;
Athirady Tamil News
Monthly Archives

January 2023

மகாத்மா காந்தியின் 75 வது நினைவு தினம்!! (PHOTOS)

யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் மகாத்மா காந்தியின் 75 வது நினைவு தினம் இன்றைய தினம் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது யாழ்ப்பாண வைத்தியசாலையில் முன்றலில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் மாலை…

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களின் தலைவியாக கருதப்படும் பெண் மோதரையில் கைது!!

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரராகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களின் தலைவியாகவும் கருதப்படும் பெண் ஒருவர் நேற்று (ஜன 29) மோதரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர். சந்தேக…

கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலை மீட்கும் பணிகள்…

கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடலில் தீப்பிடித்து எரிந்த எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பலை துண்டாக்கி மீட்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் 2021 ஆம் ஆண்டு மே மாதம்…

பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள பாக்.கில் பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு!!

பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரிப்பு, அன்னியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சி ஆகியவை பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கொடுக்க இருந்த ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 200 கோடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை…

ஹிருணிக்காவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வருகிறது!

கொழும்பின் தெமட்டகொட பிரதேசத்தில் 2015ஆம் ஆண்டு இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தடுத்து வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் பெப்ரவரி…

தமிழ் அரசு கட்சியின் வேட்பாளருக்கு கொலை அச்சுறுத்தல்!!

தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, வேட்பாளர் அற்புதம் சற்குணதாஸ் தெரிவித்தார். இவர், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் அரசு கட்சி சார்பில் போட்டியிடுகின்றார். திடீர்…

மண் காப்போம் இயக்கத்திற்காக 50 வயதில் 7,000 கி.மீ சைக்கிள் ஓட்டிய சாதனை பெண்மணி!!

மண் காப்போம் இயக்கம் குறித்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 50 வயதான நதாலி மாஸ் அவர்கள் பிரான்ஸ் முதல் கோவை வரை 7 ஆயிரம் கி.மீ சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். கடந்தாண்டு ஜூன் 21-ம் தேதி தனது சொந்த…

வடமராட்சி கிழக்கில் கடலில் நீராடிய 15 வயது சிறுவனை காணவில்லை!

யாழ்ப்பாணம், மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் கடலில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நீராடச் சென்ற மூவரில் 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். காணாமல் போன சிறுவன் நாகர்கோவில் கிழக்கு நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் என…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,759,130 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.59 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,759,130 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 674,815,191 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 646,947,876 பேர்…

ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வருகை எதிரொலி: கடும் பாதுகாப்பு- வாகனங்கள் சோதனை…

சென்னையில் ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை ஜி20 கல்வி பணிக்குழு முதல் கூட்டம் நடைபெறுகிறது. அதில் 20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். இவர்கள் அனைவரும் பிப்ரவரி 1ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள…

கிர்கிஸ்தான் நாட்டில் பலத்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆக பதிவானது!!

கிர்கிஸ்தான் நாட்டில் பிஸ்கெக் நகரில் இருந்து 726 கி.மீ. தொலைவில் காலை 5.19 மணிக்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆக பதிவாகியுள்ளது.

போலி இலக்கத்தகடுடனான மோட்டார் சைக்கிள் சிக்கியது!!

மோட்டார் வாகன திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத போலி வாகன இலக்கத்துடனான மோட்டார் சைக்கிளொன்றை நிறுத்திவிட்டு மாயமான இருவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகில் குறித்த மோட்டார் சைக்கிள்…

ATM மோசடி; 22 வயது இளைஞன் கைது!!

குருநாகல் நகரில் மேற்கொள்ளப்பட்ட ATM கொள்ளை சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கொட்டிகாபால பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், நேற்று (29) 6 வங்கி அட்டைகளுடன் குருநாகலில் கைது செய்யப்பட்டதாகவும்…

காஷ்மீரின் லால் சவுக்கில் தேசியக் கொடி ஏற்றிய ராகுல் காந்தி!!

காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அரியானா, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம்,…

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.48 கோடியாக அதிகரிப்பு!!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.48 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை…

26 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் நியமனம்!

பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில் அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அவர்களில் இருபத்தாறாயிரம் பேர் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த…

சுதந்திர தினத்தை புறக்கணிக்க TNA தீர்மானம்!!

இந்த ஆண்டு சுதந்திர தினத்தை புறக்கணிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழ் மக்களுக்கு உரிய முறையில் இன்னும் சுதந்திரம் கிடைக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது…

பிரதமர் பதவி கொடுத்தாலும் பா.ஜ.க.வுக்கு செல்ல மாட்டேன் – சித்தராமையா!!

ராமநகர் மாவட்டம் மாகடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: என்னை இந்து விரோதி என்று பா.ஜ.க.வினர் சொல்கிறார்கள். அக்கட்சியைச் சேர்ந்த சி.டி.ரவி என்னை சித்ராமுல்லா கான் என்று…

முட்டைகளின் விலையில் வீழ்ச்சியா?

பல்பொருள் அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் முட்டைகளின் விலை குறைவடைந்துள்ளது. 10 முட்டைகள் 650 ‌ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அதன் விலை 21 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. இதன்படி 10 முட்டைகள் 520 ரூபாய்க்கு…

போதைப்பொருள் சுற்றி வளைப்புகள்; 285 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (29) மேற்கொண்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் போதைப்பொருளுடன் 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. போதைப்பொருள் வர்த்தகர்கள் கைது செய்யும் முகமாக நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட…

கம்பஹா வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் சாரதி போதைப்பொருளுடன் கைது!

