;
Athirady Tamil News
Yearly Archives

2022

கல்முனை பொலிஸ் நிலையத்தில் புதிய ஆண்டிற்கான பரிசோதனை!!

கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் புதிய ஆண்டிற்கான பரிசோதனை கல்முனை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் லசந்த புத்திகவின் நெறிப்படுத்தலில் நேற்று கல்முனை பொலிஸ்…

பொரளை குண்டு தொடர்பில் சரத் வீரசேகர தகவல் !!

அண்மையில் பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்தின் பேரில் கைது செய்வதை யாரும் தவறு என்று கூற முடியாது. இன்னும் விசாரணைகள் முடியவில்லை. எனவே…

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு !!

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற சரக்கு ரயில், வட்டவளை ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று(11) காலை தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக, மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு மையம்…

இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை !!

கனடாவில் வேலை வாய்ப்பு என சமூக ஊடகங்களில் இடம்பெற்று வரும் போலியான ஆட்சேர்ப்பு மோசடி தொடர்பில் இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் உயர் ஸ்தானிகராலயம் தனது ஒரு ட்விட்டர் செய்தியில்…

வழக்குகளை விரைவாக தீர்க்க சட்டத்தில் திருத்தம்!

குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு வசதியாக குற்றவியல் சட்டத்தில் முன் விசாரணை முறையை ( Justice Ministry is planning to introduce a pre-trial method which would limit delays in law.) அறிமுகப்படுத்துவதற்கு…

மட்டக்களப்பில் கடும் மழை!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் பெரும்போக அறுவடையும் பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்று தொடக்கம் கடுமையான மழை பெய்து…

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது வழித்தட திட்ட அறிக்கை – மத்திய அரசு…

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கம் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட விரிவாக்கத்தில் மூன்று மெட்ரோ ரயில் பாதைகளை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை…

கழுத்தில் சிக்கிய டயருடன் 6 ஆண்டுகளாக அவதிப்பட்ட முதலைக்கு விடிவு…!

இந்தோனேசியாவில் சுலாவேசி மாகாணம் பலூ நகரில் உள்ள ஆற்றில் வாழ்ந்து வரும் ஒரு முதலையின் கழுத்தில் 6 ஆண்டுகளுக்கு முன்பு இருசக்கர வாகனத்தின் டயர் சிக்கியது. முதலை வளரும் போது டயர் கழுத்தை இறுக்கி முதலை இறக்க கூடும் என மக்கள் அச்சப்பட்டனர்.…

’சந்தர்ப்பங்களை கூட்டமைப்பு தவறவிட்டுள்ளது’ !!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்குக் கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் தவறவிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் குற்றம்சுமத்தியுள்ளார். பாராளுமன்றத்தின் நேற்றைய (10) அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,…

புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் நியமனம் !!

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் பதவியேற்றுள்ளார். அமெரிக்காவின் மேற்கு அரைக்கோள விவகாரங்களுக்கான முன்னாள் உதவி இராஜாங்க செயலாளர் இவர் செயற்பட்டிருந்தார். அத்தோடு, கம்போடியா அமெரிக்க தூதரகத்தில் துணைத் தூதராகவும்,…

இன்றைய வானிலை அறிக்கை…!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்…

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு!!

இலங்கைக்கான புதிய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் பாரூக் புர்கி (Umar Farooq Burki) நேற்று (10) கடற்படைத் தலைமையகத்தில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார். பெப்ரவரி 2 ஆம் திகதி அன்று…

இராணுவத்தினரால் கிளிநொச்சியில் சமூகப் பணிகள்…!!

மனிதாபிமானமுள்ள இராணுவத்தினால் கண்ணன் தேவாலய வளாகத்தில் சனிக்கிழமை (05) கிளிநொச்சியை சேர்ந்த 42 வறிய குடும்பங்களுக்கு பிரதேசத்திலுள்ள நன்கொடையாளர்களின் உதவியுடன் உலர் உணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இத்திட்டமானது முல்லைத்தீவு…

STF துப்பாக்கிச் சூட்டில் சமீர சம்பத் பலி!!

மொரட்டுவ, மோதர, ஏகொட உயன பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் பாதாள உலகக்குழு உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் உயிரிழந்தவர் ´Abba´ என்று அழைக்கப்படும்…

சாதி ஏற்ற தாழ்வை நீக்கிய முதல் துறவி ராமானுஜர் – பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்…

ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட ராமானுஜர் சிலையை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு அருகில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது: சுவாமி ராமானுஜரின் இந்த பிரம்மாண்டமான சமத்துவத்தின்…

புதிய வகை கொரோனா உருவாக வாய்ப்பு- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…!!!!!!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 2 ஆண்டுகள் முடிந்து 3-வது ஆண்டாக உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமைக்ரான் என தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. இதையொட்டி உலக சுகாதார அமைப்பு ஏற்பாடு…

கர்நாடகாவில் பிப்ரவரி 14 முதல் பள்ளிகள் திறப்பு – பசவராஜ் பொம்மை…!!

