;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

உயர்தர மாணவர்களுக்கு அநீதி – ஆசிரியர் சங்கம் பகிரங்கம்..!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தாமதமாவதால், பரீட்சார்த்திகள் பாரிய அநீதிக்கு உள்ளாகி வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சர் முன்மொழிந்த கொடுப்பனவுகளில் இருந்து ஆயிரம் ரூபாவைக்…

தொடர் வீழ்ச்சியில் தங்கத்தின் விலை..!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 638,284.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த இரு மாதங்களாக தங்கத்தின் விலை…

மீண்டும் கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு – வழங்கப்பட்ட விசேட கடிதம் !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதியை தீர்மானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது. இது தொடர்பில் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு நிதி அமைச்சின் செயலாளர், அரசாங்க அச்சக மா அதிபர், காவல்துறைமா அதிபர்…

சாதகமாக அமைந்துள்ள ஐ.எம்.எஃப் உதவி – அத்தியவசிய பொருட்களின் விலை தொடர்பில்…

நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள இருதரப்பு மற்றும் பலதரப்பு பேச்சவார்த்தைகள் சாதகமாக உள்ளதாகவும் இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பை முழுமையாக வரவேற்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர்…

இலங்கைக்கு பெருந்தொகை கடனை வழங்க உலக வங்கி இணக்கம்..!

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு பெருந்தொகை கடனை வழங்க உலக வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளது. அடுத்த இரண்டு வருடங்களுக்கு இலங்கைக்கு கிட்டத்தட்ட ஒன்றரை பில்லியன் டொலர்களை வழங்க உலக வங்கி இணங்கியுள்ளது. கடந்த வாரம் உலக…

யாழ் போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான இன்சுலின் ஊசி மருந்துகள் வழங்கி வைப்பு!!…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்திற்கு ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான சிறுவர்களுக்கான இன்சுலின் ஊசி மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டது. கனடா நாட்டைச் சேர்ந்த நேயம் பவுண்டேஷனின் நிதி உதவியில் மருந்து பொருட்கள் இன்று…

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீரங்கானைகள் உலக சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு…

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீரங்கானைகள் கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இவ்வாண்டுக்கான உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டி கிரீஸ்…

அமெரிக்காவில் நடுவானில் குலுங்கிய விமானம்!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து 469 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு விமானம் ஜெர்மனிக்கு புறப்பட்டது. கிளம்பிய சிறிது நேரத்துக்கு பிறகு நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் திடீரென பயங்கரமாக குலுங்கியது. இதில் பயணிகள் ஒருவர் மேல்…

கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவியை பழிவாங்க காதலனின் மனைவியை திருமணம் செய்த தொழிலாளி!!

பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் உள்ள ஹதியா கிராமத்தை சேர்ந்தவர் நீரஜ். இவரது மனைவி ரூபிதேவி. இவர்களுக்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்த தம்பதியினரின்…

அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற மனித உரிமை போராளி அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு 10 ஆண்டு சிறை !!

பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை போராளி அலெஸ் பியாலியாட்ஸ்கி. வக்கீலான இவர் பெலாரசில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் 1980-களில் நடைபெற்ற போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர் ஆவார். பெலாரசில் ஜனநாயகம் வலுப்படவும் அமைதி…

மேகாலயாவில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் முதலமைச்சர் கான்ராட் சங்மா!!

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் முதலமைச்சர் கான்ராட் சங்மா தலைமையில் என்.பி.பி. என்னும் தேசிய மக்கள் கட்சி, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அங்கு 60 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 27ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல்…

மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஊழல் வழக்கில் விடுதலை!!