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கம்பஹா பொது வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் சாரதி ஒருவர் யாகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட அம்பியூலன்ஸ் சாரதி நீண்டகாலமாக…

பெரு அதிபருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு!!

தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. 2020-ம் ஆண்டில் அந்த நாடு 5 நாளில் 3 அதிபர்களைக் கண்டது. பெரு அதிபர் டீனா பொலுவார்டே பதவி விலகக் கோரி தலைநகர் லிமாவில் மாபெரும் போராட்டம்…

வினாத்தாள் கசிவு எதிரொலி – குஜராத் அரசுப் பணிக்கான எழுத்து தேர்வு ரத்து!!

குஜராத் மாநில பஞ்சாயத்து தேர்வு வாரியம் சார்பில் 1,181 கிளார்க் பணியிடங்களுக்கு நேற்று எழுத்து தேர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக ஒன்பதரை லட்சத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் இந்த தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது…

கத்தோலிக்க மக்கள் நீதிக்காக போராடவேண்டும் – கர்தினால் மல்கம் ரஞ்சித்!!

கத்தோலிக்க மக்கள் நீதிக்காக போராடவேண்டும் என கர்தினால் மல்கம்ரஞ்சித் வேண்டுகோள்விடுத்துள்ளார். இன்றைய திருச்சபைக்கு தியாகம் செய்யும் கத்தோலிக்கர்கள் தேவையில்லை நீதிக்காக போராடும் பாமர மக்களே தேவை என கர்தினால் தெரிவித்துள்ளார்.…

பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் என சந்தேகிக்கப்படும் 6 பேர் மதுபோதையில் கண்டியில் கைது!

பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பிக்குகள் என சந்தேகிக்கப்படும் 6 இளைஞர்கள் மதுபோதையில் கண்டி நகரில் வைத்து கைது செய்யப்பட்டதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று (ஜன 30) அதிகாலை கண்டி தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி ரசிக…

தேர்தலுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமே தவிர தேர்தல் நடத்தப்படமாட்டாது – குமார…

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமே தவிர தேர்தல் நடத்தப்படமாட்டாது. தேர்தலை நடத்தினால் படுதோல்வி அடைவது உறுதி என்பதால் அரசாங்கம் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நிச்சயம் பிற்போடும் என பாராளுமன்ற உறுப்பினர்…

தேர்தலுக்கு அரசியல்வாதிகள் தயார்,மக்கள் தயாரில்லை – மஹிந்த அமரவீர!!

அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு தயார் ஆனால் நாட்டு மக்கள் தேர்தலுக்கு தயார் இல்லை. நிதி நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் தீவிரமடையும் பொருளாதார பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது என விவசாயத்துறை…

ஈரான் ராணுவ தொழிற்சாலையில் டிரோன் தாக்குதல்!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வருகிறது. இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆயுதங்களை வழங்குவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது. அதுமட்டுமின்றி ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் மத்திய கிழக்கு…

24 மணிநேரத்தில் கொன்று குவிக்கப்பட்ட 850 ரஷ்ய துருப்புகள் !!

கடந்த 24 மணிநேரத்தில் 850 ரஷ்ய துருப்புகள் கொன்று குவிக்கப்பட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் இராணுவம் வெளியிட்ட தகவலில், 1 இலட்சத்து 24 ஆயிரம் ரஷ்ய துருப்புக்கள் பலி உக்ரைன் மீதான போர் தொடங்கி இன்றுடன்…

75ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஒருவார காலத்துக்கு தேசிய கொடி ஏற்றுவதற்கு அரசாங்கம்…

நாட்டின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அரச நிறுவனங்கள் அமைந்திருக்கும் கட்டிடங்களில் ஒருவார காலத்துக்கு தேசிய கொடியை ஏற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் பெப்ரவரி 4 ஆம் திகதி இடம்பெறும் 75ஆவது சுதந்திர…

பொருளாதார பாதிப்புக்கு விரைவான தீர்வின்றேல் நாட்டுக்கு எதிர்காலம் கிடையாது -ஹர்ஷ டி…

தேசிய மட்டத்திலான பொருளாதார வரைபுகளுக்கு அமைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. பொருளாதார பாதிப்புக்கு விரைவாக தீர்வு காணாவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் என்பதொன்று கிடையாது.பொருளாதார மீட்சிக்கான திட்டம் எம்மிடம் உள்ளது என…

யாழ் சாரண ஆணையாளராக மேலதிக மாவட்ட செயலர் எம். பிரதீபன்!!

யாழ் சாரண ஆணையாளராக மேலதிக மாவட்ட செயலர் எம். பிரதீபன் யாழ்ப்பாண சாரணர் மாவட்டத்தின் புதிய சாரண ஆணையாளராக யாழ் மாவட்ட மேலதிக மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.…

பட்ஜெட் வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றியதா? – மத்திய அரசின் தரவுகள் என்ன சொல்கின்றன?

இந்தியாவில் பாஜக தலைமையிலான அரசு 2024ஆம் ஆண்டு தேர்தல்களை நடத்துவதற்கு முன்னதாகத் தனது கடைசி முழு பட்ஜெட்டை அடுத்த மாதம் தாக்கல் செய்கிறது. ஓராண்டுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் இருந்து என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைத்…

அமெரிக்க ரொக்கெட் ஏவுதளம் மூலம் உக்ரைன் மருத்துவமனை மீது தாக்குதல் – போர்க்குற்றம்…

உக்ரைன் மீதான ரஷ்யா இராணுவ ஆக்கிரமிப்பை தடுக்க உக்ரைன் பல கோணங்களில் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றது. இந்தநிலையில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள ஒரு வைத்தியசாலை மீது உக்ரைன் ஏவுகணைத் தாக்குதலை…