;
Athirady Tamil News
Monthly Archives

October 2023

விளையாட்டு உபகரணங்கள் வழங்கலும் கௌரவிப்பு நிகழ்வும்!!

மருதமுனை மனாரியன் 88 அமைப்பின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் "மருதமுனை இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கு உதவுவோம்" எனும் செயற் திட்டத்தின் கீழ் மருதமுனையிலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்ற நிகழ்வு…

பொலிஸாரினால் மர நடுகை வேலைத்திட்டம் ஆரம்பம்

இயற்கையை நேசித்து சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜயஸ்ரீ எண்ணத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் தலைமையில் பொலிஸாரினால் மர நடுகை வேலைத்திட்டம்…

நிலவில் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவருக்கு அச்சுறுத்தல்: ஆய்வாளர்கள் அச்சம்

நிலவில் விக்ரம் லேண்டருக்கும் பிரக்யான் ரோவருக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008 -ஆம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. இந்த…

யாழில் சீன ஓயில்

கடந்த சில காலமாக சீனாவின் செயற்பாடுகள் தெற்கை நோக்கியதாக இருந்த நிலையில் தற்போது வடக்கிலும் தனது செயற்பாட்டை மெல்ல ஆரம்பித்துள்ளது. இந்த மாத ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் சினோபெக் நிறுவனம் பெற்ரோல் விநியோகத்தை ஆரம்பித்த நிலையில் இன்று…

30 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியர்களுக்கான பிரியாவிடை வைபவம்

அஞ்சல் அலுவலகத்தில் மிக நீண்ட காலமாக பணியாற்றி ஓய்வு பெற்ற இரு உத்தியோகத்தர்களின் சேவை நலன் பாராட்டும் வைபவம் இன்று கல்முனை பிரதம தபாலகத்தில் கல்முனை பிரதம அஞ்சல் அதிபர் யூ.எல்எம். பைஸர் தலைமையில் நடைபெற்றது. கடந்த காலங்களில்…

முகவர் ஊடாக வெளிநாடு செல்ல முற்பட்டு இடைத்தங்கல் நாடுகளில் சிக்கித்தவிக்கும்…

யாழ்ப்பாணத்தில் உள்ள பலரும் பெருமளவு பணத்தை கொடுத்து முகவர்கள் ஊடாக வெளிநாடு செல்ல முயன்று இடைத்தங்கல் நாடுகளில் சிக்கி தவிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பிரான்ஸ்க்கு செல்வதற்காக இருபது இலட்சம் ரூபாய் பணத்தை வெளிநாடொன்றில் உள்ள…

இசை நிகழ்வில் கலந்து கொண்டோர் செய்த செயல்

யாழில் இடம்பெற்ற இசை நிகழ்வுக்கு சென்றவர்கள் மைதானத்தில் வீசி சென்ற கழிவுகளை தூய்மை பணியாளர்கள் தமது கைகளால் அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் கடந்த சனிக்கிழமை சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்வு…

இதில் எங்களுக்கு பங்கில்லை…. இஸ்ரேலுக்கு எதிராக வீதியில் இறங்கிய ஐரோப்பிய யூத சமூகம்

அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் தாக்குதல் தொடுத்ததும், மேற்கத்திய நாடுகள் வரிசையாக கண்டனம் தெரிவித்தும், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தும் வரிசையாக களமிறங்கியது, இறுதியில் என்னவாக முடியும் என தெரியும் என குறிப்பிட்டுள்ளார் பிரபல இஸ்ரேலிய இசைக்கலைஞர்.…

மானம்பூ உற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஜயதசமி – மானம்பூ உற்சவம் இன்று காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் இடம்பெற்று குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வெளிவீதி உலாவந்ததுடன்…

சாணக்கியன் எம்.பியின் அலுவலகம் முற்றுகை-100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பண மோசடியால் தஞ்சம்

video link-https://fromsmash.com/FqxPhfKqWH-dt மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளிநாடு மோகத்தினால் பணத்தை இழந்துள்ளதாக குறிப்பிட்டு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முறைப்பாடு…

கொழும்பில் சொகுசு காரால் பதற்றம்!

