;
Athirady Tamil News
Yearly Archives

2022

ஐக்கிய மக்கள் சக்தியின் விஷேட கலந்துரையாடல் இன்று !!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (18) கூடவுள்ளது. குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று (17)…

வடக்கின் புதிய எஸ்டிஐஜி கடமைகளை ஆரம்பித்தார்!! (படங்கள்)

வடக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய கடமைகளைப் பொறுப்பேற்றார். காங்கேசன்துறையில் அமைந்துள்ள வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இன்று காலை 8 மணிக்கு அவர் தனது…

யாழ்மாவட்ட சதுரங்க சங்கத்தின் Jaffna District Chess ஏற்பாட்டில் நொர்தேர்ன் செஸ் ப்ரீமியர்…

யாழ்மாவட்ட சதுரங்க சங்கத்தின் Jaffna District Chess ஏற்பாட்டில் நொர்தேர்ன் செஸ் ப்ரீமியர் லீக் சுற்றுப்போட்டி (NORTHERN CHESS PREMIER LEGUE) நேற்றும் இன்றும், யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் வீதியில் அமைந்துள்ள பூட் களரியில் ( Food Gallery -…

’பொடி மெனிகே’ தடம் புரண்டது !!

இன்று காலை 8.30 மணியளவில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணத்தை ஆரம்பித்த பொடி மெனிகே ரயில், பதுளை ரயில் நிலையத்துக்கு அருகில் சுமார் 8.40 மணியளவில் தடம் புரண்டது. குறித்த ரயிலில் அதிகளவான பயணிகள் பயணித்துள்ளதாகவும்,…

புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் !!

புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாண நிகழ்வு தற்போது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்று வருகின்றது. இதில், புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில், தினேஷ் குணவர்தன - பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்…

நல்லைக்கந்தன் தண்ணீர்ப்பந்தல் உதவும் கரங்கள் அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள்…

நல்லைக்கந்தன் தண்ணீர்ப்பந்தல் உதவும் கரங்கள் அமைப்பினால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டு வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 50 குடும்பங்களிற்கு அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு உதவும் வகையில் கடந்த சனிக்கிழமை உலர்…

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு பௌத்த பிக்கு கடும் எதிர்ப்பு!! (வீடியோ)

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு , பௌத்த பிக்கு ஒருவர் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். பௌத்த பிக்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருந்த போதிலும் , போராட்டக்காரர்களால் பௌத்த பிக்கு போராட்ட களத்தில் இருந்து…

’ஆட்சியை ஓராண்டுக்கு எம்மிடம் வழங்குங்கள்’ !!

நாட்டின் ஆட்சியினை ஒரு வருடத்துக்கு தமிழ்தரப்புக்கு வழங்குமாறு சிங்கள மக்களிடம் கோரிக்கை விடுத்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஒருவருடத்தில் இந்த நாட்டினை நிமிர்த்திக் காட்டுகின்றோம் என்று தெரிவித்தார்.…

’அமைச்சரவை மாற்றத்தை ஏற்க மாட்டார்கள்’ !!

மீண்டுமோர் அமைச்சரவை மாற்றத்தை பொது மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, தற்போதைய காலநிலையில் வெறுமனே தலை மாற்றத்தை ஏற்றுக்கொள்ள பொதுமக்கள் தயாராக இல்லை…

மூர்த்தி சிறிது… கீர்த்தி பெரிது…!! (மருத்துவம்)

பெயரில் சிறியது என்று எளிமையாகக் குறிப்பிடப்படும் தினை, சாமை, குதிரைவாலி, கேழ்வரகு மற்றும் கம்பு போன்ற சிறுதானியங்கள் பலன் தருவதில் பெரியவையாக உள்ளன. ஆரோக்கிய வாழ்வுக்காக இன்று பலரும் தேடிச் செல்லும் உணவாகவும், பலர் பின்பற்ற நினைக்கும்…

ஜனநாயகத்திற்காக யாழில் தீப்பந்த போராட்டம்!! (படங்கள், வீடியோ)

ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் பண்ணைக் கடற்கரையில் இரவு 7 மணியளவில் அமைதியாக ஆரம்பித்த தீப்பந்த போராட்டம் பண்ணைப்…

டீசல், பெற்றோலின் விலைகளை அதிகரித்தது லங்கா ஐ.ஓ.சி.!!

