;
Athirady Tamil News
Monthly Archives

March 2024

வெடுக்குநாறிமலையில் காவல்துறையினரின் அடாவடி : கடுமையாக சாடிய டக்ளஸ்

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவிலில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் அடாவடித்தனம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிகாட்டியுள்ளார். குறித்த தகவலை அவர் இன்று(09) காலை…

நீரில் மூழ்கி ஒரு குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு

இரண்டு பிரதேசங்களில் நீரில் மூழ்கி ஒரு குழந்தை உட்பட மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்திவேல் சித்தாண்டி பகுதியில் சந்தனமடு ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் சித்தாண்டி 2…

குண்டுவெடிப்பு நடந்த பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே 8 நாட்களுக்குப் பிறகு இன்று திறப்பு

குண்டுவெடிப்புக்குள்ளான பெங்களூரு ராமேஸ்வரம் உணவகம் 8 நாட்களுக்குப் பிறகு சனிக்கிழமை(மார்ச்.9) திறக்கப்பட்டது. உணவத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு, குந்தலஹள்ளி பகுதியில் உள்ள பிரபலமான ராமேஸ்வரம் உணவகத்தில்…

ரணில் மற்றும் சஜித்தை இணைக்க இரு தூதரகங்கள் முனைப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருடன் இணைப்பதில், இரண்டு பிரதான தூதரகங்கள் செயல்பட்டு வருவுதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டம் குறிப்பிடத்தக்க அளவில்…

வெடுக்குநாறிமலை விவகாரம்- இனவெறியின் உச்சம்: சீமான் அதிரடி

“வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேசுவரர் ஆலயத்தில் வழிபட்ட தமிழர்கள் மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்தி கைது செய்துள்ளது இனவெறியின் உச்சம்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். வெடுக்குநாறிமலை சம்பவம்…

பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறலாம்: எச்சரிக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து

ரஷ்ய-உக்ரைன் போர் பின்னணியில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பிரிட்டனின் வெளியுறவுத் துறை அலுவலகம், அந்நாட்டில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்களுக்கும், அங்கு செல்ல விரும்புபவர்களுக்கும் எச்சரிக்கை வெளியிட்டுள்ளன. இரு…

காசாவிற்கு உதவும் அமெரிக்க இராணுவம்

அமெரிக்க இராணுவம் கடந்த வெள்ளிக்கிழமை காசாவில் நான்காவது வான்வழி தாக்குதலை மேற்கொண்டது. ஒரு அமெரிக்க அதிகாரி ராய்ட்டர்ஸிடம் கூறினார், கூட்ட நெரிசலான கடலோரப் பகுதியில் மனிதாபிமான பேரழிவு வெளிவருகிறது. அமெரிக்காவின் ஆதரவுடன் காசாவில்…

மகளிர் தினத்தில் போதைப்பொருள் விருந்து: 27 பேர் கைது

பிறந்தநாள் விழாவில் போதைபொருள் பாவித்த குற்றச்சாட்டில் இருபத்தேழு பேரை கஹதுடுவ காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பல்கலைக்கழக மாணவி ஒருவரின் பிறந்தநாள் விழாவிற்கு முகநூல் ஊடாக அழைக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவிகள் ஐவர் உட்பட இருபத்தேழு பேரே…

72 பணக்கார நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை : சந்திரிக்கா வெளியிட்ட ஆச்சரிய தகவல்

சிறிலங்காவின் அதிபராக தான் பணியாற்றிய காலத்தில், உலகின் 72 பணக்கார நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பிடித்திருந்ததாக முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். தனது 11 வருட ஆட்சி காலம் இலங்கையின் மிக செழிப்பான காலமாக…

92 வயதில் 5வது திருமணத்திற்கு தயாராகும் பிரபல தொழிலதிபர்!