கொழும்பு மெக்கலம் வீதியில் உள்ள மத்திய தபால் பரிமாற்று நிலையத்துக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (24) பிற்பகல் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்துக்குப் பொதி ஒன்றை எடுத்துச்…

யாழில் மதுபோதையில் பேருந்து செலுத்திய சாரதி; நீதிமன்றம் அதிரடி!

யாழில் மதுபோதையில் பேருந்து செலுத்திய இ.போ.ச சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (22) ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தை வழிமறித்து…

மாணவர்களிடம் திரட்டப்பட்ட 64 ஆயிரம் ரூபா பணம் திருட்டு; முட்டைமீது சத்தியம் வாங்கிய…

பொகவந்தலாவை பகுதியில் உள்ள தோட்ட பாடசாலையொன்றில் நவராத்திரி விழாவுக்காக மாணவர்களிடம் திரட்டப்பட்ட 64 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாடசாலை அதிபர் கூறியதாக தெரிவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்…

ஆசிரியர்களின் பேரணி மீது சற்றுமுன் பொலிஸார் தாக்குதல்

கொழும்பில் இடம்பெற்று வரும் ஆசிரியர்களின் பேரணி மீது சற்றுமுன் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெலவத்தை, பாலம்துனா சந்திக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை…

வெளிநாட்டு மோகத்தை காட்டி லட்சகணக்கில் கொள்ளையடித்த இராணுவ மேஜர்

அமெரிக்காவிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி தனது மனைவியுடன் சேர்ந்து சுமார் 42 இலட்சம் ரூபாவை மக்களிடமிருந்து மோசடி செய்த இராணுவ மேஜர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் நேற்று (23) பிற்பகல் கைது…

முல்லைத்தீவில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகள் மீட்பு

முல்லைதீவு- வவுனிக்குளதில், கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் குமாரகுலசிங்கம் சங்கீதன் தலைமையில் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது சுமார் 15 பெறுமதியான தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை…

இலங்கை குயில் அசானிக்கு மேளதாளத்துடன் வரவேற்பு!

இலங்கை சிறுமி அசானிக்கு கடலூர் கிராமத்தில் மிகவும் கோலாகலமாக மேளதாளத்துடன் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. மலையக குயில் அசானி தமிழகத்தில் நடைபெற்று வரும் சரிகமப இசை நிகழ்ச்சியில் பங்கு பற்றி தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.…

ஆடை ஏற்றுமதி வருவாயில் ஏற்பட்ட மாற்றம்!

இந்த ஆண்டுக்கான (2023) ஆடை ஏற்றுமதிக்குரிய வருமானம் குறைவடைந்துள்ளதாக ஐக்கிய ஆடை மன்றம் தெரிவித்துள்ளது. இது கடந்த 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் ஒரு பில்லியன் டொலர்களாகக் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்றுமதிக்கான…

யாழில் பெண் சாமியாரை நம்பி 17 லட்சம் இழந்த இளைஞர்!

யாழில் வெளிநாடுசெல்லும் ஆசையில் இளைஞர் ஒருவர், சாமியாடிப் பெண் சொன்னதை நம்பி 17 லட்சம் ரூபா பணத்தை இழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வெளிநாடு செல்லும் ஆசையில் இருந்த ஒருவர், முகவர்களை…

காலையில் சென்னையில் தடம் புரண்ட புறநகர் ரயில்!! பொதுமக்கள் தவிப்பு!!

சென்னை புறநகர் பகுதியில் இன்று காலை புறநகர் ரயில் ஒன்று தடம்புரண்டதால் ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. சென்னை புறநகர் ரயில் பெரும்பாலும் சென்னையில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்னை புறநகர் பகுதிகளிலேயே வசிக்கின்றனர். அவர்களில்…

லண்டனில் பலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்துகொண்ட நபர் பணி இடைநீக்கம்

லண்டனில் சுரங்க தொடருந்து சாரதி ஒருவர் பலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்துகொண்டதற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த ஆதரவு பேரணியானது கடந்த சனிக்கிழமை(21) முன்னெடுக்கப்பட்டிருந்தது. லண்டனில் இஸ்ரேல்…

நோர்வேயில் முதல் தமிழ் பெண் விமானியாக சாதனை படைத்த யாழ் வுவதி!

நோர்வே நாட்டின் முதல் தமிழ் பெண் விமானியாக பட்டம் பெற்று யாழ்ப்பாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் யாழ் குருநகரை சேர்ந்த ஷெர்லி செபஸ்தியாம்பிள்ளை. ஷெர்லி செபஸ்தியாம்பிள்ளை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தனது விமான கல்வியை ஆரம்பித்து தனது…

இன்டர்போல் ரெட் நோட்டீஸ்க்குட்பட்டிருந்த இலங்கை தமிழர் : கறுப்பு பட்டியலிலிருந்து இருவர்…

பயங்கரவாதம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட இருவரின் பெயர்களை நீக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன…

அக்கரைப்பற்று வயல் பிரதேசத்தில் உயிருக்குப் போராடும் யானை!

அக்கரைப்பற்று - இசங்காணிச்சீமை வயல் பிரதேசத்தில் கடந்த இரு தினங்களாக கால்வாய்க்குள் வீழ்ந்து காட்டு யானையொன்று உயிருக்கு போராடி வருவதாக அக்கரைப்பற்று பொலிஸார்த் தெரிவித்துள்ளனர். இக்காட்டுயானை கடந்த திங்கட்கிழமை அதிகாலை வேளையில்…

வலுவிழக்கும் இலங்கை ரூபாவின் பெறுமதி

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்றையதினம்(24.10.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இது தொடர் வீழ்ச்சியாகும். இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை…

துபாயில் போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய இலங்கைப்பிரஜை

இலங்கை பிரஜை ஒருவர் துபாயில் இரகசிய பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குழுவுடன் தொடர்புடையவர் என கருதப்படுவதாக தெரிவித்தே இலங்கையர்…

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : அதிகரிக்கப்படும் சம்பளம்

இந்த முறை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என நம்புவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு…

டிசம்பர் மாதம் வரை முட்டைகளை இறக்குமதி செய்வது அவசியம்

எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை மாத்திரம் இலங்கைக்கு முட்டைகளை இறக்குமதி செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாட்டில் நுகர்வுக்குத் தேவையான அளவு…

மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது – ஊர் திரும்ப காத்திருக்கும் மக்கள்…

மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் தென் மாநில ஆம்னி பேருந்துகளின் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், `தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம்…

சுற்றுலா விடுதியில் சிக்கிய இளம் ஜோடிகள்; வத்தளையில் பதிவாகிய சம்பவம்

வத்தளை - ஹுனுபிட்டிய பிரதேசத்தில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் ஐஸ் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட நான்கு இளம் ஜோடிகளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த சந்தேகநபர்களுக்கு விடுதியறையை வழங்கிய முகாமையாளரும்…

பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட யாழ் மற்றும் வவுனியா நபர்கள்

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதற்காக கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவரை பாதுகாப்பு அமைச்சு நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவினால்…

மேல் மாகாண பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள்: நிர்வாக நடவடிக்கைகள் பாதிப்பு

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் சுமார் 400 அதிபர் வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை மேல் மாகாண ஆளுநர் ரொசான் குணதிலக்க தெரிவித்துள்ளார். நிர்வாக நடவடிக்கைகள் பாதிப்பு இதனால் பாடசாலைகளின் செயற்பாடுகள்…

யாழில் கோலாகலமாக அனுஷ்டிக்கப்பட்ட ஆயுத பூஜை

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள குருக்கள் ஒருவரது இல்லத்தில் ஆயுத பூஜையானது முற்றிலும் இந்திய முறைப்படி கோலாகலமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. ஏழு படிகளில் கொலு வைத்து நாதஸ்வர இசையுடன் நேற்றிரவு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதாக…

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட மீனவர்கள்!

இலங்கை நோக்கிப் பயணித்த பல நாள் படகு ஒன்றுடன் இலங்கை மீனவர்கள் 5 பேர் 200 கிலோ கிராம் போதைப்பொருள் சரக்குகளுடன் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அரச புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்…