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக். இவர் கடந்த 2009-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதும் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கு 1எம்.டி.பி. என்ற பெயரில் மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவினார். அரசின் முதலீட்டு நிறுவனமான…

கர்நாடகாவில் லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகன் சிக்கினார்… வீடு, அலுவலகத்தில் இருந்து…

கர்நாடகாவின் சன்னகிரி தொகுதி பாஜக எம்எல்ஏவான மதல் விருபாக்ஷப்பா, கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், இந்த நிறுவனத்துக்கு மூலப்பொருள் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை தனி நபர் ஒருவர் கோரி…

இந்தோனேசியாவில் பயங்கர விபத்து- எரிபொருள் சேமிப்பு கிடங்கில் தீப்பற்றியதில் 16 பேர் பலி!!

இந்தோனேசியா நாட்டின் தெற்கு பபுவா மாகாணம் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான மிகப்பெரிய எரிபொருள் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்தோனேசியாவின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையில் 25 சதவிகிதம் இங்கிருந்து தான் விநியோகிக்கப்படுகிறது.…

அரசாங்கத்தின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது அரசாங்கத்தின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது!!

தேர்தலில் முறைகேடு செய்யும் அரசின் முயற்சியை முறியடிக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளதோடு, உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு பணம் விடுவிக்கப்படாமல் இருக்க அரசாங்கம் மேற்கொண்ட சதி இதன் மூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக…

கொழும்பு சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு – இன்று மூடப்படும் வீதி!

இன்று (04) காலை 09 மணி முதல் நாளை (05) நண்பகல் 12 மணி வரை மூடப்படும் வீதியொன்று தொடர்பில் பொலிஸார் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர். வெல்லம்பிட்டிய சந்தியில் இருந்து கொலன்னாவை சந்திக்கு செல்லும் வீதியே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக பொலிஸார்…

இன்று முதல் மழை அதிகரிப்பு!!

நாட்டில் இன்று முதல் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி, வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில், இடைக்கிடையே 75 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை…

24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை!!e

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இன்று (4) பிற்பகல் 2:00 மணி முதல் நாளை (5) பிற்பகல் 2:00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 1 முதல் 4…

இலவச பேருந்துகள் மின்சார பேருந்துகளாக மாற்றம்- திருப்பதி தேவஸ்தானம் முடிவு!!

திருப்பதி மலையில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில், இலவச பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்ற தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதி மலையில் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக, தேவஸ்தானம் சார்பில், 10 இலவச பேருந்துகள் 24 மணி…

டெல்லி அரசுப் பள்ளிகளில் மணீஷ் சிசோடியா ஆதரவு பிரசார இயக்கமா? பாஜகவின் குற்றச்சாட்டுக்கு…

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். கல்வி உட்பட 18 இலாகாக்களை தன் வசம் வைத்திருந்த சிசோடியா, தன் மீதான நடவடிக்கையை தொடர்ந்து அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார். கைது…

மாதவிடாய்க்கு விடுமுறை – பெண்களுக்காக நிறைவேறிய புதிய சட்டம் !!

பெண்களுக்கு ஊதியத்துடன் மாதவிடாய் விடுமுறை அளிக்கும் முதல் ஐரோப்பிய நாடாக ஸ்பெயின் பெருமை பெற்றுள்ளது. ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் கருக்கலைப்பு மற்றும் திருநங்கைகளின் உரிமைகள், பாலியல் மற்றும் இனப்பெருக்க உரிமைகளுக்கான சட்டங்கள் தொடர்பான…

பேருந்து கவிழ்ந்து விபத்து- டெல்லி பல்கலை. மாணவி உயிரிழப்பு, 40 பேர் காயம்!!

டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கமலா நேரு கல்லூரி மாணவிகள் இமாச்சல பிரதேச மாநிலம் மணாலிக்கு சுற்றுலா சென்றனர். சுமார் 35 மாணவிகள், 6 ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட 44 பேர் பேருந்தில் பயணித்தனர். அவர்களின் பேருந்து பிலாஸ்பூர் மாவட்டத்தில்…

வலுக்கும் உக்ரைன் யுத்தம்! ரஷ்யா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு !!

