;
Athirady Tamil News
Monthly Archives

May 2023

உத்தவ் தாக்கரே, சரத் பவாருடன் நிதிஷ்குமார் சந்திப்பு!!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில் பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சி தலைவர்…

சீனாவில் ஊழலில் சிக்கிய 1 லட்சத்து 10 ஆயிரம் அதிகாரிகளுக்கு தண்டனை- அரசு அதிரடி…

சீனாவில் ஜின்பிங் தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியில் உள்ளது. இங்கு ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை தொடங்கி விசாரணை மேற்கொண்டார். ஊழல் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்தது. இந்த புகார்களின் அடிப்படையில் ஊழல் வழக்கில் 1…

வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சுவீடன் உள்பட 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!!

இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் வங்காளதேசம், சுவீடன் மற்றும் பெல்ஜியம் ஆகிய 3 நாடுகளுக்கு 6 நாட்கள் வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி…

இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கியது இஸ்லாமாபாத் ஐகோர்ட்!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70), இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை சுற்றி வளைத்து துணை ராணுவத்தினர் கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அல் காதிர் அறக்கட்டளை…

பால் மாவின் விலை மீண்டும் குறைகின்றது !!

எதிர்வரும் மே 15ஆம் திகதி முதல் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 200 ரூபாயால் குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்துடனான கலந்துரையாடலின்…

காணாமல் போன இளம் பெண் கொலை?

கம்பளை, எல்பிட்டிய பிரதேசத்தில் 22 வயதுடைய இளம் பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடம் ஒன்றை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். மேலும் குறித்த இடத்தை அகழ்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த பகுதி…

பிரதமர் மோடி இன்று குஜராத் செல்கிறார் – ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை…

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு இன்று செல்கிறார். குஜராத்தின் காந்தி நகரில் ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இன்று காலை 10.30 மணிக்கு காந்தி நகரில் நடைபெறும் அகில இந்திய கல்வி சங்க…

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் ஏழு பதக்கம் வென்ற இலங்கை!!! (PHOTOS)

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கையை சேர்ந்த ஏழு வீர, வீராங்கனைகள் பதக்கங்களை சுவீகரித்துள்ளனர். இலங்கை மிக்ஸ் போக்சிங் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.நந்தகுமார் தலைமையில் சென்ற வீர, வீராங்கனைகள் ஜந்து தங்கப்பதக்கம் களையும் இரண்டு வெள்ளி…

ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அவகாசம் தேவை: ஜெலன்ஸ்கி சொல்கிறார்!!

ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலுக்கு தயாராவதற்கு உக்ரைன் படைகளுக்கு காலஅவகாசம் தேவை என்று அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே 14 மாதங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகின்றது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி…

Nayanthara – குடிக்கு அடிமையான நயன்தாரா… இவர்தான் திருத்தியதா?.. எல்லை மீறிய…

Nayathara (நயன்தாரா) நடிகை நயன்தாரா குடிக்கும், புகைக்கும் கடுமையாக அடிமையாகியிருந்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார். கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தவர் நயன்தாரா. அதனையடுத்து தமிழில் ஐயா படத்தின்…

“டச் பண்ணாதீங்க”.. அவசரப்பட்டு “அதை” மட்டும் தொட்டுடாதீங்க..…

லட்சம் முதல் கோடி ரூபாய் வரை பணத்தை மோசடி கும்பலிடம் இழந்து கொண்டிருக்கிறார்கள் அப்பாவிகள்.. இதற்காகவே, முக்கிய வார்னிங் ஒன்றை போலீசார் விடுத்துள்ளனர். கடந்த 2 நாட்களாகவே சைபர் கிரைம் போலீசார், பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்து…

குற்றவாளிகள் மாஜிஸ்திரேட்டுகளை தாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை – கேரள ஐகோர்ட்டு…

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில், ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றி வந்தவர் டாக்டர் வந்தனா தாஸ் (23). கடந்த 9-ம் தேதி இரவு பணியில் இருந்தபோது, பூயப்பள்ளி பகுதியில் வீட்டில் தகராறு செய்த சந்தீப் என்ற வாலிபரை…

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி சந்திக்கு அண்மையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சீல்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி சந்திக்கு அண்மையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய யாழ்.மாநகர சபை பொது சுகாதார பிரிவினரால் , சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வாங்கிய கொத்து றொட்டியினுள்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,873,389 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.73 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,873,389 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 688,119,252 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 660,523,119 பேர்…

அக்னி வீரர்களுக்கு ரெயில்வே வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு!!

முப்படைகளில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்வதற்காக, 'அக்னிபத்' திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு 25 சதவீத வீரர்கள் மட்டும் பணியில் நீடிக்கலாம். மற்றவர்கள் பணியில் இருந்து…

அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட 28 இலட்சம் புலம்பெயர்வாசிகள் !!

அமெரிக்காவில் இருந்து 28 இலட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு புதிய கொள்கையை…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி யாழ் பல்கலைக்கழகத்தில்!!…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று (12) ஆரம்பமானது.…

பிரதமரின் ‘மன் கி பாத்’ ஒலிபரப்பை கேட்காததால் 36 நர்சிங் மாணவிகள் மீது ஒழுங்கு…

சண்டிகார் மாநிலத்தில் உள்ளது பிஜிமர் தேசிய நர்சிங் கல்வி மையம். மத்திய அரசு கல்வி நிறுவனமான இங்கு கடந்த 30-ந் தேதி பிரதமர் மோடி வானொலியில் பேசிய 100-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சி ஒலிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கல்லூரியில் படிக்கும்…

உக்ரைனுக்கு வந்து சேர்ந்த நவீன யுத்த விமானங்கள் !!