அமெரிக்க செய்தி ஊடகங்களின் உரிமையாளராக இருந்த 92 வயதான ரூபர்ட் முர்டோக் தனது உலகளாவிய ஊடக கட்டுப்பாட்டை கடந்த ஆண்டு நவம்பரில் தனது மகன் லாச்லனிடம் ஒப்படைத்துள்ளார். இந்த நிலையில், ரூபர்ட் முர்டோக் தனது நீண்ட நாள் காதலியான 67 வயதான எலெனா…

பட்டினியால் உயரிழக்கும் காசா மக்கள்: பைடன் விடுத்த உத்தரவு

காசாவுக்கு நிவாரணப்பொருட்களை கொண்டு செல்வதற்காக அதன் கடலோரப் பகுதியில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கு தனது இராணுவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். காசாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் இஸ்ரேல் ஹமாஸ் போரினால்…

அரசுக்கு வருமான இழப்பு : சிறிலங்கா இராணுவத்தினர் இருவர் அதிரடியாக கைது

அரசாங்கத்திற்கு வரி வருமான இழப்பை ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமாக பதின்மூவாயிரத்து ஐநூறு சிகரெட்டுகளை எடுத்துச் சென்ற சிறிலங்கா இராணுவ வீரர்கள் இருவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

கனடாவில் கொல்லப்பட்ட இலங்கையர்கள்; ஆபத்தை முன்பே அறிந்திருந்த மனைவி ; வெளிவரும் புதிய…

கனடாவின் ஒட்டாவாவில் வசித்த இலங்கை குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்தேகநபரான இலங்கையை சேர்ந்த 19 வயதுடைய பேப்ரியோ டி…

சத்திரசிகிச்சைக்கு நிதியுதவி வழங்கியது அல் அமானா நற்பணி மன்றம்!

சாய்ந்தமருது அல் அமானா நற்பணி மன்றத்தினால் சத்திரசிகிச்சைக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வும், மன்றத்தின் ஒன்றுகூடலும், ஊடக சந்திப்பும் அமைப்பின் தலைவர் ஏ.எல்.ஏ. பரீட் ஹாஜி அவர்களது தலைமையில் சாய்ந்தமருது பிரதான வீதியிலுள்ள அமைப்பின்…

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற “மகளிர் தின நிகழ்வு”

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நிந்தவூர் ஆதார வைத்தியசாலை (08) பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.பி.அப்துல் வாஜித் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் குறித்த நிகழ்வு…

தலைநகரில் பரபரப்பு; தொழுகையில் ஈடுப்பட்டவர்களை எட்டி உதைத்த போலீசார்- சஸ்பெண்ட் உத்தரவு!

சாலையோரமாக தொழுகையில் ஈடுப்பட்ட இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகரில் பரபரப்பு டெல்லி, இண்டர்லாக் பகுதியில் உள்ள மசூதியில் இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தோறும்…

விளம்பரத்தில் பாலின சமநிலை: அசோக் லேலண்ட் புதுமை

மகளிா் தினத்தை முன்னிட்டு தனது புதிய விளம்பரங்கள் மூலம் பாலின சமநிலையை ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் புதுமையான முறையில் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட குடும்பம்: தேரர் வெளியிட்ட பகீர் தகவல்

கனடாவில் ஒட்டோவா நகரில் படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினர் கொலை சம்பவம் தொடர்பில் கைதான பெர்பியோ டி சொய்சாவின் பிறந்த நாளை அண்மையில் கொண்டாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்தேகநபரின் பிறந்த நாள் கொணடாட்டமானது, கொலை சம்பவம்…

சிமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தியால் பலியான தந்தை மற்றும் மகன்

கோர விபத்தில் சிக்கி தந்தை மற்றும் மகன் ஸ்தலத்தில் பலியான துயரம் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு ஹைலெவல் வீதியின் கொஸ்கம மிரிஸ்வத்த பகுதியில் நேற்று (08) இரவு இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொஸ்கம, அலுபோடல பிரதேசத்தில்…

தென்னிலங்கையில் பரபரப்பு ; காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு

காணாமல் போனதாகக் கூறப்படும் கரந்தெனிய, தல்கஹாவத்தை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சடலம் எல்பிட்டிய - தலாவ பிரதேசத்தில் காணி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…

வலி. வடக்கில் நாளை 67 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 67 ஏக்கர் காணி நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டவுள்ளது. காங்கேசன்துறை மத்தி, காங்கேசன்துறை தெற்கு…

வடக்கின் சமர்

யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை (09) மதிய போசன இடைவேளைக்கு சற்று பின்னர் நிறைவுக்கு வந்த சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ். மத்திய கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான 117ஆவது வடக்கின் சமரில் 10 விக்கெட்களால் சென். ஜோன்ஸ் இலகுவாக…

