;
Athirady Tamil News
Yearly Archives

2022

யாழ்.பிரம்படியில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35ஆவது ஆண்டு நினைவு…

யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படி பகுதியில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஆடியபாதம் வீதி , பிரம்படியில் அமைந்துள்ள நினைவு தூபி முன்பாக…

உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை- ஜெர்மனி நிறுவனத்துடன் இந்திய நிறுவனம்…

நாடு முழுவதும் உணவு பாதுகாப்புக்காக விவசாயிகளுக்கு தடையின்றி உரம் கிடைப்பதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.இதற்காக வெளிநாட்டு உர நிறுவனங்களுடன் இந்திய உர நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு…

ஆசியாவின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பைக் குறைக்க முயற்சி!!

ஆசியாவின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பைக் குறைக்கும் முயற்சியில் சர்வதேச நாணய நிதியம் ஈடுபட்டுள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கருத்திற்கொண்டு, ஆசிய நாடுகளின் மத்திய வங்கிகள், தமது நிதியியல் கொள்கைகளை மாற்றியமைக்க சர்வதேச நாணய…

சர்வதேச காலநிலை ஆலோசகராக சொல்ஹெய்ம், நஷீட்டை நியமித்த ரணில்!!

நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், மாலைதீவுகளின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டை தனது சர்வதேச காலநிலை ஆலோசகர்களாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

கட்சியில் சேராததால் கங்குலியை அவமானப்படுத்துகிறது பாஜக- திரிணாமுல் காங்கிரஸ்…

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தலைவர் பதவிக்கு 2வது முறையாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியிடவில்லை. எனினும் செயலாளர் பதவிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா 2வது முறையாக…

வாள் உள்பட பயங்கர ஆயுதங்களுடன் வீதியில் ஆட்டம் போட்ட 14 சிறுவர்கள் உள்பட 19 பேர் கைது..!!

மிலாது நபி கொண்டாட்டங்களையொட்டி கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள டேங்க் கார்டன் பகுதியில் ஊர்வலம் சென்ற முஸ்லிம் இளைஞர்கள் சிலர், இந்து மதம் குறித்து தெலுங்கானா எம்.எல்.ஏ.அக்பருதீன் ஓவைசியின் சரச்சைக்குரிய வார்த்தைகள் அடங்கிய ரீமிக்ஸ்…

வினோ நோகதாரலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி !!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எஸ். வினோ நோகதாரலிங்கம் மாரடைப்பு காரணமாக நேற்று (11) யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை…

நங்கூரமிட்டுள்ள மசகு எண்ணெய் கப்பல் !!

கொழும்பு துறைமுகத்தை அண்மித்து நங்கூரமிடப்பட்டுள்ள மசகு எண்ணெய் கப்பலுக்கான கட்டணத்தை இதுவரை செலுத்த முடியவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 10 ஆம் திகதி நாட்டை அண்மித்த இந்த கப்பலில் ஒரு இலட்சம்…

கல்வி அமைச்சின் புதிய வேலைத்திட்டம் !!

பாடசாலை கற்றல் செயற்பாடுகளின் பின்னர் மாணவர்களுக்கான தொழில்சார் கல்வி வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் ஶ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயத்தில் உள்ள 07 பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…

நாட்டின் முக்கிய ஆன்மீக தலங்களின் பெருமைகளை மீட்டெடுத்து வருகிறோம்- பிரதமர் மோடி…

குஜராத் பயணத்தை முடித்துக் கொண்டு மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி, உஜ்ஜயினி நகரில் 856 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் மகா காளீஸ்வரர் கோயில் வளாக வழித்தடத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளைத் தொடக்கி வைத்தார்.…

சுகாதார சேவையில் பொதுத்துறை-தனியார்துறை கூட்டு முயற்சி அவசியம்: குடியரசு துணைத்தலைவர்..!!

இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பான பிஃக்கியின் 16-வது ஆண்டு சுகாதார மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியாவை மருத்துவம் மற்றும் ஆரோக்கியத்திற்கான உலகளாவிய…

கம்பத்தில் முதல் போக நெல் அறுவடை பணிகள் தொடக்கம்..!!

தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாற்று தண்ணீர் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முதல் போக பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர்…

பாத யாத்திரையின்போது ரோட்டில் தண்டால் எடுத்த ராகுல் காந்தி- வைரலாகும் புகைப்படங்கள்..!!

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக கட்சியின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகிறார். ராகுல்…

இந்தியாவில் தினசரி விமான சேவையை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரிப்பு…

இந்தியாவில் தினசரி 4 லட்சம் பயணிகள் விமான சேவையை பயன்படுத்துகிறார்கள் என்ற சாதனையை இந்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை எட்டியுள்ளது. மேலும், கொரோனா காலத்திற்கு முன்பு இருந்ததை விட அதிக அளவிலான பயணிகள் விமான சேவையை பயன்படுத்துகிறார்கள்.…

இந்திய வரலாற்றில் முதன்முறையாக சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக தந்தை – மகன்…

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக அடுத்த மாதம் பதவியேற்க உள்ள டி.ஒய்.சந்திரசூட், 2 ஆண்டு காலம் நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதியாக உள்ள டி.ஒய்.சந்திரசூட்,…

கர்நாடகாவில் ராகுல் காந்திக்கு போட்டியாக பா.ஜ.க. தலைவர்கள் சுற்றுப்பயணம்..!!

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்க அக்கட்சி மேலிடம் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய ஒற்றுமைக்கான பாதயாத்திரையை ராகுல்காந்தி கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர்…

ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் தொண்டர்களுடன் சேர்ந்து முலாயம் சிங் யாதவுக்கு மவுன…

உத்தரபிரதேசத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடியை நிறுவியவர் முலாயம் சிங் யாதவ். மாநிலத்தில் 3 முறை முதல்-மந்திரியாகவும் இருந்த அவர், குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை காலமானார். நேதாஜி என்று அவரது ஆதரவாளர்களால்…

கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு..!!

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,957 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. கடந்த 7-ந்தேதி பாதிப்பு 1,997 ஆக இருந்தது. மறுநாள் 2,797,…

இந்தியாவில் கடைசி மைல்கல்லில் உள்ள நபருக்கும் பயன்கள் சென்றடைய பாடுபட்டு வருகிறோம்:…

ஐநா சபையின் இரண்டாவது உலக புவிசார் சர்வதேச மாநாடு ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் காணொலி மூலம் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி பேசியதாவது:- இந்தியாவில் கடைசி மைல்கல்லில் உள்ள, கடைசி நபருக்கும் அதிகாரமளிக்கும் வகையிலான…

சத்தீஸ்கர் காங்கிரஸ் பிரமுகர் 2 பெண் மாவோயிஸ்டுகளுடன் கைது..!!

சத்தீஸ்கர் மாநிலம் போபால்பட்டினம் தொகுதி காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.ஜி.சத்யம் 2 பெண் மாவோயிஸ்டுகளுடன் தெலுங்கானாவில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆதாரங்களின்படி, மாவோஸ்டுகளுக்கு…

அக்.17ல் சபரிமலை கோவில் நடை திறப்பு..!!

தமிழ் மாதத்தின் ஐப்பசி, மலையாளத்தின் துலாம் மாத பூஜைக்காக சபரி மலை அய்யப்பன் கோவிலின் நடை அக்டோபர் 17 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. நடை திறக்கப்பட்ட பிறகு அக்டோபர் 22 ஆம் தேதி வரை 5 நாள்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பூஜைகள் நடக்கும் என்று…

முலாயம்சிங் யாதவுக்கு சொந்த ஊரில் இறுதி சடங்கு- இன்று பிற்பகல் உடல் தகனம்..!!

