;
Athirady Tamil News
Monthly Archives

June 2023

மணிப்பூர் கலவரத்தை விசாரிக்க நீதி விசாரணை ஆணையம் அமைப்பு !!

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்கு நாகா மற்றும் குகி சமூகத்தினர் அடங்கிய சிறுபான்மை பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த…

அழகுசாதனப் பொருட்களுடன் ஓடிய தம்பதியினர் !!

அலுபோமுல்ல குருச சந்தி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் இருந்து சுமார் 15,000 ரூபாய் பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்களை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்ற கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 21ஆம்…

ஜூலையில் மாற்றம் !!

எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள பஸ் கட்டண மீளாய்வின் போது பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இம்முறை மேற்கொள்ளப்பட்ட எரிபொருள்…

4 முக்கிய தூண்களில் நாட்டைக் கட்டியெழுப்புவோம்: ஜனாதிபதி !!

2048ஆம் ஆண்டில் முழுமையான அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்றுவதே எமது போராட்டமாகும். இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாரையும் அனுமதிக்க மாட்டோம். 04 முக்கிய தூண்களில் நாட்டைக்…

வவுனியாவில் முச்சக்கர வண்டி சாரதி கொலை; மற்றொரு சாரதிக்கு தூக்குத் தண்டனை- மேல் நீதிமன்ற…

முச்சக்கர வண்டி சாரதியை கொலை செய்த குற்றத்துக்கு மற்றொரு முச்சக்கர வண்டி சாரதிக்கு தூக்குத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். இரண்டாவது எதிரியாகக் குறிப்பிடப்பட்டிருந்தவர் மீதான…

பொருளாதார நெருக்கடி எதிரொலி யாழில் பாடசாலை இடைவிலகல் அதிகரிப்பு..!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாடசாலை இடைவிலகல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் 355 பேர் பாடசாலை இடைவிலகியுள்ள நிலையில் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களிலேயே 200 பேர் பாடசாலைகளிலிருந்து…

30 வருசம்… உன்ன பிரிஞ்சி இருந்ததே இல்லையேடா…ஓய்வுக்கு முன் பஸ்ஸை கட்டிபிடிச்சி…

மெல்ல விடை கொடு.. விடை கொடு மனமே..! 30 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு ஓய்வு பெறும் நாளில் கண்ணீரோடு கடைசியாக தான் ஓட்டிய பேருந்தை கட்டிப்பிடித்து மதுரை ஓட்டுநர் அழுத வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மதுரை மாவடத்தைச் சேர்ந்த ஓட்டுநர்…

சீமான், திருமுருகன் காந்தி ட்விட்டர் கணக்குகளை முடக்கியது யார்?.. சென்னை காவல் துறை…

நாம் தமிழர் கட்சியின் சீமான், மே 17 இயக்க நிர்வாகி திருமுருகன் காந்தி ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளை முடக்க நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை என சென்னை காவல் துறை விளக்கமளித்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான்…

பயிற்சியின்போது கீழே விழுந்து நொறுங்கிய இந்திய விமானப்படையின் சூரிய கிரண் விமானம்!!

கர்நாடகா மாநிலம் சமராஜாநகர் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சூரிய கிரண் பயிற்சி விமானம் இன்று காலை வழக்கம் போல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. விமானத்தில் பெண் விமானி உள்பட இரண்டு விமானிகளும் பயிற்சியில் ஈடுபட்டுக்…

என் போன் ஒட்டுக் கேட்கப்படுகிறது- ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 10 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று அவர் சான்பிரான்சிஸ்கோ நகரில் சாண்டா கிளாராவில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். இதன் தொடர்ச்சியாக…

இறுதி அஞ்சலி செலுத்தியபோது திடீரென விழித்தெழுந்த நபர்.. அலறியடித்து உறவினர்கள் ஓட்டம்!!

மத்திய பிரதேசத்தில் இறந்ததாக நினைத்த நபர் இறுதிச்சடங்கு செய்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக எழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய பிரதேச மாநிலம் மொரேனா பகுதியைச் சேர்ந்தவர் ஜீது பிரஜாபதி கடந்த 30ம் தேதி திடீரென மயங்கி…

அமெரிக்காவில் 3 மாணவர்கள் சுட்டுக்கொலை- மர்மநபர் வெறிச்செயல்!!

ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது பென்சிலோனியா. இங்குள்ள ஒரு வீட்டு முன்பு நேற்று மர்மநபர் ஒருவன் தான் வைத்து இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் இறந்தனர். 33 வயது வாலிபர் ஒருவர்…

மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியை காணவில்லை- காங்கிரஸ் போஸ்டர்!!

டெல்லியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிருதி இரானியை காணவில்லை என்று காங்கிரஸ் போஸ்டர் வெளியிட்டு உள்ளது. பா.ஜனதா எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பிரிக்பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர்,…

உக்ரைன் தலைநகரில் ரஷியா படை குண்டு வீச்சு- 3 பேர் பலி!!

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சண்டையில் ஏராளமானோர் உயிர் இழந்து உள்ளனர். ஆனாலும் இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய படைகள்…

காங்கிரஸ் ஏழை எளிய மக்களுக்கு வாக்குறுதி அளித்தால் பிரதமருக்கு பிரச்சினையாக உள்ளது- கார்கே…

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து நேற்று ராஜஸ்தானில் பாஜக சார்பில் நிறைவு விழா கொண்டாடப்பட்டது. ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு பேசினார்.…

பிரித்தானியாவில் வேலை தேடுவோருக்கான மகிழ்ச்சி தகவல்..! 27 லட்சத்துடன் வேலைவாய்ப்பு !!

பிரித்தானியாவில் ஆண்டுக்கு ரூ. 27,00,000 சம்பளத்துடன் இந்திய ஆசிரியர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, International Relocation Payments (IRP) திட்டத்தின் கீழ் இந்த பாடங்களுக்கு நூற்றுக்கணக்கான…

மத்திய அமைச்சகத்தின் இசட் பிளஸ் பாதுகாப்பை ஏற்க மறுத்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்!!

பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் சிங் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பகவந்த் மானுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து அச்சுறுத்தல்கள் வரும் என்பதால் மத்திய அரசு சி.ஆர்.பி.எப் படையின் இசட் பிளஸ் பாதுகாப்பு…

உக்ரைனுக்காக கைகொடுக்கும் மிக முக்கிய வல்லரசு நாடு – வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான…

உக்ரைனுக்கும் ரய்யாவுக்கும் இடையிலான போர் ஓராண்டை கடந்தும் தற்போது மீண்டும் வலுவடைந்து வருகிறது. இந்த போரை பயன்படுத்தி பல நாடுகள் தமக்கு தேவையானவற்றை சுலபமாக பெற்று வருகின்றது. அந்தவகையில், போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு…

புற்று நோயை பொருட்படுத்தாமல் 72 வயதில் தங்கம் வென்ற மூதாட்டி!

கனடாவில் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட 72 வயதான பெண் ஒருவர் நீச்சல் போட்டித் தொடரில் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். கியூபெக்கைச் சேர்ந்த லினா கோர்டோயிஸ் என்ற மூதாட்டியே இவ்வாறு நீச்சல் போட்டித் தொடரில் சாதனை படைத்துள்ளார்.…

இஸ்ரேலை குறிவைத்து காத்திருக்கும் ஒன்றரை இலட்சம் ஏவுகணைகள்..!

இஸ்ரேல் தேசத்தை மிகப்பெரிய ஆபத்து சூழ்ந்து கொண்டு இருக்கிறது. இஸ்ரேல் எதிர்கொண்டு வரும் ஆபத்துகள் தொடர்பில் குறிப்பிடும் போரியல் நோக்கர்கள் இஸ்ரேலின் அண்மைக்கால வரலாற்றில் என்றும் இல்லாத ஆபத்துகளையும் சவால்களையும் தேசம் தற்போது…

பட்டாசு குடோன் வெடித்து தொழிலாளர்கள் 3 பேர் பலி: மரங்களில் உடல் பாகங்கள் தொங்கிய…

ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், வரதைய்ய பாலம் மண்டலம், குவ்வகுளி பகுதியில் கல்யாண் குமார் என்பவர் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். பட்டாசு தயாரிக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள்…

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (01) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் பொதுசன நூலகத்தில் இந்த நினைவேந்தல்…

நுளம்புகளை விரட்ட வெற்றிலையில் இருந்து எண்ணெய்!!

