத்திய வங்கியின் ஆளுநர் அடிமையாகியுள்ளார். அதேபோல் கடனைப் பெறுவதிலும் எங்களது அரசாங்கம் அடிமையாகியுள்ளது. எனவே அரசாங்கத்தையும், ஆளுநரையும் புனர்வாழ்வளிக்க கந்தக்காட்டுக்கு அனுப்ப வேண்டும் என சுயாதீன…

அதிகாரபகிர்வு இந்தியா, இலங்கைக்கு ஆபத்து?

வடக்குக், கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கவே கூடாதென தெரிவிக்கும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர ஆனால், அதிகாரப் பரவலாக்கத்தை கண்டிப்பாக வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். வரவு - செலவு திட்டம் மீதான இன்றைய (17)…

பட்ஜெட் குறித்து இ.தொ.கா அதிருப்தி !!

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் (பட்ஜெட்) தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்களை சந்தித்து கலந்துரையாடியது. இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர்…

கோட்டாவை கோர்த்து விட்டார் ஹிருணிகா !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, பிரதிவாதியாக பெயர் குறிப்பிடுமாறு ஹிருணிகா கோரிக்கை​யொன்றை முன்வைத்துள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக…

வடக்கில் கடலட்டைப் பண்ணைகளால் பட்டினிச் சாவில் மீனவர்கள்!! (கட்டுரை)

மீன்களின் இனப்பெருக்கம் தடைப்படுகிறது வழிகள் மறிக்கப்பட்டதால் படகுகளை செலுத்த முடியாதுள்ளது. பிரகாசமான மின்விளக்குகள் பயன்படுத்துவதால் மீன்கள் கரைக்கு வருவது தடுக்கப்படுகிறது சிறிய குஞ்சு அட்டைகளை பொறுக்கி, கடலட்டையின்…

கிளிநொச்சி கண்டாவளை AMOH எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!!! (வீடியோ)

கிளிநொச்சி பிராந்திய சுகாதார பணிமனையின் ஆளுகைக்கு கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியை இடமாற்றம் கோரி கர்ப்பிணி தாய்மார்கள் பொதுமக்கள் என பலர் ஒன்று கூடி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை…

மீன் எண்ணைய் மாத்திரையை தினமும் சாப்பிடுவதால்!!! (மருத்துவம்)

இன்று மருந்தகங்களில் எளிதாக கிடைக்கின்றது மீன் எண்ணெய் மாத்திரைகள். மீன் எண்ணெய் மாத்திரையை பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் எடுத்துக்கொள்கின்றனர். என்ன பலன் கிடைக்கிறது எனத் தெரியாவிட்டாலும், ‘உடலுக்கு நல்லது’ என்ற பொதுவான…

மரம் நடுகை மாத நிகழ்வு!! (படங்கள்)

மர நடுகை மாதத்தை முன்னிட்டு நல்லூர் பிரதேச செயலகத்தின் கோரிக்கைக்கு அமைவாக நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கெளசலாசிவா வின் ஏற்பாட்டில் பயனாளிகளுக்கு மரக் கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று (17.11.2022) இடம்பெற்றது. நல்லூர் பிரதேச…

நாடு முழுவதும் பணியாற்றும் 80 ஆயிரம் ரெயில்வே ஊழியர்களுக்கு சம்பளம்- பதவி உயர்வு..!!

இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பயணிகளின் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிப்பது ரெயில்வே துறை. இந்திய ரெயில்வேயில் பயணிகளை ஏற்றி செல்ல மட்டும் 13 ஆயிரத்து 169 ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதுபோல சரக்குகளை கையாள 8 ஆயிரத்து 479…

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியிலுள்ள குளத்தில் சடலம்!!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியிலுள்ள குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போனநிலையில் அவரது சடலம் கடற்படையின் உதவியுடன் வியாழக்கிழமை(17) மீட்கப்பட்டது குறித்த குளத்தினை அண்மித்த பகுதியில் வசித்துவரும்…

உரும்பிராய் ஐயப்பன் ஆலயத்தின் மகரஜோதி மண்டலப் பெருவிழா ஆரம்பம்!!

யாழ்.உரும்பிராய் தெற்கு சாட்டுபத்துாா் சபரிபீடம் அரள்வளா் சிவதா்மசாஸ்த்தா தேவஸ்தானத்தில் ஜெயவத்ஸாங்க குரு சுவாமி திருமாலை அணிவிக்கும் நிகழ்வு கார்த்திகை மாதம் 01ம் நாள் (நவம்பர் 17) பகல் 10மணி தொடக்கம் மகாகணபதி ஹோமம், பக்தர்கள் திருமாலை…