;
Athirady Tamil News
Monthly Archives

September 2023

ஆப்கானிஸ்தானின் சர்வதேச என்ஜிஓவை சேர்ந்த 18 பணியாளர்கள் கைது- தலிபான் அதிரடி!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை பிடித்ததில் இருந்து இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கடுமையான விளக்கத்திற்கு ஏற்ப என்ஜிஓக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் பெண்கள் பணியாற்றுவதைத் தடுப்பது உட்பட மக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து…

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் 100வது பிறந்தநாள்- பிரதமர் மோடி மரியாதை!

நவீன சிங்கப்பூரின் நிறுவனர் என்று பரவலாகப் போற்றப்படும் லீ குவான் யூவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் மரியாதை செலுத்தியுள்ளார். "லீ குவான் யூவின் 100வது பிறந்தநாளின் சிறப்பு சந்தர்ப்பத்தில்…

நேபாளம் பசுபதிநாதர் கோவிலில் புகைப்படம் எடுத்தால் ரூ.2,000 அபராதம்!!

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் உலக பிரசித்திப் பெற்ற பசுபதிநாத் கோவில், பாக்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தினமும் இந்தியா மட்டுமின்றி, உலகின் பல நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்தக்…

“இந்தியா வெல்லும்”; கிரிக்கெட்டிலா, தேர்தலிலா?: ஸ்டாலின் கருத்தால் சூடு…

வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் ஐ.சி.சி. ஆண்கள் உலக கோப்பைக்கான போட்டித்தொடர் நடைபெறவிருக்கிறது. நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த உலக கோப்பை போட்டி, தற்போது 2023ல் 13-வது போட்டி தொடராக நடக்க இருக்கிறது.…

வீதி விபத்துக்களில் சிக்கி 4 பேர் பலி!!

நாட்டின் பல பகுதிகளில் நடந்த வீதி விபத்துகளில் பெண் ஒருவர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். பொரலஸ்கமுவ, பூநகரி, தலத்துஓயா மற்றும் திருக்கோவில் ஆகிய பகுதிகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கொழும்பு –…

சைபர் தாக்குதல் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை!!

அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் மீதான சைபர் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சர் கனக ஹேரத் விடுத்த அறிவித்தலுக்கு அமைய இந்த விசாரணைகள்…

பிரேசிலில் சோகம் – விமான விபத்தில் 14 பேர் பலி!!

பிரேசில் நாட்டின் வடக்கு அமேசான் மாநிலத்தில் சனிக்கிழமை நடந்த விமான விபத்தில் 14 பேர் பரிதாபமாக பலியாகினர் என அம்மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்த விபத்து மாநில தலைநகரான மனாஸிலிருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள பார்சிலோஸ் மாகாணத்தில்…

இனி வாட்ஸ்அப் பண்ணுங்க போதும்.. புதிய சேனல் ஆரம்பித்த முதல்வர் யோகி ஆதித்யநாத்!!

பொது மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்கும் வகையில், முதல்வர் யோகி ஆதித்யநாத், "முதலமைச்சர் அலுவலகம், உத்தர பிரதேசம்" (Cheif Minister Office, Uttar Pradesh) என்ற பெயரில் வாட்ஸ்அப் சேனல் ஒன்றை துவங்கி இருக்கிறார். இதன் மூலம் பொதுமக்கள்…

இந்தியாவுடனான உறவில் விரிசல் : கனடா எடுத்துள்ள திடீர் முடிவு !!

இந்தியா - கனடா இடையேயான உறவில் விரிசல் அதிகரித்துள்ள நிலையில், கனேடிய வர்த்தக்கத் துறை அமைச்சரின் இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு நாட்டிற்கும் இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்த அடுத்த மாதம் கனேடிய வர்த்தக்கத் துறை அமைச்சர் மெரி…

ஜிம்மில் அதிர்ச்சி.. திரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்த இளைஞர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு…

உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரில் உள்ள சரஸ்வதி விஹாரில் இயங்கி வரும் ஜிம் ஒன்றில் ஒருவர் திரெட்மில்லில் ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜிம்மில்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!!