துருக்கிய படைகள் ஈராக்கில் நடத்திய திடீர் தாக்குதல்

துருக்கிய படைகள் ஈராக்கில் மேற்கொண்ட தாக்குதலில் பொதுமக்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். துருக்கிய அரசுக்கு எதிராக 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்ற குர்தீஸ் தொழிலாளர்கள் கட்சி (பிகேகே) கிளர்ச்சி படைக்கு எதிராக இந்த தாக்குதல்…

அதாஉல்லா எம்.பியுடன் ஈஸ்டன் கிங்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் விசேட சந்திப்பு

தேசிய காங்கிரஸின் தலைவரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவை (எம்.பி) அட்டாளைச்சேனை ஈஸ்டன் கிங்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் சந்தித்து பிரதேச அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினர்.…

வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி மீண்டும் போட்டி – காங்கிரஸ் முதல்கட்ட பட்டியல் வெளியீடு!

39 தொகுதிகளில் கேரளாவில் மட்டும் 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறை ஆட்சியை பிடிக்கும் நோக்கில் தேசிய அளவில் கூட்டணியை உருவாக்கியுள்ளது. அதேவேளையில், தேசிய…

சீனாவுடனான மோதல்: பகிரங்கமாக பேசிய ஜோ பைடன்

சீனாவுடன் அமெரிக்கா போட்டியை விரும்புகிறது,மோதலை அல்ல என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சீனாவின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, சீனாவுக்கு எதிரான போட்டியில்…

மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பேலியகொடை மற்றும் மெனிங் சந்தையில் இன்றைய தினம் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. சில வாரங்களுக்கு முன் 2000 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒரு கிலோகிராம் கரட் இன்று 200 ரூபாவாக விற்பனையாகின்றது. மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி…

ஜனாதிபதி ரணில் தொடர்பில் வெளியாகவுள்ள நூல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ‘அறகலய’ பாரியளவிலான எதிர்ப்பிற்குப் பின்னர் இலங்கையின் ஜனாதிபதியானார் என்பது தொடர்பான நூல் ஒன்றை விரைவில் வெளியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர…

திருக்கேதீஸ்வரம் சென்றவர்களுக்கு இடைநடுவில் காத்திருந்த அதிர்ச்சி!

யாழ் - மன்னார் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பற்றியதால் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் அதில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக தப்பியுள்ளனர். குறித்த சம்பவம் வெள்ளிக்கிழமை (8) மாலை யாழ் மன்னார் பிரதான வீதி பள்ளமடு…

பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் புதிய சட்டம்

பொலிஸ் மா அதிபர் பதவிக் காலத்தை நிர்ணயிக்க புதிய சட்டம் அறிமுகம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் மா அதிபர் பதவியை வகிப்பவர்கள் குறிப்பிட்ட ஒர் கால வரையறை வரையில் மட்டும் அந்தப் பதவியில்…

அதிகரிக்கும் பதற்றம்: போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள வடகொரியா

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டு இராணுவத்தின் போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவும், தென் கொரியாவும் ஆயிரக்கணக்கான துருப்புகளுடன் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த…

சூழ்ச்சிகளாலேயே கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் வீழ்த்தப்பட்டது: நாமல் ராஜபக்ச

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் வீழ்த்தப்பட்டதற்கு தேசிய மற்றும் சர்வதேசத்தின் சூழ்ச்சிகளே காரணமென பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று முன்தினம் 07 இடம்பெற்ற…

புதருக்குள் மறைந்திருந்த பெண்கள்.. விசாரித்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

டெல்லி எல்லைக்கு அருகே உள்ள இந்திராபுரம் காஜியாபாத்தில் உத்தரபிரதேச போலீசார் அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இரண்டு வெளிநாட்டு பெண்கள் நின்று கொண்டிருந்ததை கவனித்தனர். அதிகாலை நேரத்தில் கொள்ளையர்கள் அதிகமாக…

உணவகத்திற்கு சீல்

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு, 73 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ள நீதிமன்று , குறித்த உணவகத்தையும் சீல் பண்ணுமாறு உத்தரவிட்டுள்ளது. சண்டிலிப்பாய் பகுதியில் பொது சுகாதார பரிசோதகரான…