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளது. இதற்கமைய, சகல விதமான பெற்றோல் வகைகளின் விலைகளும் ஒரு லீற்றருக்கு 35…

மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாகப் பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் செவ்வாயன்று பேரணி!!

கொழும்பு - காலி முகத்திடலில் அரசுக்கு எதிராக நடாத்தப்படும் பொதுமக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்துப் பல்கலைக் கழகங்களினதும் ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அடையாளப் பேரணி ஒன்றை நடாத்தவுள்ளது. பொது மக்களின்…

தலைமை ஏற்க தயார்; ரணில் அதிரடி !!

மக்கள் விரும்பினால் இடைக்கால அரசாங்கத்துக்கு தலைமை ஏற்று, நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க தயார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எம்.பி தெரிவித்துள்ளார். போக்குவரத்து சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று…

வவுனியாவில் வாகனங்களை மோதித் தள்ளிக் கொண்டு தப்பிச் சென்ற ஹயஸ் ரக வாகனம்: 4 பேர்…

வவுனியா நகரப்பகுதியில் வேகமாக சென்ற ஹயஸ் ரக வாகனம் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டர் சைக்கிள்களை மோதித் தள்ளிக் கொண்டு தப்பிச் சென்றதில் 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (17.04) மாலை 5.45 மணியளவில்…

ராஜபக்ஷர்களுக்கும் உகண்டாவுடன் தொடர்பு !!

தற்போதைய அரசாங்கம் உகண்டாவுடன் பல பரிவர்த்தனைகளை கொண்டுள்ளது எனவும் ராஜபக்ஷர்கள், அந்நாட்டுடன் பல தனிப்பட்ட பரிவர்த்தனைகளை வைத்திருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான், நேற்று (17) குற்றம்…

சரத் வீரசேகர எடுத்துள்ள தீர்மானம் !!

புதிய அமைச்சரவையில் எந்தப் பதவியையும் ஏற்கப்போவதில்லை என்று முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்தார். நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக இந்த தீர்மானம்…

புதிய அமைச்சரவை குறித்து வௌியான தகவல்!!

புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, புதிய அமைச்சரவை இன்று (17) அல்லது நாளை (18) பதவியேற்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. புதிய…

போராட்டங்களை ஒடுக்க இராணுவம் பயன்படுத்தப்படுமா?

மக்களின் அமைதியான ஜனநாயக போராட்டங்களை ஒடுக்க இராணுவத்தை ஒருபோதும் பயன்படுத்த முடியாது என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்தார். போராட்டக்காரர்களை விரட்ட மேலதிகாரிகளின் உத்தரவுகளுக்கு அமைய இராணுவத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும்,…

காலி முகத்திடலில் தமிழில் தேசிய கீதம் !!

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் பல தளங்களில் முன்னெடுக்கப்படுகின்றது. காலி முகத்திடலில் இன்றும் (17) போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அதில் பங்கேற்றுள்ளவர்கள், நாட்டின் தேசியக் கீதத்தை தமிழ்மொழியில் பாடிக்கொண்டிருக்கின்றனர்.…

போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் அமைக்கப்பட்ட கூடாரங்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டதால் காலியில்…

கொழும்பு - காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்று வரும் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக காலியில் கடந்த 2 நாட்களாக தொடர் ஆரப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் அமைக்கப்பட்ட…

பொலிஸாரின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (police.lk) சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. பொலிஸ் உயரதிகாரி ஒருவர் இதை உறுதிப்படுத்தினார். "அதிரடி" இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து "எல்லாளன்"…

உகாண்டா குற்றச்சாட்டுகள் : செரினிட்டி குழுமத்திற்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை…

உகாண்டாவில் உள்ள செரினிட்டி குழுமத்தின் நிறுவனங்கள் மீது இலங்கையில் தங்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. உகாண்டாவில் உள்ள செரினிட்டி குழுமத்தின் நிறுவனங்களில் பிரதமர் மஹிந்த…

சுமார் 6 கோடி பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு !!

