;
Athirady Tamil News
Monthly Archives

November 2022

40 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது !!

பொலிஸ் மா அதிபரின் கட்டளைக்கு அமைய நாடளாவிய ரீதியில் பொலிஸாரின் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் நேற்று (24) காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய விசேட குற்றத் தடுப்பு பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது,…

13 வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை !!

13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் அனுமதி பாத்திரங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளன. அண்மைய நாட்களாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு பெண்களை அனுப்புவது தொடர்பில் முறைகேடுகள் பல இடம்பெற்றுள்ளமை…

தொண்டைமானாற்றில் வீதியில் உயிரிழந்த நிலையில் முதலை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு பகுதியில் வீதியில் உயிரிழந்த நிலையில் முதலையொன்று மீட்கப்பட்டுள்ளது. அச்சுவேலியில் இருந்து தொண்டைமானாறு செல்லும் வீதியிலேயே முதலை வீதிக்கு குறுக்காக உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காணப்பட்டுள்ளது.…

9 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி 54 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது..!!

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக செயற்கைக் கோள்களை வடிவமைக்கிறது. இந்நிலையில், இஸ்ரோ சார்பில் பி.எஸ்.எல்.வி.-சி54 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 11.56…

மலேசியா பிரதமராக பதவியேற்ற அன்வார் இப்ராகிமுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

மலேசியாவில் 222 பாராளுமன்றத் தொகுதிகளுக்கான 15- வது பாராளுமன்ற பொதுத் தேர்தல் கடந்த வாரம் நடந்தது. 75 வயதான முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் கூட்டணி சனிக்கிழமை நடந்த தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களில் 82 இடங்களை…

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு.. பீட்டா அமைப்புக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி..!!

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த மனுக்கள் இன்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.…

மங்களூரு குண்டுவெடிப்புக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் கவுன்சில் பொறுப்பேற்றது- உண்மை நிலையை…

மங்களூருவின் நாகுரி பகுதியில் கடந்த 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் அந்த ஆட்டோவில் பயணித்த ஷாரிக், ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஷாரிக், ஐ.எஸ். பயங்கரவாத…

4 பேரின் பெயர்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்தீர்கள்?- மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு…

தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, தலைமை தேர்தல் ஆணையர் தொடர்பான ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு…

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அங்கப்பிரதட்சண டோக்கன் நாளை வெளியீடு..!!

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அங்கப்பிரதட்சண டோக்கன் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான…

காலக்கொடுமை… வாலிபரை கடத்தி பலாத்காரம் செய்த 4 இளம்பெண்கள்..!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்க்கும் வாலிபர் ஒருவர் இரவில் பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த காரில் 20 வயது மதிக்கத்தக்க 4…

ஒரு வாரத்தில் 3 லட்சம் பேர் தரிசனம்: சபரிமலையில் 18-ம் படி ஏற பலமணி நேரம் காத்திருக்கும்…

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பிரச்சினை காரணமாக கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கட்டுப்பாடுகள்…

தெலுங்கானா அமைச்சர் வீட்டில் நவீன ஸ்கேனர் மூலம் சோதனை- வருமான வரித்துறையினர் மீது போலீசில்…

தெலுங்கானா அமைச்சர் மல்லா ரெட்டி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று 3-வது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் மல்லா ரெட்டி மற்றும் அவரது மருமகன் ராஜசேகர ரெட்டி மற்றும் மகள் ஆகியோரின்…

கேரளாவில் ஆசிரியை தற்கொலை வழக்கில் உடற்கல்வி ஆசிரியர் கைது..!!

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் பைஜூ என்பவர் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.…

தேசிய உதைபந்தாட்டத்தில் மகாஜன கல்லூரி 17 வயது பெண்கள் அணி சம்பியன்!!

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான 17 வயதுப் பெண்கள் உதைபந்தாட்டடப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி சாம்பியனாகியது. இன்று (நவம்பர் 24) கொழும்பு களணி பிரதேச சபை மைதானத்தில் நடைபெற்ற 17 வயது பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில்…

பிரம்மோற்சவ விழா: கல்ப விருட்சம், அனுமன் வாகனங்களில் பத்மாவதி தாயார் வீதிஉலா..!!

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை கல்ப விருட்ச வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார், சிறப்பு அலங்காரத்தில்…

ஆரோக்கியமான கூந்தலுக்கு நெல்லிக்காய்!! (மருத்துவம்)

சாதாரணமாகவே நெல்லிக்காய் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் பெரிதும் உதவியாக உள்ளது. பெரும்பாலும் ஆயுர்வேதத்தில் தான் நெல்லிக்காயை அதிகம் பயன்படுத்துவார்கள். ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்…

வாழ்ந்து கெட்ட நிலையில் கூட்டமைப்பும் சம்பந்தனும் !! (கட்டுரை)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், அதன் தலைவர் இரா. சம்பந்தனும் வாழ்ந்து கெட்டவர்களின் நிலைக்கு வந்துவிட்டார்கள். அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சு நடத்துவதற்கான அழைப்பை, தமிழ்த் தேசிய கட்சிகளிடம் சம்பந்தன் அண்மையில் விடுத்திருந்தார்.…

மத்தியப் பிரதேசத்தில் நடைபயணம்- ராகுல் காந்தியுடன் இணைந்த பிரியங்கா காந்தி..!!