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (17) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு…

ஐ.நா மனிதவுரிமை அறிக்கையில் இனி மலையகமும் இடம்பெறும்!!

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் இவ்வருட அறிக்கையில் மலையகம் பற்றி குறிப்பிடாமையை ஒரு குறைபாடே என ஐநாவின் இலங்கை பிரதிநிதி மார்க்-அந்தரே ஏற்றுக்கொண்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன்…

ரஷ்யாவுக்கு பெரும் தோல்வி! பாதுகாப்பு கட்டமைப்பு தாக்கி அழிப்பு !!

கிரிமியாவில் ரஷ்ய ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பு தாக்கி அழிக்கப்பட்டதுடன், 2 போர்க்கப்பல்கள் தாக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. எஸ் - 400 ‘Triumf’ எனும் ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பே தமது சிறப்பு தாக்குதல் நடவடிக்கையில்'…

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்.. இந்தியா கூட்டணியுடன் ஒருங்கிணைந்து போராடனும்.. சோனியா…

கடந்த ஆகஸ்ட் மாதம் மாற்றியமைக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் உச்ச பட்ச முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட காங்கிரஸ் காரிய கமிட்டியின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில்!!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கடந்த சனிக்கிழமை…

டி-56 ரக துப்பாக்கியை மீட்ட பொலிஸார்!!

பாதாள உலக குழு உறுப்பினராக கருதப்படும் கணேமுல்லை சஞ்சீவ என்ற சஞ்சீவ குமாரவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய டி-56 ரக துப்பாக்கி ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த இந்த துப்பாக்கி மீட்டுள்ளதாக…

ரஷ்யாவுடன் ஆயுத பரிமாற்றத்தை உறுதி செய்த வட கொரிய அதிபர் !!

ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், அந்த நாட்டு கடற்படை தளத்துக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போா் விமான தயாரிப்பு ஆலையைத் தொடர்ந்து, கடற்படை தளத்துக்கு கிம் ஜோங் உன் விஜயம் செய்யவுள்ளமை…

உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் பி.வி.சிந்து சந்திப்பு!!

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெலுங்கானா மாநிலத்தில் இன்று பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், ஐதராபாத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதுதொடர்பாக, அமித்ஷா…

பயனர்களுக்கு தெரியாமல் இருப்பிடங்களை கண்காணிக்கும் கூகுள் : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு !!

பயனர்களுக்குத் தெரியாமல், அவர்களின் இருப்பிடம் குறித்த விபரங்களை கூகுள் சேகரிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சாண்டா கிளாரா கவுண்டி உயர் நீதிமன்றத்தில், அட்டர்னி ஜெனரல் ராப் போன்டா, வழக்கு தொடர்ந்துள்ளார்.…

ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கை அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் – ப.சிதம்பரம்!!

காங்கிரஸ் கட்சியின் புதிய காரிய கமிட்டி உறுப்பினர்களின் முதல் கூட்டம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள்…

நகரங்களில் வாழும் குழந்தைகளுக்கு சுவாச பிரச்சனை அதிகமாக இருக்குமாம் !!

நகர்ப்புறங்களில் வசிக்கும் 3 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு சராசரியாக 17 சுவாச நோய்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இத்தாலியின் மிலனில் உள்ள ஐரோப்பிய சுவாச அமைப்பில்(European Respiratory Society) இந்த ஆய்வு முடிவுகள்…

ஒடிசா முதல்-மந்திரியின் சகோதரி காலமானார் – பிரதமர் மோடி இரங்கல்!!