மன்னார் தெற்கு கடலில் நேற்று சுமார் 6 கோடி ரூபா பெறுமதியுடைய கேரள கஞ்சா போதைப் பொருள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 177 கிலோ 60 கிராம் கேரள கஞ்சாப் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.…

நாளை முதல் ஏப்ரல் 20ஆம் திகதி வரை மூன்று நாள்களுக்கான மின்வெட்டு!! (படங்கள்)

நாளை முதல் ஏப்ரல் 20ஆம் திகதி வரை மூன்று நாள்களுக்கான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை திங்கட்கிழமை காலை 8 மணி முதல் இரவு 10.30 மணிவரை சுழற்சி முறையில் 4 மணி 20 நிமிடங்கள் மின்வெட்டு…

யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஆராதனையுடான கூட்டுத்திருப்பலி!! (படங்கள்)

கிறிஸ்வ வாழ் மக்கள் தமது தவக்காலத்தின் நிறைவு நாளினை முன்னிட்டு உயிர்த்த ஞாயிறு கூட்டுத்திருப்பலியினை யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஆராதனையுடான கூட்டுத்திருப்பலி சிறப்பாக இடம்பெற்றன. இதனை முன்னிட்டு வரலாற்றுசிறப்பு…

திருட்டு மாடுகள் இரண்டை சட்டத்துக்குப் புறம்பாக இறைச்சிக்காக வெட்டிய இருவர் கைது!!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள பற்றைக் காணியில் வைத்து திருட்டு மாடுகள் இரண்டை சட்டத்துக்குப் புறம்பாக இறைச்சிக்காக வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால்…

வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு திடீர் இடமாற்றம்!!

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்காரவுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்துக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயந்த வீரசூரிய இடமாற்றப்பட்டுள்ளார். அதனடிப்படையில்…

அடுத்த ஜனாதிபதி நானே… சஜித் !!

நாட்டில் டொலர்கள் இல்லை என்கிறார்கள் . ஆனால் நான் சொல்கிறேன் நாட்டிலுள்ள டொலர்கள் எல்லாம் ராஜபக்சக்கள் சட்டைப்பைக்குள் இருக்கின்றது . திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைகளுக்கு வைத்திய உபகரணங்களை வழங்கி வைத்துப் பேசிய…

“கோட்டா கோ கம” கூடாரத்தை கழற்றியதால் பதற்றம் !!

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன. ​காலிமுகத்திடலில், “கோட்டா கோ கம” கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில், “கோட்டா கோ கம” காலி கிளை நிறுவப்பட்டுள்ளது.…

ஜனாதிபதியை பதவி விலக கோரி காலிமுகத்திடலில் மாந்திரீக பூஜைகள்!! (படங்கள்)

அரசுக்கு எதிராக காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று 9ஆவது நாளாகவும் தொடர்கிறது. ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்ற கோஷங்கள் கடந்த 9ஆம் திகதி முதல் காலிமுகத்திடலில் ஒலித்து வருகின்றன. இந்நிலையில், நேற்றிரவு ஜனாதிபதி…

உறக்கத்தில் உயிரிழந்த சிறுமி 2 மாத கர்ப்பிணி!!

வீட்டில் உறக்கத்தில் உயிரிழந்தார் என பருத்தித்துறை மருத்துவமனையில் சடலமாக ஒப்படைக்கப்பட்ட சிறுமி 2 மாத கர்ப்பிணி என உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையிடப்பட்டுள்ளது. கரவெட்டியைச் சேர்ந்த 18 வயது சிறுமி உறக்கத்தில் சுயநினைவற்று இருந்த…

இலங்கை இராணுவம் வௌியிட்டுள்ள அறிக்கை!!

சில தரப்பினரின் தவறான வழிநடத்தல் மற்றும் தவரான விளக்கங்களினால், படையினர் தொடர்பாக மேற்கொள்ளப்படும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் முயற்சிகளை பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து நாடு முழுவதும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும்…