;
Athirady Tamil News
Monthly Archives

March 2024

பாடசாலை மாணவர்களின் புத்தகப்பை எடையை குறைக்க நடவடிக்கை: சுசில் பிரேம்ஜயந்த

மாணவர்களின் பாடசாலை புத்தகப் பையின் எடையைக் குறைக்க புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். குறித்த தகவலை அவர் ஊவா மாகாண பாடசாலை அதிபர்கள் மத்தியில் உரையாற்றும் போதே குறிப்பிட்டுள்ளார்.…

மைத்திரியியை கைது செய்யுங்கள் : மனோகனேசன் காட்டம்

"முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய வேண்டும்" என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயர் இல்ல வளவில் இன்று (23.03.2024) ஊடகங்களுக்கு…

புறக்கோட்டையில் சீனியின் விலை சடுதியாக அதிகரிப்பு

கொழும்பு - புறக்கோட்டையில் ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் மொத்த விலை 20 முதல் 25 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 255 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.…

மின்விசிறி விழுந்து காயமடைந்த இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கண்டி, அஸ்கிரியவில் உள்ள பாடசாலையொன்றில் மின்விசிறி வீழ்ந்ததில் காயமடைந்த இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (22.03.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் இரு…

நெடுந்தீவு மண்ணில் நெடுவூர்த்திருவிழா

உலகம் முழுவதும் பரந்து வாழும் நெடுந்தீவின் உறவுகளை ஒன்றிணைத்து பிரதேச அபிவிருத்தியினையும் உள்ளூரில் வாழும் உறவுகளினதும் வாழ்வியலை மேம்படுத்தும் நோக்கில் நெடுந்தீவில் எதிர்வரும் ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 10 வரை நெடுவூர்த் திருவிழா நடைபெறவுள்ளது.…

பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை

முதன்முறையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு வெற்றிகரமாக பொருத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் இஜெனிசிஸ் என்ற மருந்து நிறுவனத்திடம்…

ரஷ்ய தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை : வெளிவிவகார அமைச்சு தகவல்

ரஷ்யாவின் மொஸ்கோவில் உள்ள திரையரங்கில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ரஸ்யாவில் மொஸ்கோவிலுள்ள திரையரங்கில் நேற்றைய தினம்(22) நடைபெற்ற இசை…

சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள தினேஷ் குணவர்த்தன

சீனாவுக்கான விஜயம் ஒன்றை பிரதமர் தினேஷ் குணவர்த்தன மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த நாட்டுப் பிரதமரின் அழைப்பின் பேரிலேயே எதிர்வரும் 25ஆம் திகதி (25.03.2024) முதல்…

யாழ்ப்பாணம் – நல்லூர் சட்டநாதர் கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா

யாழ்ப்பாணம் - நல்லூர் சட்டநாதர் கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் நடைபெற்றது.

நீல் ஆம்ஸ்ட்ராங் தடம் பதித்த இடத்தை கண்டுபிடித்த சந்திரயான்-2! இஸ்ரோ பெருமிதம்

நிலவில் முதன்முதலாக தரையிறங்கிய நீல் ஆம்ஸ்ட்ரோங் இன் கால்தடத்தினை சந்திரயான்-2 இன் ஆர்பிட்டர் கருவி படம் பிடித்து அனுப்பியுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி நிலவில் என்ன…

கேஜரிவால் கைது: பத்தாண்டு கால ஆம் ஆத்மி-பாஜக மோதலின் உச்சக்கட்டம்!

அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கும், மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் இடையேயான பத்தாண்டு காலப் போட்டியானது, கலால் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் தில்லி முதல்வா் கேஜரிவாலை அமலாக்கத் துறை கைது செய்ததன் மூலம் உச்சக்கட்டத்தை…

ஆப்பிள் நிறுவனம் மீது அதிரடி வழக்கு தொடர்ந்த அமெரிக்கா

ஐபோன் வாடிக்கையாளர்கள் ஆண்டிராய்டு செல்போன்களுக்கு மாறுவதை கடினமாக்கியதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக அந்நிறுவனம் மீது அமெரிக்க அரசாங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. ஐபோனில் இருந்து ஆண்டிராய்டு போன்களுக்கு…

தாய்ப்பால் புரைக்கேறியதில் 28 நாட்களேயான சிசு மரணம்

தாய்ப்பால் புரைக்கேறியதில் பிறந்து 28 நாட்களேயான சிசு ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளது. கொக்குவில் மேற்கைச் சேர்ந்த சசிகுமார் பிரதீபா என்ற பெண் சிசு உயிரிழந்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (22) தாயார் சிசுவுக்கு பாலூட்டிக்…

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் புதிய கட்டடத்தை திறந்து வைத்த அதிபர் ரணில்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான புதிய கட்டடம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று (22) திறந்து வைக்கப்பட்டது. நெதர்லாந்து அரசின் மென்கடன் திட்டத்தின் கீழ் சுமார் 4000 மில்லியன் ரூபா…

வடக்கு தமிழ் மக்களின் வாக்குகள் சஜித்துக்கே!.. ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கே வடக்கு மாகாண தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,…

கனடாவில் குடியேறுவோருக்கான முக்கிய அறிவுறுத்தல்

கனடாவில் குடியேறும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய அட்லாண்டிக் பேரவை குடியேறிகள் தொடர்பில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. கனடாவிற்குள் குடியேறும் குறிப்பிடத்தக்க…

பேருந்தில் சென்ற பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கதி : சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சேவை

மாவத்தகம பிரதேசத்தில் பேருந்தில் 13 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படத்திய 39 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கங்கொடபிட்டிய பகுதியை சேர்ந்த கடற்படை வீரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல்…

கனடா செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு; வெளியேறும் பலர்!