பிரபல எழுத்தாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரும், ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கின் சகோதரியுமான கீதா மேத்தா (80), நேற்று புதுடெல்லியில் காலமானார். இந்நிலையில், மறைந்த ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கின் சகோதரியான கீதா…

லிபியாவில் மரண ஓலம் : குவியல் குவியலாக புதைக்கப்படும் சடலங்கள் : கதறி அழ கூட ஆளில்லாத…

லிபியாவின் கிழக்கு பகுதியை கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கிய டேனியல் புயலால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டேனியல் புயல் அதனால் ஏற்பட்ட கடும் மழை காரணமாக அங்குள்ள இரண்டு அணைகள் இடிந்து விழுந்தன. இதனால்…

பிரதமர் மோடி பிறந்தநாள் – 100 சதவீதம் தள்ளுபடி அறிவித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!!!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அவருடைய சொந்த குஜராத் மாநிலத்தில் சிறப்பாக கொண்டாடுவதற்கான நடவடிக்கைகளில் கட்சியினர் மற்றும் மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதன்படி, பிரதமர் மோடியின் பிறந்த நாளை…

உக்ரைனின் தானிய ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் நாடுகள்! அதிகரிக்கும் நெருக்கடி !!

உக்ரைனிலிருந்து தானியங்களை இறக்குமதி செய்வதற்கு போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகள் சொந்த கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் அண்டை நாடுகளிற்கு தானிய இறக்குமதிகளை முன்னெடுப்பது தொடர்பான தடைகளை நீடிக்காது…

தயாசிறிக்கு உயிர் அச்சுறுத்தல்?

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தாம் நீக்கப்பட்டமையை அடுத்து தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இதேவேளை, தயாசிறி ஜயசேகர, ஸ்ரீ லங்கா சுதந்திர…

தோட்ட அதிகாரி உள்ளிட்ட இருவர் குளவி கொட்டுக்கு இலக்கு !!

ஹட்டன் - நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட உதவி அதிகாரி மற்றும் களஞ்சிய பொருப்பாளர் ஆகிய இரண்டு பேரும் இன்று மாலை 4.30 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இதையடுத்து இவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில்…

கிணற்றில் குதித்து 5 வயது மகளுடன் தற்கொலை செய்த ஆசிரியை!!

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கல்நாடு அரமங்காணம் பகுதியைச் சேர்ந்தவர் தாஜுதீன். இவரது மனைவி ரூபினா (வயது 30). இவர்களது மகள் நயனா மரியம் (5). இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறான். சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரூபினா மற்றும் அவரது மகள்…

சீன பாதுகாப்பு அமைச்சர் பொது வெளியில் காணவில்லை: வெடித்தது புதிய சர்ச்சை !!

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் லி ஷங்பு இரண்டு வாரங்களாக பொது வெளியில் தோன்றாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஓகஸ்ட் 29 அன்று ஆபிரிக்க நாடுகளுடனான பாதுகாப்பு சபை கூட்டத்தில் அவர் கடைசியாக பொது வெளியில் தோன்றியுள்ளதாக…

ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லாவில் பயங்கரவாதி சுட்டுக்கொலை!!

ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக வீரர்களுக்கும், போலீசாருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. அனந்த்நாக் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் உயர் அதிகாரிகள் இருவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.…

கிறிஸ்தவத்தை பரப்புதல், ஊக்குவித்தல்: 18 என்.ஜி.ஓ.-க்களை பிடித்து வைத்திருக்கும் தலிபான்!!

ஆப்கானிஸ்தானில் தலிபான், ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பல்வேறு அடாவடி செயல்களில் ஈடுபட்டு வருகிறது. பெண்களுக்கான சுதந்திரத்தில் தலையிட்டு கல்லூரிக்கு பெண்கள் செல்லக் கூடாது, அழகு நிலையத்தில் பணிபுரியக்கூடாது உள்ளிட்ட பல்வேறு தடைகளை…

மனைவி வீட்டுக்கு தீ வைத்த தொழிலாளி கைது!!

கேரள மாநிலம் திருச்சூர் கனிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 22). இவரது மனைவி ராதா. குடும்ப பிரச்சினை காரணமாக ராதா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். அப்போது…

ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் சேர கியூபா தடை!!

உக்ரைனுக்கு எதிராக சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா கடந்த ஆண்டு போர் தொடுத்தது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உள்ளன. அதேபோல் ரஷியாவுக்கு ஆதரவாக அதன் நட்பு நாடுகளான சீன, வடகொரியா போன்றவை…