;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

தவிக்கும் உலக நாடுகள்: அரிசி ஏற்றுமதி தடையை நீக்க இந்தியாவுக்கு IMF கோரிக்கை!!

எதிர்பாராத பருவகால மாற்றங்களால் இந்தியா முழுவதும் சில மாநிலங்களில் கனமழையும் வேறு சில மாநிலங்களில் குறைவான மழையும் பெய்து வருகிறது. இதனால் விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இது அரிசி விலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற…

இலங்கையில் “ஈ“ பேருந்துகள்!!

வினைத்திறனான மற்றும் தரமான போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்காக 50 மின்சார பேருந்துகளை பாவனையில் ஈடுபடுத்தும் “ஈ-பேருந்து” முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். லக்திவ…

கிரேட்டர் நொய்டாவில் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு.. 400க்கும் மேற்பட்ட கார்கள் நீரில்…

வடமாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. ஆறுகளில் தண்ணீர் அபாய அளவை தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

டிவிட்டர் லோகோ மாற்றம் நீல குருவிக்கு பதிலாக கறுப்பு வெள்ளை எக்ஸ்: எலான் மஸ்க்…

வாஷிங்டன்: தொழிலதிபர் எலான் மஸ்க் விரும்பியபடியே, டிவிட்டர் லோகோவை மாற்றி உள்ளார். நீலக் குருவிக்கு பதிலாக கறுப்பு வெள்ளை நிற எக்ஸ் (X) லோகோவை அறிமுகம் செய்துள்ளார். இதற்கு அதிருப்தி விமர்சனங்களே அதிகளவில் எழுந்துள்ளன. டிவிட்டர் சமூக ஊடக…

ஊர்காவற்துறை – காரைநகர் கடற்பாதை ஓட்டி போதையில் அட்டகாசம்!!

யாழ்ப்பாணம் , ஊர்காவற்துறை - காரைநகருக்கு இடையில் , சேவையில் ஈடுபடும் கடற்பாதையின் ஓட்டி , மது போதையில் பாதையில் பயணித்தவர்களுடன் தகாத வார்த்தைகள் பேசி முரண்பட்டதுடன் , அரச உத்தியோகஸ்தர் ஒருவரையும் தாக்கியுள்ளார். ஊர்காவற்துறையில்…

சஜித் பிரேமதாச தலைமையில் விசேட கலந்துரையாடல் !!

12 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட குழுவினருடன் விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் செவ்வாய்க்கிழமை (25) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது…

பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை !!

2030 ஆம் ஆண்டளவில் பால் உற்பத்தியை 50 வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 19வது அமர்வில், இத்தாலியில் உணவு மற்றும்…

பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டி – தேவ கவுடா…

கர்நாடகாவில் காங்கிரசை எதிர்க்க பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்பட போவதாக தேவ கவுடாவின் மகனும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி அறிவித்து இருந்தார். வரும் பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும்…

புதிய துணைவேந்தர் நியமனம் !!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் எம் மானகே நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் 3 வருடங்களுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் நீக்கம் !!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சில சலுகைகளை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி சிறப்புரிமைச் சட்டத்தின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு ஓய்வூதியம், வீடு, மூன்று வாகனங்கள், எரிபொருள் மற்றும்…

ராணுவத்தினர் இடையே மோதல்!: சூடானில் 1.9 கோடி பேர் உணவின்றி தவிப்பு; ஐக்கிய நாடுகள்…

சூடானில் சுமார் 2 கோடி பேர் உணவு இல்லாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, தெற்கு சூடான், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் பட்டினி மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. குடிமக்களுக்கு உணவு,…

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் – இன்று மக்களவையில் கொண்டு வரும்…

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் சம்பவம் பற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரு அவை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கோரிக்கை…

கொரிய எல்லைகளுக்கு இடையே என்ன இருக்கிறது? முற்றுப்பெறாத போரின் அடையாளம்!!

இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படாத ஆனால், அதே நேரம் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் நிறைந்த எல்லைகள் என்று உலக நாடுகளில் சில பகுதிகள் உள்ளன. இவற்றில் ஓர் முக்கியமான பகுதியாக கொரியாவின் ராணுவ நடவடிக்கைகள் இல்லாத மண்டலம் (DMZ) திகழ்கிறது.…

ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டு நிறைவு: திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

நியூஸிலாந்தில் இலங்கை சிறுவனுக்கு வழங்கப்பட்ட துணிச்சலான விருது !!

கொமன்வெல்த் பிரஜை ஒருவருக்கு வழங்கப்படும் மவுன்ட்பேட்டன் பதக்கத்தை இலங்கை சிறுவனான கிவி, கல்யா கமகே பெற்றுள்ளார்.அலையில் அடித்துச் செல்லப்பட்ட தனது சகோதரனை துணிந்து காப்பாற்றியதற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது. கடந்த வருடம்…

ராமநாதபுரம் மீனவர் சங்கம் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்…

அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை…

கனடாவில் அடைக்கலம் கோர செலவின்றி புதிய வழி !!

கனடாவில் அடைக்கலம் கோருவதற்கு சிலர் தமது பணத்தை செலவழிக்காமல் புதிய உத்தியை கையாண்டு வருகின்றனர். இதன்படி தமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி கனடாவில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு செல்லும் பலர் அங்கு குடியேறும் வகையில் அந்நாட்டிடம் அடைக்கலம்…

காதலியுடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு- எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து சென்னை…

மதுரை திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் லதா. அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சேதுராமன், ஏற்கனவே இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு முருகேசன், முத்தழகு ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் முருகேசன்…

ஒரே நாளில் கோடீஸ்வரரான சீன தொழிலாளி – அப்படி என்ன செய்தார் தெரியுமா… !

சீனாவைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளின் பிறந்ததிகதிகளை பயன்படுத்தி வாங்கிய அதிஷ்டஇலாப சீட்டுகளுக்கு 90 கோடி ரூபாய் பரிசுத் தொகை விழுந்துள்ளது. கிழக்கு சீனாவின் ஜீஜியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்சூவில் வசித்து…

காரைக்குடியில் கலகலப்பு- கலைஞர் நூற்றாண்டு விழா கூட்டத்தில் பக்தி பாடலுக்கு சாமியாடிய…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை கிழக்கு ஒன்றியம் மற்றும் புதுவயல் பேரூர் தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட வழங்கும் விழா புதுவயல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில்…

சீனாவை நெருங்கும் இந்தியா – இன்று வெளியான முக்கிய தகவல் !!

மக்கள் தொகையில் சீனாவை விஞ்சுவதற்கு இன்னும் மூன்று கோடி பேர் தேவை என இந்தியா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை எவ்வளவு என்று நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே மத்திய உள்துறை அமைச்சகம்…

13 ஆண்டுகளுக்கு பிறகு கொள்ளையனை குஜராத்தில் பிடித்த போலீசார்- தீரன் சினிமா பட பாணியில்…

நடிகர் கார்த்திக் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் திரைப்படம் வடமாநில கொள்ளை கும்பலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. குழந்தைகள், பெரியவர்கள் என ஈவு, இரக்கமின்றி கொடூர தாக்குதல் நடத்தி கொள்ளையடிக்கும் கும்பலை தனிப்படை…

தமிழ்க் கட்சிகளின் கடிதத்தை மோடி சாதகமாக பரிசீலித்தார் – த.சித்தார்த்தன்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து அனுப்பிய கடிதத்தை இந்திய பிரதமர் சாதகமாக பரிசீலித்துள்ளார். எமது கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களையே, இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார் என தமிழ் தேசிய…

13 க்கு எதிரான 22 பாதாளத்துக்குள் நாட்டை தள்ளும் !!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நீக்கும் வகையில் 22ஆம் திருத்தம் கொண்டுவரப்படுமாயின் அது நாட்டை பாதாளத்துக்குள் தள்ளுமென தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், இந்த முயற்சியை வன்மையாக…

ஜே.வி.பி பங்கேற்காது !!