நுளம்புகளை விரட்டும் சுருளை எரிக்கும் போது வெளியாகும் புகை சிறு குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அதற்கு மாற்றாக வெற்றிலையில் இருந்து தயாரிக்கப்படும் தைலத்தினை கொசு விரட்டிகளாக பயன்படுத்தலாம் என இன்டர்கல்ச்சர் மற்றும் வெற்றிலை…

பிளாஸ்டிக் தடைக்காலம் மீண்டும் ஒத்திவைப்பு!!

இன்று (01) முதல் பிளாஸ்டிக் கூடைகள், பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் பல பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்திருந்தாலும், அது மேலும் தாமதமாகும் என தெரிய வந்துள்ளது. பிளாஸ்டிக் வைக்கோல், பிளாஸ்டிக்…

உக்ரைனுக்கு தக்க பதிலடி உண்டு – நேர்காணலில் எச்சரித்த புடின் !!

நாங்கள் உக்ரைனிலுள்ள கட்டுப்பாட்டு மையங்களை தாக்குவது குறித்து பேசினோம். பதிலுக்கு உக்ரைன் வேறொரு பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. அது ரஷ்யாவையும், ரஷ்யக் குடிமக்களையும் அச்சுறுத்த மக்கள் வாழும் வீடுகளை தாக்க முடிவு செய்துள்ளது என்று ரஷ்ய…

காலையில் தாசில்தாராக பதவி உயர்வு பெற்று மாலையில் ஓய்வுபெற்ற அதிகாரி !!

கேரள மாநிலம் கொச்சியை அடுத்த ஆலுவா தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வந்தவர் ராஷ்மோன். இவர் கடந்த ஆண்டு தாசில்தாராக பதவி உயர்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால் இவரது பதவி உயர்வு தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருந்தது. இந்த…

நியூஸிலாந்தில் இன்று ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம்!

நியூஸிலாந்தில் இன்று 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் வசிக்காத, ஆக்லாந்து தீவுகளுக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலநடுக்கம் 33 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக நியூஸிலாந்தின்…

நான்கரை ஆண்டுகள் கொள்ளையடித்து விட்டு தற்போது இலவசமா?: கெலாட் மீது ரதோர் சாடல்!!

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அசோக் கெலாட் முதல்வராக இருக்கிறார். நான்கரை ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்த நிலையில் இந்த ஆண்டு இறுதியில் அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் மக்கள் மனதை கவரும்…

இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டால் தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும்: ராகுல்…

இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டால் தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் என்று ராகுல் காந்தி நம்பிக்கை வைத்துள்ளார். எதிர்க்கட்சிகளை ஒன்றுசேர்க்கும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது; அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா…

மல்யுத்த வீரர்கள் விவகாரத்தில் உலகளவில் நாட்டின் நற்பெயர் கெட்டுவிட்டது- மம்தா பானர்ஜி!!

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில்…

மல்யுத்த வீரர்களின் புகார் மீது பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை தேவை: சர்வதேச ஒலிம்பிக்…

மல்யுத்த வீரர்களின் புகார் மீது பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை தேவை என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. மல்யுத்த வீரர்களின் புகார் மீதான விசாரணையும் விரைவாக நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று ஒலிம்பிக் கமிட்டி கூறியுள்ளது.

’சிப்ஸ்’ ஆல் இலங்கை பெரும் சாதனை!!

இலங்கையின் முதலாவது, உருளைக்கிழங்கு சீவல் (Potato Chips) தயாரிப்பு தொழிற்சாலை முன்னோடியானது பெரும் வெற்றியளித்துள்ளதாக கமத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. ரூ. 100 மில்லியன் செலவில் செயற்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் நோக்கமானது,…

மத்தியில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்சியை நடத்தியது காங்கிரஸ்- பிரதமர் மோடி!!

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்து 9 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், 9 ஆண்டுகள் நிறைவையொட்டி அஜ்மீர் நகரில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில்,…

இந்திய மல்யுத்த அமைப்புக்கு உலக கூட்டமைப்பு எச்சரிக்கை!!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின்(டபிள்யூஎப்ஐ) தலைவரால் பாலியல் கொடுமைகளுக்கு ஆளான வீராங்கனைகள் கைது செய்யப்பட்ட விதத்துக்கு உலக கூட்டமைப்பான உலக மல்யுத்த ஒன்றியம்(யுடபிள்யூடபிள்யூ) கவலை தெரிவித்ததுடன், இந்திய கூட்டமைப்புக்கு எச்சரிக்கையும்…