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் சில கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள் குல்லா, ஹிஜாப், பர்தா, புர்கா போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது.…

22 ஆண்டு பணிசெய்த ஊழியருக்கு பென்ஸ் காரை பரிசாக அளித்த தொழிலதிபர்…!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஏ.கே.ஷாஜி என்பவர் மைஜி என்ற மார்க்கெட்டிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் சுமார் 22 ஆண்டாக பணியாற்றி வரும் அனிஷ் தலைமை வணிக மேம்பாட்டு அதிகாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில், அனிஷின் 22…

தீர்ப்பு வரும்வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்ல தடை –…

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ, மாணவியர் சீருடை அணிந்து வரவேண்டும் என அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை…

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 அணில் குரங்குகள் திருட்டு…!!

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த நிலையில் பூங்காவில் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்ட இருப்பிடத்தில் 2 அரிய வகை ஆண் அணில் குரங்குகள் பொதுமக்கள் பார்வைக்காக விடப்பட்டிருந்தன.…

சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது மத்திய அரசு…!!

சர்வதேச அளவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதால் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. இதேபோல், இந்திய அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கையும் இன்று 8.92 லட்சத்தில் இருந்து 7.90 லட்சமாக குறைந்துள்ளது. தினசரி நேர்மறை…

வாடகை பாக்கி வைத்துள்ள சோனியா காந்தி, காங்கிரஸ் அலுவலகம் – ஆர்.டி.ஐ.யில்…

தலைநகர் புதுடெல்லியில் அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் மற்றும் ஜன்பத் சாலையில் அமைந்துள்ள சோனியா காந்தி வீட்டிற்கும் வாடகை செலுத்தவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய வீட்டு…

’சட்டவிரோத மீன்பிடிக்குப் பாதுகாப்புத் தரப்பினர் உதவுகிறார்கள்’ !!

வடக்குக், கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை இல்லாதொழிக்கும் வகையில் நாட்டின் ஏனையப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் வடக்குக், கிழக்குக் கடற் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை ஈடுபடுவதாக தமிழ் தேசிய…

தமிழ் இனத்துக்காக போராடியவர்களை நிம்மதியாக உறங்க விடுங்கள்!!

இனத்துக்காக போராடிய தமிழ் அரசியல் கைதிகளை சிறையில் நிம்மதியாகவாவது உறங்க விடுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேட்டுக் கொண்டார். பாராளுமன்றில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை…

முருங்கைப்பூ மருத்துவம் !! (மருத்துவம்)

முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவையாகும். முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து…

யாழ். பல்கலை – ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்!

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவினால் 26.01.2022 இல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் மேற்படி அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் இலங்கையில் உள்ள சகல அரச பல்கலைக்கழகங்களிலும்…

குவைத் நிதியத்தில் இருந்து மொரட்டுவ பல்கலை. மருத்துவ பீடத்தை நிர்மாணிக்க ஒப்பந்தம்…

அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தின் நிர்வாக மற்றும் நிதி விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் நெதல் ஏ. அல்-ஒலாயன் தலைமையிலான குழுவினர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாணிப்பதற்கும் அவற்றைச்…

வனாத்துவில்லு வெடிபொருட்கள் களஞ்சிய விவகாரம் – மேல் நீதிமன்றில் விசாரணை!!!

புத்தளம் - வனாத்துவில்லு, லக்டோ தோட்டத்தில், வெடிபொருட்களை சேகரித்து களஞ்சியபப்டுத்தும் மற்றும் உற்பத்தி செய்யும் இடமொன்றினை முன்னெடுத்து சென்றமை தொடர்பில், தேசிய தெளஹீத் ஜமாஅத் எனும் தடை செய்யப்பட்ட அமைப்பின் முக்கியஸ்தரான நெளபர் மெளலவி…

வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளர் மீது தாக்குதல்!! (படங்கள்)

வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்ய சென்றவர் மீது அங்கு கடமையில் இருந்த உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள சதொச விற்பனை…

ஜனாதிபதி திரை நீக்கம் செய்யும் வவுனியா பல்கலைக் கழகத்தின் கல்வெட்டில் திடீர் மாற்றம்:…

வவுனியா பல்கலைக் கழகத்தின் திரை நீக்கபகுதியில் இருந்த தமிழ் மொழி கல்வெட்டுக்கு திடீர் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா பல்கலைக் கழகத்திற்கு நாளை (11.02) விஜயம் செய்யும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அதனை அங்குராப்பணம் செய்து…

காரைநகர் – ஊர்காவற்துறை பாதை பழுது – பயணிகள் அவதி!! (படங்கள்)

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதை கடந்த மூன்று தினங்களாக சேவையில் ஈடுபடாமையால் பெரும் இடர்பாடுகள் எதிர்நோக்கப்படுகின்றன. குறிப்பாக, ஊர்காவற்றுறை பிரதேச செயலகம், ஊர்காவற்றுறை…

யாழ்.நகர் மத்தியில் 10க்கும் மேற்பட்டவர்களை கடித்த நாய் – தகவல் தெரிந்தால் மாநகர…

யாழ்.நகர் மத்தி பகுதியில் இன்றைய தினம் கட்டாக்காலி நாய் ஒன்று வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்டித்துள்ளது. யாழ்.நகர் மத்தியில் கஸ்தூரியார் வீதி , மின்சார நிலைய வீதி என்பனவற்றில் இன்று வியாழக்கிழமை…

மேலும் 31 பேர் பலி!!

கொவிட் தொற்றுக்கான மேலும் 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையின் படி குறித்த மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில்…