;
Athirady Tamil News
Yearly Archives

2023

பாராளுமன்றம் எதிர்வரும் 17 முதல் 20 வரை கூடும்!!

பாராளுமன்றத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை கூட்டுவதற்கு நேற்று (13) முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க…

இருபாலையில் வாள் முனையில் மோட்டார் சைக்கிள் வழிப்பறி!!

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் வாள் முனையில் மோட்டார் சைக்கிள் ஒன்று வழிப்பறி செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருபாலை , டச்சு வீதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு மோட்டார்…

இந்தியாவில் வலுவான போக்குவரத்து வசதி அவசியம் – உலகின் நீண்ட தூர கங்கா விலாஸ் கப்பல்…

வாரணாசியில் இருந்து வங்கதேசம் வழியாக அசாமின் திப்ரூகர் வரை செல்லும் ‘எம்.வி கங்கா விலாஸ்’ சொகுசு கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து வங்கதேசம் வழியாக அசாமின் திப்ரூகருக்கு…

காசி தமிழ்ச் சங்கமம் – இந்திய கலாச்சார மறுமலர்ச்சியின் தொடக்கம்: பியூஷ் கோயல்!!

புனித நகரமான காசியில், பெருமைமிகு தமிழ் கலாச்சாரம் குறித்து ஒரு மாத காலம் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எடுத்துக் காட்டப்பட்டது. உலகில் பழமையான நகரமான காசி மற்றும் தமிழ்நாட்டில் மக்கள் பழமையான மொழிகளை பேசி வருகின்றனர். கலைகள், இசை, கைவினைத்…

அணுக்கசிவினால் பாதிக்கப்பட்ட புகுஷிமா உலையிலிருந்து ஒரு மில்லியன் தொன் சுத்திகரிக்கப்பட்ட…

அணுக்கசிவினால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு மின் ஆலையிலிருந்து, ஒரு மில்லியன் மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான சுத்திகரிக்கப்பட்ட நீரை சமுத்திரத்தில் விடுவிக்கும் நடவடிக்கை இவ்வருடம் ஆரம்பிக்கவுள்ளதாக ஜப்பானிய அரச அதிகாரி ஒருவர் இன்று…

பிரதமர் மோடியை சுவாமி விவேகானந்தருடன் ஒப்பிட்ட மேற்குவங்க பாஜக எம்.பி: திரிணமூல்…

பிரதமர் நரேந்திர மோடியை சுவாமி விவேகானந்தரின் மறு அவதாரம் என்று விமர்சித்த மேற்குவங்க மாநில பாஜக எம்.பி., சவுமித்ரா கானின் பேச்சால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.. சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை ஒட்டி நடந்த நிகழ்வில் கலந்து கொண்ட எம்.பி.…

விமான பயணிகளுக்கு முகக்கவசம் அவசியம் : உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள சூழலில் உலக நாடுகளின் நீண்ட தூர விமான பயணிகளுக்கு முகக்கவசம் அவசியம் என உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை செய்துள்ளது. அமெரிக்காவில், கடந்த 7 ஆம் திகதி வரையிலான அறிக்கையின்படி, 27.6 சதவீதம்…

“தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பணி செய்யவிடமால் தடுப்பது தீங்கானது”: அரவிந்த்…

சிறுசிறு ஆதாயங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பணி செய்யவிடமால் தடுப்பது மக்களுக்கு, ஜனநாயகத்திற்கு, அரசியலமைப்புக்கு எதிரானது" என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி அரசுக்கும்…

டைட்டானிக் விபத்து வரலாறு: 110 ஆண்டுகளுக்குப் பிறகும் நீடிக்கும் நான்கு மர்மங்கள் !!

சரியாக 110 ஆண்டுகளுக்கு முன்பு, டைட்டானிக் கப்பல் ஒரு இருண்ட இரவில் பனிப்பாறையின் மீது மோதியது. அப்போது பெரும்பாலான பயணிகள் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தார்கள். விபத்து நேரிட்டபோது டைட்டானிக் கப்பல் இங்கிலாந்தின் செளத்தாம்ப்டனில் இருந்து…

கேரள பள்ளிகளில் இனி ‘சார்’, ‘மேடம்’ என அழைக்கத் தேவையில்லை… எல்லோரும் ‘டீச்சர்’…

கேரளப் பள்ளிகளில் ஆசிரியர்களை சார் என்றும் ஆசிரியைகளை மேடம் என்றும் கூப்பிடும் வழக்கத்தை விடுத்து அனைவரையும் டீச்சர் என்று பாலின சார்பற்று அழைக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இந்த…

நடப்பு ஆண்டில் பெரும் வறட்சியை எதிர்கொள்ளும் கென்யா!!