கனடாவிற்குள் குடியேறும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பிரஜைகளினால் வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என கனடிய அட்லாண்டிக் பேரவை குடியேறிகள் தொடர்பில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. கனடாவில் குடியேறும்…

விருதுநகரில் ராதிகா சரத்குமாருக்கு எதிராக களமிறங்கும் விஜயகாந்தின் மகன்

மக்களவை தேர்தலில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பிடித்துள்ளது. தேமுதிகவிற்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சை,…

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள பாராட்டு

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கையால் நடைமுறைபடுத்தப்பட்ட திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது. வட்டியும் குறைக்கப்படும் இதேவேளை இந்தியா மற்றும் பெரிஸ் கிளப்…

ஒரே நாளில் உக்ரைனை இருளாக்கிய ரஷ்யா!

ரஷ்யா மீண்டும் மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை முன்னெடுத்து உக்ரைனின் பெரும்பகுதியை இருளில் மூழ்கடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிராக போர் தொடங்கியதில் இருந்து பின்னர், இதுவரை ரஷ்யா முன்னெடுத்த தாக்குதல்களில் இந்தத்…

இலங்கை முதியவர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்

இலங்கையில் 12 வீதமான முதியோர் தமது அனைத்து பற்களையும் இழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார். உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.…

வடமராட்சி கிழக்கு கடலில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 9 பேர் கைது

யாழ்ப்பாணம் - வெற்றிலைக்கேணி கடற்பகுதிகளில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட ஒன்பது பேரை கடற்படையினர் கைது செய்ததுடன் மூன்று டிங்கிபடகுகளையும் கைப்பற்றியுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (22.03.2024) இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத…

இலங்கையில் மக்களிடையே பரவி வரும் ஒரு வகையான கொடிய நோய்… வைத்தியர் எச்சரிக்கை!

நாட்டில் உள்ள மக்களிடையே டினியா எனப்படும் ஒரு வகையான தோல் நோய் பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது நாட்டில் நிலவும் அதிகமான வெப்பநிலைக் காரணமாக குறித்த தோல் நோய் ஏற்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தோல்…

டொலர் பெறுமதி குறைவடைய என்ன காரணம்?

டொலரின் பெறுமதி தொடர்ச்சியாக குறைவடைந்து ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வருவதை காண முடிகிறது. 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது டொலரின் பெறுமதி பாரிய அளவில் எகிறியது. 2022ஆம் ஆண்டு 200 ரூபா என்றவகையில் காணப்பட்ட…

கோண்டாவில் இராமகிருஷ்ணா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச நீர்தினம்.

வருடாவருடம் மார்ச் 22 ஆம் திகதி சர்வதேச நீர்தினம் உலகம் பூராகவும் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் மாணவர் மத்தியில் அமைதிக்கான நீர் என்ற கருப்பொருளுக்கு அமைவாக நீரின் முக்கியத்துவத்தையும், நீரைப் பேணல் முறைகளை அறிந்துகொள்ளும் வகையில்…

தற்காலிக குடியிருப்பு: கனேடிய அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு

லம்பெயர்தலைக் கட்டுப்படுத்த தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்துவரும் கனடா தனது வரலாற்றில் முதல்முறையாக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. கனடாவில் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களின்…

மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கிவைப்பு

மத்திய மாகாணத்தில் பல காலமாக இழுபறியில் இருந்த 136 உதவி ஆசிரியர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற…

தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை!

ஹட்டனில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (25-03-2024) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஹட்டன் வலயக் கல்வி பணிப்பாளர் வெளியிட்டுள்ளார். ஹட்டனில் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய மகா…

யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளி எடுத்த திடீர் முடிவு! பரிதாபமாக உயிரிழந்த சோகம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர் தீடிரென வெளியேறிய நிலையில் விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் தலையாழி பகுதியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் தினேஷ் என்ற 44 வயதானவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்…

அமேசான் மலைக்காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய நதி டால்பின் மண்டை ஓடு!

அமேசான் மலைகாட்டில் மிகப்பெரிய நதி டால்பின் மண்டை ஓட்டை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் கண்டுபிடிக்கப்பட்ட நதி டால்பின் மண்டை ஓட்டை 16 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருவின் அமேசான் நதிகளில் தஞ்சமடைந்ததாகக்…

அதிகரிக்கும் வெப்பம் : ஐ.நா விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

அண்மைக்காலமாக வெப்பநிலை அதிகரித்துச் செல்லும் நிலையில் இந்தவருடத்திலும் வெப்பநிலை அதிகமாக இருக்குமென ஐ.நா தெரிவித்துள்ளது. இதன்படி ஐநாவின் காலநிலை மாற்ற நிறுவனம் வெப்பநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. புவியின் சராசரி…

உலகில் ஏற்படவுள்ள மிக அரிய சூரிய கிரகணம்…!

உலகின் சில பகுதிகளில் அடுத்த மாதம் 8 ஆம் திகதி முழு சூரிய கிரகணம் தென்படவுள்ளது. இது ஒரு அரிய கிரகண நிகழ்வென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த அரிய நிகழ்வானது கனடா, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் வட அமெரிக்கா ஆகிய பகுதிகளில் நிகழவுள்ளது.…

Deepfake வீடியோ விவகாரம்: 1 லட்சம் டொலர் இழப்பீடு கேட்டு இத்தாலி பிரதமர் வழக்கு!

Deepfake வீடியோ வெளியிட்டவர்களுக்கு எதிராக இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு தொடர்ந்த இத்தாலி பிரதமர் 47 வயதாகும் ஜியார்ஜியா மெலோனி இத்தாலியின் முதல் பெண் பிரதமராவார். கடந்த 2022ம் ஆண்டு ஜியார்ஜியா மெலோனி…