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார். தமிழ்நாடை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா என…

நிந்தவூர் அட்டப்பள்ளத்தில் போலி இரசாயனப் பசளைகளை கலப்படம் செய்யும் நிலையம் சுற்றி வளைப்பு!…

நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டப்பள்ளம் பிரதேசத்தில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் மறைத்து வைத்து கலப்படம் செய்யப்பட்ட 1.5 டொன் எடையுள்ள போலி இரசாயனப் பசளைகளை ராணுவ புலனாய்வு பிரிவினர் கைப்பற்றி உள்ளனர் இச்சம்பவம் இன்று…

சுப்பர்மடத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் சுப்பர்மடம் பொது நோக்கு மண்டபத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் , மாவீரர்களின் படங்கள் வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு…

சுழிபுரத்தில் பாண் விற்பனையாளர் மீது தாக்குதல் ; வாகனமும் உடைப்பு!!

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வன்முறை கும்பல் ஒன்று பாண் விற்பனையாளர் மீது தாக்குதல் மேற்கொண்டு , அவர் பாண் விற்க பயன்படுத்தும் வாகனத்தையும் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளது. மாதகல் பகுதியில் உள்ள வெதுப்பகத்தின் உற்பத்தி பொருட்களை…

வியட்நாமில் தற்கொலைக்கு முயற்சித்த இலங்கை அகதி மரணம்!!

தற்கொலைக்கு முயற்சித்த வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கைக்கு செல்ல முடியாது என கோரி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு இலங்கை அகதிகள் தற்கொலை செய்ய முயற்சித்திருந்தனர். இவ்வாறு…

வாக்கெடுப்பில் அரசாங்கத்துக்கு மீண்டு்ம் வெற்றி!!

2023ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 81 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றின் மீதான…

சபரிமலையில் அப்பம், அரவணை வினியோகம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேவஸ்தானத்துக்கு…

சபரிமலை ஐயப்பன் கோவில் நிர்வாகம் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த போதிலும், கேரள ஐகோர்ட்டு நேரடி கண்காணிப்பில் தான் அனைத்து செயல்பாடுகளும் உள்ளன. தற்போது சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி நடை திறக்கப்பட்டு…

மகாராஷ்டிராவில் எந்த கிராமமும் கர்நாடகத்துடன் இணையாது: பசவராஜ் பொம்மைக்கு, பட்னாவிஸ்…

மகாராஷ்டிரா எல்லையில் உள்ள பெலகாவி மாவட்டம் கர்நாடக மாநில ஆட்சி எல்கையில் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள 80-க்கும் மேற்பட்ட மராத்தி மொழி பேசும் கிராமங்களை தங்களது மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா தொடர்ந்து வலியுறுத்தி…

குடிநீர் மற்றும் துப்புரவு பணிகளில் சிறந்த செயல்பாட்டுக்காக நாமக்கல் மாவட்டத்துக்கு…

மத்திய அரசின் குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை சார்பில் ஜல்ஜீவன் திட்டமும், தூய்மை இந்தியா திட்டமும் முனைப்போடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை சிறப்பாக செயல்படுத்தும் மாவட்டங்களுக்கு மாதாந்திர அடிப்படை, காலாண்டு அடிப்படை மற்றும் ஆண்டு…

முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு மறுஆய்வு கோரி சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ்…

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான ரிட் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு விசாரித்தது. கடந்த செப்டம்பர் மாதம் 7 நாள்களாக விசாரித்த அந்த அமர்வு,…

பொலிஸாரின் சமிஞையை மீறியவருக்கு ஒரு மாத சிறை!!

பொலிஸாரின் சமிஞையை மீறி மோட்டார் சைக்கிள் ஓடிய இளைஞனுக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதித்த பருத்தித்துறை நீதாவன் நீதிமன்றம் 45 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதித்துள்ளது. நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், போக்குவரத்து பொலிஸார்…

யாழ். நகரில் உள்ள உணவகங்களில் திடீர் சோதனை! (PHOTOS)

யாழ்ப்பாண நகர் பகுதியில் அமைந்துள்ள உணவகங்களில், யாழ். மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களின் உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். அத்தோடு…

“தமிழகத்தில் இருந்து வரும் அய்யப்ப பக்தர்கள் நிலக்கல்லில் ஓய்வெடுத்து மலையேற…

சபரிமலை மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு தினமும் பூஜை நடந்து வருகிறது. எனவே நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இவர்களில் தென் மாநில பக்தர்களே அதிகம்.…

கோட்டாவை ஜனாதிபதியாக்கவே 21/4 தாக்குதல்: சந்திரிகா!!

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்காக 2019 ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார். ஊடகங்களுக்கு இன்று (24) கருத்து தெரிவித்த அவர்,…

இலங்கையில் புதிய வைரஸ்; முகக்கவசம் அணிவது கட்டாயம்!!

இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் நாடளாவிய ரீதியில் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனாவுடன் ஒப்பிடுகையில், இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் குறைவாகவே காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்…

கோட்டாபயவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, டிசெம்பர் 16 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் இன்று (24) அழைப்பாணை பிறப்பித்துள்ளது. மரண தண்டனை கைதியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி…

டெல்லியில் 2-வது நாளாக மின்துறை ஊழியர்கள் போராட்டம்..!!

மத்திய அரசின் மின்சார திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய அளவில் மின்துறை ஊழியர்களின் போராட்டம் டெல்லியில் நடந்து வருகிறது. நேற்று 2-ம் நாள் போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர்கள்…