;
Athirady Tamil News
Monthly Archives

November 2023

இஸ்ரேல் – ஹமாஸ் போர் : ரொறன்ரோவில் அதிகரிக்கும் வெறுப்புணர்வு சம்பவங்கள்!

ரொறன்ரோவில் இஸ்ரேல் காசா போர் காரணமாக வெறுப்புணர்வு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக, ரொறன்ரோ பொலிஸ் பிரதானி மெய்ரோன் டெம்கிவ் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் அறியத்தருகையில், “இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் யூத எதிர்ப்பு…

வவுனியாவில் கோர விபத்து : ஐவர் படுகாயம்

வவுனியாவில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது தேங்காய் ஏற்றிச்சென்ற வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த…

பாம்பை கடிக்க விட்டு மனைவி, மகள் கொலை: ஒடிஸாவில் இளைஞா் கைது

ஒடிஸாவின் கஞ்சம் மாவட்டத்தில் பாம்பை விட்டு கடிக்க வைத்து, மனைவி மற்றும் 2 வயது மகளை கொன்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா். இக்கொடூர கொலை சம்பவம் குறித்து காவல்துறையினா் கூறியதாவது: கஞ்சம் மாவட்டத்தின் கபிசூா்யா நகா் பகுதியைச் சோ்ந்தவா்…

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

2024 இற்கான வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட அரச ஊழியர்களுக்கான பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பில் 5000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…

நீர்கொழும்பு முதல் யாழ்ப்பாணம் வரை… துவிச்சக்கரவண்டியில் சாதனை முயற்சி!

67 வயதுடைய நபர் ஒருவர் இன்று (25) துவிச்சக்கரவண்டியில் நீர்கொழும்பு கொச்சிக்கடை பம்புக்குளிய தேவாலயம் முன்னாலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய 24 மணிநேர சாதனை பயணத்தில் ஈடுபட்டு பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். 'சமாதான துவிச்சக்கரவண்டி…

யாழ். வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கு: பொலிஸாருக்கு விளக்கமறியல்

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை தொடர்பில் கைதான நால்வரையும் எதிர்வரும் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதிவான் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு தயார்ப்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு இன்று…

செங்கடலில் பயணித்த கப்பலுக்கு தாக்குதல் : பதிலடி கொடுத்த அமெரிக்கா

செங்கடலில் பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்க போர்க்கப்பலை நெருங்கி வந்த பல தாக்குதல் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. யெமனில் உள்ள ஹவுதி பயங்கரவாத அமைப்பே ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா…

காய்ச்சல் உள்ளவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த நாட்களில் பதிவாகும் சளியுடன் கூடிய காய்ச்சல் மற்றும் சுவாச நோய் கோவிட்-19 மற்றும் இன்புளுவன்சா உள்ளிட்ட பல வைரஸ்களின் கலவையாக இருக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம்…

வடக்கு மாகாணத்தில் நிலவும் அதிபர் பற்றாக்குறை தொடர்பில் விளக்கம்

வடக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 1 ஐ சேர்ந்தவர்கள் 214 பேர் தேவையாக உள்ளபோதும் கடமையில் இருப்பது 129 பேர் என தகவல் அறியும் உரிமைச்சடத்தின் மூலம் கோரப்பட்ட தகவல்களுக்கு வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார…

இலங்கை மக்களுக்கு அடுத்தாண்டில் காத்திருக்கும் பேரதிர்ச்சி : பொருளாதார நிபுணர்கள்…

2024 ஆம் ஆண்டில் பில்லியன்கணக்கான பணத்தை நாட்டு மக்கள் வரியாக செலுத்த வேண்டும் என துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2023ஆம் ஆண்டை விட 88100 கோடி ரூபாய் (881 பில்லியன்) மறைமுக வரியாகவும், 34,200 கோடி ரூபாய் (342 பில்லியன்) நேரடி…

போதைப்பொருளுக்காக பிள்ளைகளை விற்ற பெற்றோர்; அதிர்ச்சியில் பொலிஸார்

இந்தியாவின் மும்பை நகரத்தில் பெற்றோர் போதைப்பொருளுக்காக தங்களது மூத்த ஆண் பிள்ளை மற்றும் ஒரு மாத குழந்தையை பணத்திற்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பொலிஸாரால் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்…

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் அனுமதி

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இன்று (25) மன்னார் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும்…

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் சடலம் மீட்பு

பலஹருவ, குடோ ஓயா பாயும் அளுத்வெல பாலத்தின் மீது மோட்டார் சைக்கிளை செலுத்திய போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சற்று தொலைவில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.…

பிரித்தானியாவில் புலம்பெயர் மக்களை கட்டுப்படுத்த புதிய யோசனை சொன்ன போரிஸ் ஜான்சன்

40,000 பவுண்டுகள் அல்லது அதற்கு மேல் சம்பாதிக்கும் புலம்பெயர்ந்தோர் மட்டுமே இனி பிரித்தானியாவில் அனுமதிக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் யோசனை தெரிவித்துள்ளார். தனி கவனம் செலுத்த வேண்டும் பிரித்தானியாவில் புலம்பெயர்…

தாய்க்கு மருத்துவமனையில் சிகிச்சை.., அழுத கைக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பொலிஸ்

இந்திய மாநிலம் கேரளாவில், தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அழுத 4 மாத கைக்குழந்தைக்கு பெண் காவலர் ஒருவர் தாய்ப்பால் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்க்கு சிகிச்சை கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் வட…

சித்தங்கேணி இளைஞன் மரணம்; நால்வர் அதிரடிக்கைது!