உக்ரைனுடன் அமைதி பேச்சு வார்த்தையை நடத்துவதற்கு ரஷ்யா தயாராக இருப்பதாகவும், ஆனால் உக்ரைனில் கைப்பற்றிய பகுதிகளை விட்டுத்தர மாட்டோம் ரஷ்யா அதிரடியாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய அதிபரின் செய்தித்தொடர்பாளர்…

டெல்லியில் நடந்த குவாட் அமைப்பு கூட்டம்- சீனா மீண்டும் எதிர்ப்பு!!

இந்தோ - பசிபிக் கடற் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுத்து, பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துக்காக குவாட் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் இணைந்து உருவாக்கிய குவாட் அமைப்புக்கு…

இரகசிய காதலி, குழந்தைகளுடன் ஆடம்பர பண்ணையில் வசிக்கும் புடின்!!

ரஷ்ய அதிபர் புடின் தனது இரகசிய காதலி மற்றும் குழந்தைகளுடன் ரூ.990 கோடி மதிப்பிலான ஆடம்பர பண்ணை வீட்டில் வசித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றது. ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா (வயது 39) ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ரஷிய அதிபர்…

தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீடு வழக்கு: குட்கா நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு…

கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஆண்டு தோறும்…

வடகொரியாவில் புதிய நாய் இறைச்சி கடைகளுக்கு அனுமதி !!

வடகொரியாவில் கடுமையான உணவு த்டுப்பாடு ஏற்பட்டுள்ளாக தெரிவிக்கப்படும் நிலையில் அந்நாட்டில் புதிய நாய் இறைச்சி கடைகளுக்கு (Dog Meat Delicacy House) அதிபர் கிம் ஜாங் உன் அனுமதி வழங்கியுள்ளார். அதிபர் கிம் தலைமையில் நடைபெற்ற விவசாய உச்சி…

சென்னை ஐகோர்ட்டுக்கு 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம்!!

சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள எஸ்.ஸ்ரீமதி, டி. பரத சக்கரவர்த்தி, ஆர்.ஜெ.விஜயகுமார், முகமது ஷபிக், சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க…

உக்ரைன் விடயத்தில் அமெரிக்காவின் ஆதரவு – ரஷ்யாவுக்கு நேரடி செய்தி !!

உக்ரைன் யுத்தம் நீடிக்கும் வரை அந்த நாட்டிற்கு தாம் ஆதரவு வழங்குவோம் என ரஷ்யாவிடம் அமெரிக்கா நேரடியாக தெரிவித்துள்ளது. ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லவ்ரோவை சந்தித்த போது அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கன் இதனைக் கூறியுள்ளார்.…

சேந்தமங்கலத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலம்- 400 காளைகள் , 300 மாடு பிடி வீரர்கள்…

நாமக்கல் மாவட்ட சேந்தமங்கலத்தில் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இப்பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்தப்படாத நிலையில் இன்று சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு விழா சங்கம் சார்பில்…

உலகின் நம்பர் வன் சொகுசு விடுதி!!

டுபாயில் கடந்த ஜனவரி மாதம் Atlantis the Royal என்ற புதிய சொகுசு விடுதி ஒன்று மக்கள் உபயோகத்திற்குத் திறக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கி மிகச் சொகுசாக இந்த விடுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விடுதியில் மொத்தம் 795 அறைகள்…

திமுக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும் என்று திருமாவளவன் முடிவு செய்துவிட்டார் –…

திருச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: விசிகவின் கோட்டையாக சொல்லப்படும் கடலூர் மாவட்டத்திலேயே பாஜக நன்றாக வளர்ந்து வருகிறது. கூட்டணிக் கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக திருமாவளவன் சொல்வது தவறானது.…

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவு..!

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 50,000க்கும் அதிகமானோரை காவு வாங்கியது. துருக்கி, சிரியாவில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச நாடுகள் துருக்கி,…