நடப்பு ஆண்டில் கென்யாவின் 15 மாகாணங்களில் சுமார் 1 கோடி மக்கள் பட்டினியில் சிக்கும் அபாயம் இருப்பதாக தன்னார்வ அமைப்புகள் தெரிவிக்கின்றன. கென்யாவில் நிலவும் வறட்சி குறித்து சமீபத்தில் சில தன்னார்வ அமைப்புகள் ஆய்வில் ஈடுபட்டன. தற்போது…

திகதி அறிவிப்பு; 17 நள்ளிரவு முதல் விதிக்கப்பட்டுள்ள தடை!!

உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகும் வகையில் அனைத்துப் பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் நடத்துவது ஜனவரி 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த…

ஆசியாவின் அதிசயத்திற்கு ஆபத்து!!

ஆசியாவின் அதிசயம் என்று வர்ணிக்கப்படும் கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிட வருபவர்களில் சிலர் அதன் சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தாமரை கோபுரத்தை பராமரிப்பதற்கு அதிக செலவுகளை மேற்கொள்ள…

புதிய கொவிட் தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகள்!!

இலங்கை வரும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கட்டாயமாக கொவிட் தடுப்பூசி அட்டையை வைத்திருக்க வேண்டும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கொவிட் தடுப்பூசியை போட்டுக் கொள்ளாதவர்கள் இலங்கை வருவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்பு…

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ரதசப்தமி விழா 28-ந் தேதி நடக்கிறது!!

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 28-ந் தேதி ரதசப்தமி விழா நடக்கிறது. விழாவையொட்டி 7 வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். காலை 7 மணி முதல் 8 மணி வரை சூரியபிரபை வாகனத்திலும், 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஹம்ச வாகனத்திலும்,…

இந்தியாவில் 2-வது ஆதியோகி: பெங்களூரு அருகே நாளை மறுநாள் திறப்பு!!

கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஆதியோகி திருவுருவத்தை போன்று, பெங்களூரு அருகே உள்ள சிக்கபல்லாபுரத்தில் 112 அடியில் ஆதியோகி திருவுருவம் ஜனவரி 15-ம் தேதி திறக்கப்பட உள்ளது. மகர சங்கராந்தி தினமான நாளை மறுநாள் சத்குரு…

உக்ரைனின் சோலிடர் பகுதியில் போர் தீவிரம்: மக்கள் சிக்கித் தவிப்பு!!

உக்ரைன் - ரஷ்யா போர் தீவிரமாக நடந்து வரும் சோலிடர் பகுதியில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புத்தாண்டைத் தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் இடையே போர் சற்று தளர்த்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், மீண்டும் இரு தரப்பிலும்…

தூக்கில் தொங்கிய நிலையில் கிரிக்கெட் வீராங்கனை சடலமாக மீட்பு- போலீசார் விசாரணை!!

ஒடிசாவைச் சேர்ந்த பெண் கிரிக்கெட் வீராங்கனை ராஜஸ்ரீ ஸ்வைன் என்பவர், கடந்த 11ம் தேதி முதல் காணாமல் போனதாக அவரது பயிற்சியாளர் கட்டாக்கில் உள்ள மங்களபாக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார், ராஜஸ்ரீயை தேடி…

விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்தது நான் அல்ல- கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில்…

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி வந்து கொண்டிருந்தது. அப்போது பிஸினஸ் வகுப்பில் பயணம் செய்த ஷங்கர் மிஸ்ரா என்பவர், சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். சிறுநீர் கழித்த நபர்…

தலிபான்கள் ஆட்சியில் தயாரிக்கப்பட்ட முதல் நவீன கார் ’மடா 9’!!

ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்து ஒன்றரை வருடங்களான நிலையில் நவீன கார் ஒன்றை தலிபான்கள் உத்தரவின்பேரில் பொறியியல் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”ஆப்கானிஸ்தானில் உள்ள டெக்னிக்கல் வெகேஷனல் என்ற…

புதையும் நகரமான ஜோஷிமத்தில் ஆபத்தான கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கியது!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் நகரத்தில் ஏராளமான வீடுகள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. புதையும் நகரமாக மாறிய ஜோஷிமத்தில் உள்ள 2 பெரிய ஓட்டல் கட்டிடங்கள் சரிந்த நிலையில் உள்ளன. இதையடுத்து அப்பகுதி நிலச்சரிவு அபாயம் உள்ள…

அமெரிக்காவில் விமான சேவை முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியது!!!