யாழ்ப்பாணம் வட்டுகோட்டை பொலிஸாரால் சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்த சித்தங்கேணி இளைஞன் விவகாரத்துடன் தொடர்புடைய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில்…

வவுனியா இரட்டைகொலை; ஓடி ஒளிந்தவர் சிக்கினார்

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற தம்பதிகள் இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (24) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, 4ஆம் கட்டைப் பகுதியைச்…

வவுனியாவுக்கு பெருமை சேர்த்த இளம் யுவதி; நீதிபதியாக பதவியேற்பு!

வவுனியாவில் இருந்து இளவயதில் நீதிபதியாக பதவியேற்கும் தமிழ் பெண் இலங்கை நீதித்துறை வரலாற்றில் இளவயதில் நீதிபதியாக வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பதவியேற்கின்றார். வரலாற்றில் வவுனியா மாவட்டத்தில் மிக இளவயது தமிழ் பெண்…

மருமகனால் தாக்கப்பட்டு மாமியார் உயிரிழப்பு; இலங்கையில் பகீர் சம்பவம்

மீரிகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பொல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மீரிகம , மாகுர பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய பெண்ணாவார். இவர் தனது மகளின்…

யாழ். பல்கலையில் 3 விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாக பதவி உயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தாவரவியல் துறைத் தலைவர் உட்பட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப்கப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். விஞ்ஞான பீடத்தின் தாவரவியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஈ.சி. ஜெயசீலன்,…

சிறார்கள் மீது கொடூர தாக்குதல் : அயர்லாந்தில் வெடிக்கும் வன்முறை

அயர்லாந்தின் தலைநகர் டப்ளின் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 3 குழந்தைகள் உட்பட 4 பேர் காயமடைந்த சம்பவத்தை தொடர்ந்து நகரம் முழுவதும் வன்முறைகள் நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில்…

சீரற்ற காலநிலையால் இருவர் மாயம்

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் இரு வெவ்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கிய இருவரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னேரிய குளத்திலிருந்து கந்தளே ஏரிக்கு நீர் செல்லும் கால்வாயில் நீராடச் சென்ற நபர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார்…

மண்ணெண்ணெய், டீசலுக்கு வரி விலக்கு

வற் வரி அதிகரிப்பினால் மண்ணெண்ணெய் மற்றும் டீசல் விலையில் தாக்கம் செலுத்ததாது வரி விலக்கு வழங்கப்படும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். அடுத்த ஆண்டு முதல் காலாண்டு பகுதியில் மத வழிபாட்டு…

சம்பளம் கேட்ட இளைஞரின் வாயில் செருப்பை திணித்த பெண் தொழிலதிபர்.., கொடூரமாக நிகழ்ந்த…

இந்திய மாநிலம், குஜராத்தில் சம்பள பாக்கி கேட்ட 21 வயது பட்டியலின இளைஞரின் வாயில் செருப்பை திணித்த உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இளைஞர் பணிநீக்கம் குஜராத் மாநிலம் மோர்பியில் வெளிநாடுகளுக்கு டைல்ஸ் ஏற்றுமதி செய்யும்…

யாழில் அதிரடியாக கைதான நபர்!

யாழ்ப்பாணம் பொன்னாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (24) பகல் 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டார். விசேட அதிரடிப்படையினரும் புலனாய்வாளர்களும் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் சந்தேகநபர் கைது…

சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பு தொடர்பில் மத்திய வங்கி ஆளுனர் தகவல்

நாட்டின் பிணை எடுப்புத் திட்டத்தின் முதல் மறுஆய்வுக்கு, சர்வதேச நாணய நிதியம் அடுத்த மாதம் ஒப்புதல் அளிக்கும் என இலங்கை எதிர்பார்க்கிறது. இது பலதரப்பு முகவர் நிறுவனங்களிடமிருந்து 900 மில்லியன் டொலர் நிதியை விடுவிக்க வழிவகை செய்யும் என்று…

சஜித் பிரேமதாசவுக்கு எதிராக டயானா கமகே தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் முறையே ஐக்கிய மக்கள்…

சோமாலியாவில் வெள்ளப்பெருக்கு : 96 பேர் பலி : அவசர நிலை அறிவிப்பு

சோமாலியாவில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கினால் 96பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இதுவரையிலும் 2,50,000 இற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. கடுமையான…

இலங்கையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்படும் சேவை!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை அனுப்பும் DOOR TO DOOR முறையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கபப்டுகின்றது. இலங்கை சுங்க திணைக்களம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வெளிநாட்டினர் DOOR…

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: ஜனவரியில் ஏற்படவுள்ள மாற்றம்

வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபாய் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவில் இருந்து 5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஓய்வூதியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2500…

அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் : ஐவர் கைது

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் குறைந்தது 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்களில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருவதற்கு எதிர்ப்புத்…

பல்கலைக்கழகம் செல்ல தயாராக இருந்த யுவதி உறக்கத்திலேயே மரணம்

தலத்துஓயா உடுவெல பிரதேசத்தில் உறங்கிக் கொண்டிருந்த யுவதியொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மொனராகலையைச் சேர்ந்த 22 வயதான சந்துனி ஹன்சமலி பண்டார என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவ்வப்போது சலி காய்ச்சலுக்கு…

பொலிஸ் அராஜகத்துக்கு உடன் முடிவு கட்டுங்கள்: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சி வலியுறுத்து

"வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் பொலிஸாரின் அராஜகம் தொடர்ந்து வருகின்றது. அவர்களால் சந்தேகநபர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டு வருகின்றார்கள். இதற்கு எதிராக ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின்…

அமெரிக்கவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை: அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

அமெரிக்காவில் மருத்துவத்தில் முனைவர் பட்டம் படித்துவந்த 26 வயது இந்திய மாணவர் காருக்குள் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட இந்தியாவைச் சேர்ந்த ஆதித்யா அட்லாகா என்ற மாணவர் சின்சினாட்டி…