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை அறிவூட்டும் சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி செயலகத்தில் புதன்கிழமை (26) நடைபெறவுள்ளது. இதற்காக…

ரோயல் பார்க் படுகொலை: தீர்ப்பு ஒத்திவைப்பு !!

ரோயல் பார்க் படுகொலை குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கிமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்துள்ள உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவிற்கு பொதுமன்னிப்பு வழங்க முன்னாள் ஜனாதிபதி…

அலையுடன் அடிபட்டுப் போன கட்சிகள் !!

கடந்த போராட்டத்தின் மூலம் அலையாக வந்த சில அரசியல் கட்சிகள் இன்று அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கட்சியின் புதிய உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறிய போது…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக தேர்தல் ஆணையம் கைது வாரண்ட்!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல், தேசதுரோகம், பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டு தேர்தல் ஆணையம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு தலைமை…

கள்ளுக்கான தடையை நீக்க கோரி திருப்பூரில் தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டம்-…

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி மற்றும் கோவை, திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தேங்காய்களை உடைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ரேஷன் கடைகளில்…

ஒரு மாதமாக ஆளையே காணோம்.. சீன வெளியுறவு மந்திரியை நீக்கிய அதிபர் ஜி ஜின்பிங்!!

சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி கின் கேங் சுமார் ஒரு மாதகாலமாக பொதுவெளியில் தோன்றவில்லை. ஜூன் 25ம் தேதி பீஜிங்கில் ரஷியாவின் வெளியுறவுத்துறை துணை மந்திரி ஆண்ட்ரே ருடெங்கோவை சந்தித்தபிறகு அவர் எங்கிருக்கிறார்? என்ற தகவல் தெரியாமல்…

பேட்டையில் கொலை செய்யப்பட்ட அ.தி.மு.க. பிரமுகரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை…

நெல்லை பேட்டை அருகே உள்ள மயிலப்பபுரத்தை சேர்ந்தவா் பிச்சை ராஜ் (வயது 52). அ.தி.மு.க. பிரமுகரான இவர் பேட்டை ரூரல் பஞ்சாயத்து முன்னாள் துணைத்தலைவர் ஆவார். தற்போது ஜே.சி.பி. வைத்து தொழில் செய்து வந்த நிலையில், அப்பகுதியில் டாஸ்மாக் பாரும்…

வெள்ளை மாளிகையை கலக்கிய ஒபாமாவின் பிரத்யேக சமையல்காரர் கடலில் மூழ்கி பலி!!

8 வருடம் அமெரிக்க அதிபராக இருந்தவர் பராக் ஒபாமா. அவரின் பதவிக்காலம் முடிவடைந்ததும், ஒபாமா அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் உள்ள பிரபலமான மார்தா'ஸ் வைன்யார்ட் (Martha's Vineyard) எனும் தீவில் ஒரு மாளிகையை வாங்கி ஓய்வெடுத்து வருகிறார்.…

எதிர்க்கட்சிகளின் தலைவிதி இதுதான்- I.N.D.I.A. மீது பிரதமர் மோடி கடும் தாக்கு!!

பாராளுமன்ற கூட்டம் இன்று தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா எம்.பி. கூட்டம் நடந்தது. இதில் மத்திய மந்திரிகள், பா.ஜனதா எம்.பி.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மணிப்பூர் விவகாரத்தில் பாராளுமன்றத்தை எதிர்க்கட்சிகள்…

பிச்சையெடுக்கும் எண்ணத்தை தூக்கி எறியுங்கள்: பாகிஸ்தான் தலைமை ராணுவ அதிகாரி வலியுறுத்தல்!!

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகிறது. உணவு, மின்சாரம் மற்றும் எரிசக்தி உட்பட அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் அங்கு மக்கள் திண்டாடி வருகின்றனர். வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்து வருகிறது. நிலைமையை…