அமெரிக்காவில் பயணிகள் விமான சேவை கட்டுப்பாட்டு மையமாக உள்ள மத்திய விமான போக்குவரத்து நிர்வாக அமைப்பின் கம்ப்யூட்டர் சர்வரில் நேற்று முன்தினம் திடீரென்று பழுது ஏற்பட்டது. இதனால் நாடு முழுவதும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.…

திருப்பதியில் பக்தர்கள் தங்கும் அறை வாடகை உயர்த்தப்பட்டது ஏன்?- தேவஸ்தானம் விளக்கம்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் சாதாரண மற்றும் நடுத்தர பக்தர்களின் வசதிக்காக ரூ 50, 100 குறைந்த…

கொரோனா கட்டுப்பாடு தளர்வு- சீனாவில் இருந்து தினமும் 2.5 லட்சம் பயணிகள் வெளியேறுகின்றனர் !!

கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்ததை அடுத்து, சீனா தளர்வுகளை அறிவித்தது. சீனாவிற்கு வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் போன்ற கட்டுப்பாடுகள் ரத்து செய்ததை அடுத்து, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனா தனது…

ஆந்திராவில் அடுக்குமாடி குடியிருப்பு பால்கனி இடிந்து விழுந்து 2 பெண்கள் மரணம்!!

ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம், பார்சுரு பஜார் தெருவில் 5 அடுக்குமாடி கொண்ட குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. குடியிருப்பில் 20 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பில்…

மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசிய வாலிபருக்கு அபராதம் !!

வடக்கு இங்கிலாந்து பகுதியில் கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மன்னர் சார்லஸும், ராணி கமிலாவும் பங்கேற்றனர். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களை நோக்கி மன்னரும், ராணியும் கையசைத்து உரையாடியபடி நடந்து சென்றனர். அப்போது, கூட்டத்தில் இருந்த…

உலகின் மிக நீளமான நதிப்பயண சொகுசு கப்பலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பலை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த சொகுசு கப்பல் வாரணாசியில் தொடங்கி 51 நாட்கள் பயணித்து அசாமின் திப்ருகர் வழியாக, பங்களாதேஷ் சென்றடைகிறது.…

கோல்டன் குளோப்பில் பங்கேற்ற ஹாலிவுட் பாடகி திடீர் மரணம்!!

கோல்டன் குளோப் விழாவில் பங்கேற்ற ஹாலிவுட் பாடகி லிசா மேரி பிரெஸ்லி உடல் நலக் குறைவால் திடீரென மரணமடைந்தார். ஹாலிவுட் பாடகியும், பாடலாசிரியுமான லிசா மேரி பிரெஸ்லி (54), கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அதையடுத்து…

யாழில் 11 மாத குழந்தை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய தாய் மாமன்!!

யாழ்ப்பாணத்தில் பிறந்து 11 மாதங்களேயான பெண் குழந்தை தாய் மாமனால் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குழந்தையின்…

சைக்கிள் ஓட்டியபடி பிரபல இந்தி பாடலுக்கு நடனமாடிய இளம்பெண்!!

இந்தியில் பிரபலமான 'ஆப்கா அனா' என்ற பாடலுக்கு இளம்பெண் ஒருவர் சைக்கிள் ஓட்டியபடி நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பெண்ணின் பெயர் பஸ்ரா. இவர் சாலையில் கையை விட்டபடி சைக்கிள் ஓட்டி வருகிறார். அப்போது 'ஆப்கா அனா' என்ற…

சின்னத் தேர்தலும் பெரிய கேள்விகளும் !! (கட்டுரை)

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான சத்தியத்தன்மை குறித்த வாதப் பிரதிவாதங்களே, இன்று அரசியல் அரங்கை நிரப்பியுள்ளன. தேர்தல் நடந்தால், நாட்டில் நிலவும் பெரும்பாலான பிரச்சினைகள், நெருக்கடிகள் எல்லாம் முற்றாகத் தீர்ந்து விடும் என்ற அளவுக்கு அதன்…

ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள் !! (மருத்துவம்)

குழந்தைகள் நன்றாக படிப்பதற்கு அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது. ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது…

இலங்கை வரும் ஜெய்சங்கர்!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அதன்படி, எதிர்வரும் ஜனவரி 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய…