;
Athirady Tamil News
Monthly Archives

May 2023

முதலாவது பொதுக்கூட்டத்தில் !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, போராட்டத்தினால் பதவியை இராஜனாமா செய்ததன் பின்னர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மே தினமான இன்று (01) முதலாவது பொது கூட்டமொன்றை நடத்தியது. அதில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, முன்னாள் அமைச்சர் பசில்…

முல்லைத்தீவில் புத்தரை சேதப்படுத்தியவர் கைது !!

முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம்பகுதியில் அமைந்துள்ள பௌத்த சிலை ஒன்றினை சேதப்படுத்திய சந்தேகத்தில் ஒருவரை கொக்கிளாய் பொலிஸார் இன்று (01) கைதுசெய்துள்ளனர். கொக்குளாய் மேற்கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள முகத்துவாரம் பகுதியில்…

யாழில் நிறுத்தாமல் சென்ற டிப்பர் வாகனம் மீது அதிரடிப் படையினர் துப்பாக்கிச் சூடு!!

வடமராட்சி கிழக்கில் அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு சோதனையின் போது நிறுத்தாமல் சென்ற டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச் சூட்டை நடாத்தியுள்ளனர். வடமராட்சி பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின்…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை 68.71 கோடியாக…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.71 கோடியாக…

ஆபரேஷன் காவேரி – சூடானில் இருந்து இதுவரை 2300 பேர் மீட்பு!!

இந்திய விமான படைக்கு சொந்தமான ஏ சி-130 ரக விமானத்தில் 40 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். ஆபரேஷன் காவேரி துவங்கப்பட்டதில் இருந்து சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா வந்தடைந்த எட்டாவது விமானம் இது ஆகும். இதன் மூலம் சூடானில் இருந்து…

புதிய ஐனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி!! (PHOTOS)

புதிய ஐனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் சர்வதேச உழைப்பாளர் தின நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று மாலை 4 மணியளவில் கல்வியங்காடு புதிய செம்மணி வீதிச் சந்தியில் இருந்து மே தினப் பேரணி ஆரம்பமாகி நல்லூர் சங்கிலியன்…

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சர்வதேச உழைப்பாளர் தின நிகழ்வுகள் !! (PHOTOS)

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சர்வதேச உழைப்பாளர் தின நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. தமிழ்த் தேசியப் பசுமை…

ஈக்வடார் நாட்டில் 10 பேர் சுட்டுக்கொலை!!

தென் அமெரிக்காவின் ஒரு முனையில் ஈக்வடார் என்ற குடியரசு நாடு உள்ளது. இந்த நாட்டில் போதை பொருட்கள் கடத்தல் கும்பல்களால் குற்ற சம்பவங்கள் அதிகரித்தது. அவர்கள் அடிக்கடி அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.…

பெருமையா இருக்கு – ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!!

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்களான சாத்வித்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளனர். சாம்பியன் பட்டம் வென்ற சாத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டிக்கு…

சூடானில் போர் நிறுத்தத்தை மீறி சண்டை நீடிப்பு !!

சூடான் நாட்டில் ராணு வத்தினருக்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. கடந்த 15-ந்தேதி தொடங்கிய இந்த போர் 3- வது வாரமாக நீடிக்கிறது. சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவர்கள் வெளியேறும் வகையில்…

34 மணி நேரத்தை கடந்தும் தொடரும் மீட்பு பணிகள் – ஆறு பேரை காவு வாங்கிய கட்டிட…

மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் அந்தக் கட்டிடம் தரைமட்டமான நிலையில், உள்ளே இருந்த 15-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில்…

நடுவானில் மோதிய விமானங்கள்- 4 பேர் உயிரிழப்பு!!

வடகிழக்கு ஸ்பெயினில் பார்சிலோனா நகரின் வடக்கே அமைந்துள்ள மோயா நகர விமான நிலையம் அருகே 2 இலகுரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இதில் ஒரு விமானம் விமான நிலையத்தின் அருகே மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்து தீப்பற்றியது. அந்த…

அல்லைப்பிட்டியில் கார் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு பெண்கள் பலி!!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில் அல்லைப்பிட்டியில் கார் – மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்…

பிரிவினைவாத அரசியலை பரப்ப முயற்சி:’தி கேரள ஸ்டோரி’ படத்துக்கு பினராயி விஜயன்…

கேரளாவில் 'தி கேரள ஸ்டோரி' என்ற திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர்…

இந்தியாவின் வளமான மரபை மீட்டெடுத்தல் !! (கட்டுரை)

உலகத்தின் தீமைகளில் நியாயமான பங்கை மதத்திற்குக் காரணம் கூறும் பழக்கம் மரபு ஞானம் கொண்டது. இந்த சமூக நிறுவனம், நம்பிக்கையை முன்னிறுத்தி, அதன் கோட்பாடுகளுக்கு சந்தேகத்திற்கு இடமின்றி கீழ்ப்படிதலால் செழித்து வளர்கிறது, இது அறிவியல் மற்றும்…

‘தோட்ட காட்டான்’ ‘வத்து தெமழு’ என்று அழைக்காதே !!

டிக்கோயா, வனராஜா தோட்டத்தில் வசிக்கும் அன்புராஜ் என்ற தொழிலாளி, தொழிலாளர் தினமான இன்று (01) காலை 8 மணி முதல் 12 மணி வரை தனி மனித போராட்டத்தை நோர்வூட் எரிபொருள் நிரப்பும் நிலையம் முன்பாக உள்ள சந்தியில் பாலத்தின் மீதேறி நடத்தினார். அவர்…

மற்றுமோர் அதிரடி அறிவிப்பு வெளியானது !!

வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இறைச்சி மற்றும் மீன் கடைகளை மே 5, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்களும் மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது

இந்திய விசா குறித்து அறிவுறுத்தல் !!

சில போலி/மோசடி இணைய URLகள் மூலமாக இந்திய இ-விசாவை வழங்குவது கவனிக்கப்பட்டுள்ளது என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் இந்திய இ-விசாவைப் பெறுவதற்கு இந்தப் போலி URLகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று…

நாட்டுக்காக உயிரை விடவும் ராகுல் காந்தி தயார்: பிரியங்கா காந்தி!!

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரசாரம் ஒன்றில் பேசுகையில், பிரதமர் மோடியை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு பேசினார். இதற்கிடையே…

முக்கிய பிரச்சினைகளில் மவுனத்தின் குரலாக இருக்கிறார்: பிரதமர் மோடி மீது காங்கிரஸ்…

பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பப்பட்டது. இதையொட்டி, அவரை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:- பிரதமரின் மனதின் குரல்…

பாடசாலையில் மாணவர்களுக்கு ஆபாச படம் திரையிட்ட ஆசிரியரால் பரபரப்பு !!

அரச பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு ஆபாச படத்தை திரையிட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக பொதுவெளியில் திரைகளில் திடீரென ஆபாச படம் திரையிடப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபமாக சில…

காஸ் விலை குறையும்: சாகல!!

எரிவாயுவின் விலை இன்னும் சில தினங்களில் குறையும் என ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அந்த வகையில் எமக்கு சாதகமான நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர்…

காத்தான்குடியில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன!!

உலக தொழிலாளர் தினமான மே முதலாம் திகதியான இன்று (01) திங்கட்கிழமை காத்தான்குடியில் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. காத்தான்குடி வர்த்தக சங்கம் காத்தான்குடி வர்த்தகர்களுக்கு விடுத்த வேண்டுகோளை அடுத்து காத்தான்குடி வர்த்தக நிலையங்கள்…

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மாலத்தீவில் 3 நாள் சுற்றுப்பயணம்!!

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் அண்டை நாடாகவும். நெருங்கிய நட்பு நாடாகவும் மாலத்தீவு விளங்குகிறது. அங்கு நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான இந்த உறவுகளை மேலும்…

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்த ஆண்டு உடன்பாடு: ஜனாதிபதி உரை!!

இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் கொள்கைகளுக்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு இருப்பதாகவும் நாட்டின் நீண்டகாலமாக நீடிக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்த ஆண்டு உடன்பாடு எட்ட எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில்…

இலங்கை தமிழரான மருத்துவருக்கு அமெரிக்காவில் சிறைத்தண்டனை !!

அமெரிக்காவின் ஸ்ட்ராட்ஃபோர்ட் நகரில் மருத்துவ சிகிச்சை நிலையத்தை நடத்தி வந்த இலங்கை மருத்துவரான தமிழர் ஒருவருக்கு சுகாதார சேவைகளை வழங்குவதாக தெரிவித்து சுமார் 840,000 அமெரிக்க டொலர்களை மோசடி செய்த குற்றத்திற்காக பிரிட்ஜ்போர்ட் பெடரல்…

புனர்வாழ்வும் புது வாழ்வும்’ என்ற அமைப்பின் நடைபயணம்!! (PHOTOS)

புனர்வாழ்வும் புது வாழ்வும்' என்ற அமைப்பின் ஊடாக வறிய மக்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கிலான நடைபயணம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. ஐக்கிய ராஜ்யத்தை தளமாகக் கொண்டு இயங்கும் குறித்த அமைப்பின் ஊடாக…

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் நானே மீண்டும் முதல்-மந்திரி: பசவராஜ் பொம்மை பேட்டி!!

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது மாநிலத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ள பா.ஜனதா…

சீனாவுக்கு அமெரிக்கா விடுத்த பகிரங்க எச்சரிக்கை!

தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்து வருவதாகவும், அதனை மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் எதிர்த்து வருகின்றது. இந்த விவகாரத்தில் சீனா - அமெரிக்கா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது.…

இரு தேசிய கட்சிகளும் கர்நாடக பிரச்சினைகளை பற்றி பேசுவதில்லை: குமாரசாமி!!

மண்டியா மாவட்டத்தில் உள்ள ஆதிசுஞ்சனகிரி மடத்தில் நேற்று சிறப்பு வழிபாடு நடத்திய பிறகு ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டசபை…

இராணுவ பலத்தை அதிகரிக்கும் சீனா..!

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகம் முழுதும் பல்வேறு நாடுகளிலும் இராணுவ பலத்தை அதிகரிக்க சீனா திட்டமிட்டு முயற்சித்து வருகிறது. இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு பெரும் அளவில் கடன் கொடுத்து வரும் சீனா,இலங்கையின் உள்ள ஹம்பாந்தோட்டை மற்றும்…

விபத்தில் இருவர் பலி: ஒருவருக்கு படுகாயம்!!

அநுராதபுரம் - ஹொரவ்பொத்தான கெப்பித்திகொல்லாவ பிரதான வீதி கிவுளேகட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (30) இரவு…

‘புர்கா’ திருடன் பெண்ணிடம் சிக்கினார்!!

புர்கா அணிந்துகொண்டு வந்த திருடன், கோழிகளை திருட முயன்றபோது அம்முயற்சி கைகூடவில்லை. அத்துடன், திருடன் கொண்டுவந்த கத்திகள் இரண்டையும் அப்பெண் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம், பொகவந்தலாவை ஆரியபுரவில் ஞாயிற்றுக்கிழமை (30) அதிகாலை 1.30…

6 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்!!

வவுனியாவில் 6 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகின்றார். தந்தை இல்லை. வவுனியா,…