;
Athirady Tamil News
Yearly Archives

2023

இங்கிலாந்து மன்னர் சார்லசுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பின் வாரிசுப்படி அவரது மகனான சார்லஸ், இங்கிலாந்து மன்னராக பொறுப்பேற்றார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து மன்னர் சார்லசுடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார். இந்தப்…

எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள இந்தியா தயார் – ராஜ்நாத் சிங்!!

அருணாச்சல பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் லடாக், அருணாச்சலபிரதேசம், சிக்கிம் உள்பட எல்லை மாநிலங்களில் சாலை, பாலம் உள்பட 28 எல்லை உள்கட்டமைப்பு திட்டங்களை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்தார். அப்போது அவர்…

கிம் ஜாங் உன்: அணு ஏவுகணை, அடுத்த வாரிசு – இவரிடம் இந்த ஆண்டு என்ன எதிர்பார்க்கலாம்?

இதுவரை இல்லாத அளவு கடந்த 2022ஆம் ஆண்டில் அதிக அளவில் ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்துள்ளது. மேலும் கூறவேண்டும் என்றால், வட கொரியா இதுவரை ஏவிய ஏவுகணைகளில் கால் பங்கு 2022ல் ஏவப்பட்டதுதான். வடகொரியா அணு ஆயுத நாடாக மாறிவிட்டதாக கிம் ஜாங்-உன்…

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி கலந்துரையாடல்!!

பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றைப் போக்கும் வகையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். இந்நிலையில், நடப்பு கல்வி…

உலக பொருளாதாரம்: மூன்றில் ஒரு பங்கு உலக நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?

உலகப் பொருளாதார வலிமையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ள நாடுகள் இந்த ஆண்டு மந்தநிலையை எதிர்கொள்ளும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் எச்சரித்துள்ளார். அந்த அமைப்பின் தலைவரான கிறிஸ்டலீனா ஜியார்ஜீவா, கடந்த ஆண்டை விட 2023ஆம் ஆண்டு சற்று…

கேரளா முழுவதும் அரசு அலுவலகங்களில் இன்று முதல் பயோமெட்ரிக் வருகை பதிவு அமல்!!

கேரளாவில் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வருவதாகவும், பணி நேரம் முடியும் முன்பே அலுவலகத்தை விட்டு சென்று விடுவதாகவும் உயர் அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார்கள் வந்தது. இதையடுத்து கேரள அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை…

2008இல் களவு போன கிமு 332 காலகட்ட சவப்பெட்டியை எகிப்திடம் ஒப்படைத்த அமெரிக்கா!!

அமெரிக்க அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பச்சை நிறத்திலான பழங்கால எகிப்து சவப்பெட்டி மீண்டும் எகிப்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிமு 664 முதல் கிமு 332 காலகட்டத்தைச் சேர்ந்த 9.5 அடி நீளமுள்ள இந்த சவப்பெட்டி அன்கென்மாத் என்ற…

பரதநாட்டியம் ஆடிய பெண்ணுக்கு ஆசி வழங்கிய கோவில் யானை !!

தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு அருகே கட்டீல் துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிரிஜா என்ற 31 வயது பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவில் யானை முன்பு இளம்பெண் ஒருவர் பரதநாட்டியம் ஆடினார். அப்போது அவருக்கு…

துபாயில் மதுபானம் மீதான வரி குறைக்கப்பட்டது ஏன்?

துபாயில் மது மீதான 30% நகராட்சி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தவிர தனிநபர்கள் மதுபானங்கள் வாங்க இருந்த 'லைசன்ஸ்' முறையும் நீக்கப்பட்டுள்ளது. இது ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. நீண்டகாலமாக இருந்து வந்த முக்கியமான வருவாய்…

பா.ஜனதா-கம்யூனிஸ்டு இடையே ரகசிய உறவு: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!!

கொல்கத்தாவில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:- அனைவரையும் உள்ளடக்கிய கொள்கையை நாம் பின்பற்றி…

10 லட்சம் மரணங்கள்.. பல புதிய வேரியண்ட்கள்? சீனாவை பார்த்து உலக நாடுகள் மிரள்வது ஏன்!

சீனாவில் இப்போது கொரோனா அலை உச்சம் தொட்டுள்ளது. இது வழக்கத்தைக் காட்டிலும் உலக நாடுகள் மத்தியில் அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான காரணம் என்ன என்பதைப் பார்க்கலாம். சீனாவில் இத்தனை காலமாக ஜீரோ கோவிட் பாலிசியை கடைப்பிடித்து வந்ததது.…

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 134 ஆக குறைந்தது!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 265 ஆக இருந்தது. நேற்று 173 ஆக குறைந்தது. இந்நிலையில், இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 134 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட…

புதிய வகை கொரோனா நுரையீரலை விட மூளையை மோசமாக தாக்குமா?

சீனாவில் பரவும் ஒமிக்ரானின் புதிய வகை வேரியண்ட்கள் நுரையீரல் உள்பட சுவாச பகுதிகளை தாக்குவதை விட மூளையை குறிவைத்து தாக்கும் என்று செய்திகள் வெளியாகின. சீன ஊடகம் வெளியிட்ட செய்திகளை அடிப்படையாக கொண்டு இந்த செய்தி வெளியானது. இந்த சூழலில், இதன்…

ஒரு சில துறைகளின் ஓய்வு வயது நீடிக்கும்!!

கடந்த 2022ஆம் ஆண்டு டிசெம்பர் 31 ஆம் திகதியன்று 30 ஆயிரத்துக்கும் அதிகமான அரச ஊழியர்கள் ஓய்வு பெற்ற நிலையில், ஒரு சில விசேட துறைகளில் பணியாற்றும் அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை குறைந்தபட்சம் 65 ஆக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம்…

நடை பயணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் செல்ல பத்தனம்திட்டை-பம்பை இடையே வாகன வசதி உள்ளது. ஆனால் எருமேலி-பம்பை (27.5 கி.மீ) மற்றும் வண்டிப்பெரியார் புல்மேடு-பாண்டித்தாவளம் (7 கி.மீ) வழியாக நடை பயணமாக மட்டுமே செல்ல முடியும். இதில் எருமேலி-பம்பை இடையே…

ஜனாதிபதி கோரியுள்ள அறிக்கை!!

நஷ்டத்தில் இயங்கி வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் போனஸ் கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்றை கோரியுள்ளார். சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களிடம் இருந்து அறிக்கை…

மானிய விலையில் நடமாடும் அரிசி விநியோகம் காரைநகரில் ஆரம்பம்! (PHOTOS)

காரைநகர் கூட்டுறவு சங்கம் ஊடாக நடமாடும் அரிசி விநியோக சேவை நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கினை உறுதி செய்யும் நோக்கில் வடக்கு…

கழிவு நீரில் பரவும் கொரோனா? மொத்தம் 140 வேரியண்ட்களாம்.. சீனாவை சூழும் இருண்ட காலம்!

சீனாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. இதற்கிடையே வைரஸ் பாதிப்பைக் கண்காணித்து, அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சீனா இறங்கியுள்ளது. சீனாவில் இப்போது கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. முன்பு மற்ற…

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் தங்கத்தேர் பவனி!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. கோவில் உள்ளே அதிகாலை 1.30 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முதலில் சொர்க்கவாசல் வழியாக சென்று வி.ஐ.பி. பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். அதன்…

கிம் ஜாங் உன்னுக்கு அடுத்த இடத்தில் இருந்த வடகொரிய ராணுவ அதிகாரி நீக்கம்.. ஏன் என்னாச்சு?

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு அடுத்த இடத்தில் இருந்த வடகொரிய ராணுவ அதிகாரி பாக் ஜாங் சோன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பதிலாக ரி யோங் கில் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக…

மேற்கு வங்காளத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரெயில் மீது மர்மநபர்கள் கல்வீச்சு!!

மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா-ஜல்பைகுரி இடையே புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை கடந்த மாதம் 30-ந்தேதி பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த ரெயில் நேற்று குமார் கஞ்ச் என்ற ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது அங்கு மறைவான…

அடிச்சுதூக்கிய ரஷ்யா.. பின்னுக்கு சென்ற சவூதி, ஈரான்! இந்தியாவுக்கான கச்சா எண்ணெய்…

இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் நாடுகளின் வரிசையில் சவூதி அரேபியா, ஈரான் ஆகிய அரபு நாடுகளை பின்னுக்குத் தள்ளி ரஷியா முதலிடத்தில் இருந்து வருகிறது. உக்ரைன் உடனான போரை தொடர்ந்து ரஷியா மீது விதிக்கப்பட்டு இருக்கும் பொருளாதார…

ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கு 7 லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்பு!!

ஐ.ஐ.டி., என்.ஐ.டி. ஐ.ஐ.எஸ்.சி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள் ஆண்டுக்கு இருமுறை நடக்கிறது. ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வினை 12-ம்…

எங்க மேல கைய வெச்சா…1971-ல் இந்தியாவிடம் பாகிஸ்தான் சரணடைந்த படத்தை பகிர்ந்து…

ஆப்கானிஸ்தானை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலிபான்களுக்கும் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. 1971-ம் ஆண்டு யுத்தத்தின் போது இந்தியாவிடம் பாகிஸ்தான் சரணடைந்த படத்தை பகிர்ந்துள்ள தலிபான்கள், தங்கள் மீது…

இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்தவர் சுட்டுக்கொலை!!

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படையினர் இன்று காலை 8 மணி அளவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது பாகிஸ்தானை சேர்ந்த ஒருவன் ஆயுதங்களுடன் இந்திய எல்லையில் ஊடுருவ முயன்றான்.…

அதிவேக பேருந்து கட்டணங்களில் மாற்றம்?

அதிவேக பேருந்து கட்டணங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை (04) இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், தேசிய…

எங்கள் நாட்டுப் பயணிகளை மட்டும் குறிவைப்பதா? – கரோனா கட்டுப்பாடுகளுக்கு சீனா…

சீனாவில் சமீப நாட்களாக கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் சீனாவில் இருந்துவரும் பயணிகள் தங்கள் பயணத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று பல்வேறு…

வரலாற்று சாதனையாக திருப்பதியில் ஒரே நாளில் ரூ.7.68 கோடி உண்டியல் வசூல்!!

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் நேற்று நள்ளிரவு 12.05 மணி அளவில் சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள், முதன்மைச்…

முட்டை ஊடாக இலங்கைக்கு வரும் அபாயம்!!

இஷ்டத்துக்கு முட்டைகளை இறக்குமதி செய்தால், "Avian Influenza" எனும் வைரஸ் நோய் இலங்கைக்கு வரும் அபாயம் அதிகம் என அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, முட்டை இறக்குமதி செய்ய எடுக்கப்பட்டுள்ள முடிவை அரசு மறுபரிசீலனை…

114 தொழிலாளர்கள் திடீரென வைத்தியசாலையில் அனுமதி!!

உணவு விஷமானதன் காரணமாக 114 ஆடைத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தின் ஊழியர்கள் குழுவொன்றே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் இமதுவ,…

புகை, மதுபான விலைகள் எகிறின!!

சகல வகையான மதுபானங்கள் மற்றும் புகைப்பொருட்களின் விலைகள் நூற்றுக்கு 20 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன. இன்று (03) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் வைன், பியர் உள்ளிட்ட அனைத்து வகை மதுபானங்கள் மீதான கலால் தீர்வை 20%ஆல்…

ஆமாம், நான் அப்படித்தான்” – சர்ச்சை ஆடியோவுக்கு இம்ரான் கான் அளித்த விளக்கம்!!

ராணுவத் தளபதியாக இருந்த கமர் ஜாவெத் பாஜ்வாவின் பதவிக்காலத்தை நீட்டித்ததுதான் தான் செய்த மிகப் பெரிய தவறு என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இம்ரான் கான் தொடர்பான பாலுறவுப் பேச்சு அடங்கிய ஆடியோ சமீபத்தில்…

சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் 8 பேர் பலி- சாலைகளில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த தடை!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் அடுத்த கந்துகூரில் கடந்த மாதம் 28-ந் தேதி தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நெல்லூரிலிருந்து பொதுக்கூட்டம்…

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: ஈரானில் இரு சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிப்பு!!

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட இரண்டு சிறுவர்களுக்கு ஈரான் மரண தண்டனை விதித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ’கடவுளுக்கு எதிரான போர்’ என்ற குற்றச்சாட்டில் பெயர்கள் குறிப்பிடப்படாத 18 வயதை பூர்த்தியடையாத சிறுவர்கள்…