சோவியத் தயாரிப்பான MiG-29 ஜெட் விமானங்களை 14 ஐ உக்ரைன் பெற்றுள்ளது, இது உக்ரைனின் பாதுகாப்பு திறன்களை மேலும் வலுப்படுத்தும் என போலந்து தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான போலந்தின் நிரந்தரப் பிரதிநிதித்துவம், உக்ரைனுக்கு இதுவரை…

இலங்கை கடற்படை வரலாற்றில் திருப்புமுனை !!

கடற்படை வரலாற்றில் முதன்முறையாக பெண் மாலுமிகள் கடல் கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் வரலாற்றில் முதல் தடவையாக, இரண்டு (02) பெண் அதிகாரிகள் மற்றும் ஐந்து (05) பெண் மாலுமிகள் அடங்கிய முதல் தொகுதி பெண் கடற்படையினர்…

கூடாரமொன்றில் இரவைக் கழித்த இளம் பெண் உயிரிழப்பு !! (வீடியோ)

கொஸ்லாந்தை - உடதியலும பகுதியில் கூடாரம் அமைத்து இரவுப் பொழுதை கழித்த இளம் ஜோடியை காட்டு யானை தாக்கியதில், யுவதி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தனுஷ்க மற்றும் இயூஜின் (23)…

கருத்துக்கணிப்பு எதிரொலி: நாளை தேர்தல் முடிவு வெளியாகும் நிலையில் காங்கிரஸ் தலைவர்கள்…

கர்நாடக சட்டசபைக்கு இதற்கு முன்பு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அதில் பா.ஜனதா 104 இடங்களிலும், காங்கிரஸ் 80 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) 37 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். ஆட்சி அமைக்க 113 தொகுதிகள்…

கனடாவில் விளையாட்டு ரசிகருக்கு அடித்த அதிஷ்டம் !!!

கனடாவில் விளையாட்டு ரசிகர் ஒருவருக்கு பேரதிஷ்டம் கிடைக்கப் பெற்றுள்ளது. பேஸ்போல் விளையாட்டில் ஆர்வம் கொண்ட நபர் ஒருவர் பெருந்தொகை பணத்தை பரிசாக வென்றுள்ளார். கனடாவின் பிரபல பேஸ் போல் கழகமாக உள்ள ப்ளு ஜேய்ஸ் கழகத்தின் தீவிர ரசிகர் ஒருவரே…

கண் சத்திரசிகிச்சையில் கிருமி தொற்றுக்குள்ளான 30 பேர் கொழும்புக்கும்,கண்டிக்கும் மாற்றம்!!

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட 10 நோயாளர்களின் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஏப்ரல் மாதம் 05 சத்திரசிகிச்சைக்குள்ளான 32 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன.…

யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.!! (PHOTOS)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடம், தொண்டமனாறு , வடமராட்சி , நாவற்குழி என பல்வேறு பகுதிகளிலும்…

கர்நாடக சட்டசபை தேர்தல்: 34 மையங்களில் நாளை ஓட்டு எண்ணிக்கை!!

கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. மொத்தம் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் 5 கோடிக்கும் அதிகமாக வாக்காளர்கள் ஓட்டுப்போட்டனர். இதில் மொத்தம் 73.19 சதவீத வாக்குகள் பதிவாயின. வாக்குகள்…

கனடாவில் பதற வைக்கும் துப்பாக்கி சூடு -காவல்துறை உயிரிழப்பு !!

கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒன்ராறியோ பிராந்திய காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டாவா நகருக்கு கிழக்கே உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து இந்த துப்பாக்கி சூடு…

தொங்கு சட்டசபை அமைந்தால் அரசியல் ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம்: மந்திரி ஆர்.அசோக் !!

வருவாய்த்துறை மந்திரியும், பத்மநாபநகர், கனகபுரா தொகுதிகளின் பா.ஜனதா வேட்பாளருமான ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக…

யாழில். கிணற்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்றைய தினம் வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஆ. நியாளினி (வயது 37) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்…

யாழில் நுங்கு திருட்டு அதிகரிப்பு – கட்டுப்படுத்த கோரியுள்ள பனங்காணி உரிமையாளர்கள்!!

யாழ்ப்பாணத்தில் நுங்கு திருட்டுக்கள் அதிகரித்துள்ளதாகவும் , அதனை கட்டுப்படுத்த உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காணி உரிமையாளர்கள் கோரியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நிலவும் வெப்பமான கால நிலைமை காரணமாக நுங்கு க்கு கடும்…

வடக்கு, கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் விடுத்துள்ள அறிக்கை!!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைக்கு போகும் கட்சிகளுக்கு வடக்கு, கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் வேண்டுகோளொன்றை விடுத்துள்ளது. இது தொடர்பில் வடக்கு, கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின்…

போதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட குற்றம் – 2 மாத சிறைத்தண்டனை விதித்த…

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கைதான இளைஞனுக்கு யாழ். நீதவான் நீதிமன்று 2 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியமை , தலைக்கவசம் அணியாமை , சாரதி அனுமதி பத்திரம்…

யாழில். டெங்கு ஒழிப்பு செயற்திட்டம்!!

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தை யாழ்.மாவட்ட செயலகம் முன்னெடுக்கவுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி மற்றும் 17ஆம் திகதிகளில் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் மாவட்டம் முழுவதுமாக…

டுவிட்டருக்கு புதிய சிஇஓ நியமனம் – எலான் மஸ்க் !!

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கியதில் இருந்து அதில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தார். எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் புதிய கார்ப்பரேட் திட்டங்கள் பற்றிய அறிவிப்பை இரவு நேரத்திலோ அல்லது…