உடல் நலக்குறைவு காரணமாக அரியானா குருகிராமில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரியும், சமாஜ்வாடி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் நேற்று காலை மரணம் அடைந்தார்.…

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என கூறிவிட்டு நஷ்ட ஈடு பற்றி பேசுங்கள்!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கூறிய பின்னர் நஷ்ட ஈடு பற்றி கதையுங்கள் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய…

முலாயம் சிங் யாதவ் உடல் முழு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம்..!!

உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரியும், சமாஜ்வாடி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவு காரணமாக அரியானா குருகிராமில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று காலை மரணம்…

நவோதயா பள்ளிகள் தொடங்க தமிழக அரசு தாமதம் செய்து வருகிறது- மத்திய மந்திரி குற்றச்சாட்டு..!!

மத்திய கல்வித்துறை இணை மந்திரி அன்னபூர்ணி தேவி நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் நவோதயா வித்தியாலயா பள்ளிகள் தொடங்க இதுவரை அனுமதி வழங்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. நீட் தேர்வில் உள்ள குறைபாடுகளை களைய மத்திய அரசு தொடர்ந்து…

ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்..!!

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2 பிரிவாக செயல்பட்டு வருகிறது. அடுத்த மாதம் 3-ம் தேதி அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தவ் தாக்கரே அணி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ்…

பிணை முறி மோசடி: அர்ஜுன மகேந்திரன் விடுதலை !!

2015ஆம் ஆண்டு மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி குறித்து தாக்கல் செய்யப்பட்ட 1ஆவது பிணை முறி மோசடி வழக்கின் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன…

சோலார் யுனிவர்ஸ் அங்குரார்ப்பணம் !!

10 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தரைத் தளத்தில் பொருத்தப்பட்ட சோலார் யுனிவர்ஸ் சூரிய மின் நிலையம், மட்டக்களப்பு, வவுணதீவில் இன்று (11) காலை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்தாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர்…

மத்திய வங்கிக்கு பிரதி ஆளுநர் நியமனம் !!

இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநராகவும் நாணயச் சபையின் செயலாளராகவும் கடமையாற்றிய கே.எம்.ஏ.என்.தௌலகல, ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக பதவி உயர்வு பெற்றுள்ளார் என்று, வங்கி, இன்று…

பித்தப்பை கற்களுக்கு தீர்வு உண்டு!! (மருத்துவம்)

கல்லீரலின் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பைதான் பித்தப்பை. கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்துடன் இணைந்துள்ளது. கொழுப்பு வகை உணவுகள் செரிமானமாகத் தேவையான பித்தநீரைச் சேமித்துத் தேவையான வேளையில் குடலுக்குள்…

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடுகள்..!!

திருச்சானூா் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நவம்பர் மாதம் 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை நடக்கிறது. அதையொட்டி கோவிலில் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி…

ஐரோப்பிய மின்சார நெருக்கடி: இலங்கைக்கான படிப்பினைகள்!! (கட்டுரை)

இலங்கை மக்களின் பொருளாதார நெருக்கடிக்கு, முக்கிய பங்களித்தவற்றில் ஒன்று மின்சார நெருக்கடி. இலங்கையின் மின்சார நெருக்கடிக்கு, தற்காலிகமான தீர்வு எட்டப்பட்டுள்ள போதும், இது நிரந்தரமானதோ நீண்டகாலத்துக்கு நிலைக்கக்கூடியதோ அல்ல; எப்போது…

156 ஆவது மாகாண ரீதியாக பொலிஸ் தின நிகழ்விற்கான முன்னாயத்த நடவடிக்கை!! (வீடியோ, படங்கள்)

156 ஆவது மாகாண மட்ட ரீதியாக இடம்பெறவுள்ள பொலிஸ் தின நிகழ்விற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை ஆராய்வதற்காக அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய சிறி கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். எதிர்வரும் சனிக்கிழமை(15)…